கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, July 19, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே!

நெஞ்சு பொறுக்குதில்லையே!இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில்லை. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹாசினி என்னும் குழந்தை ஒரு  அரக்கனால் அநியாயமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இப்போது ஒரு பதினோரு  வயது குழந்தை அதுவும் காது கேளாத  வாய் பேச முடியாத குழந்தை, இருபத்திரெண்டு மிருகங்களால் இல்லை அப்படி கூறி மிருகங்களை அவமதிக்க நான் விரும்பவில்லை. இருபத்திரெண்டு பேர்களால் ஆறு 
மாதங்களாக போதை மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை கொடுத்தும், மிரட்டியும், வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டு அதை வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். அதை காட்டியே மிரட்டியிருக்கிறார்கள். 

என்ன நடக்கிறது  இங்கே? ஒரு பெண்ணுக்கு பிறந்து, பெண்ணோடு வாழ்ந்து, பெண்ணைப்பெற்றும் பெண்களை போகப் பொருளாகத்தான்  நினைக்க முடிகிறது என்றால் எங்கே கோளாறு? 

பழங்காலம் மாதிரி இம்மாதிரி பாதகங்களை செய்தால் இறந்தபிறகு நரகத்தில் எம கிங்கரர்கள் எண்ணெய் சட்டியில் போட்டு வறுப்பார்கள் என்றால் ஒரு வேளை பயந்து இம்மாதிரி பாதகங்களை செய்யாமல் இருப்பார்களோ?

ஒரு இளம் பெண் நகைகளை அணிந்து கொண்டு  நடு இரவில் தனியாக  நடந்து செல்ல முடிகிற பொழுதுதான் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கூற முடியும் என்று மஹாத்மா கூறினார். ஆனால் இன்று பெண்களுக்கு தெருவில், பள்ளியில், ரயில் நிலையங்களில், ஏன் வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை. 

இந்த சம்பவத்தில் ஒரே ஒரு ஆறுதல் வழக்கறிஞர்கள் இந்த குற்றவாளிகளுக்காக ஜாமீன் மனு போட மாட்டோம் என்று அறிவித்திருப்பதுதான். வழக்கு இழுத்துக் கொண்டே போகாமல் சீக்கிரம் விசாரணை முடிந்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

14 comments:

 1. சில வழக்கறிஞர்கள் இவர்களை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கி இருக்கிறார்கள். ஜாமீன் மனு போடமாட்டார்கள் என்பது மகிழ்ச்சி. இனி மனித உரிமை கஷகம் தலையிடாமல் இருக்க பிரார்த்திக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. //மனித உரிமை கஷகம் தலையிடாமல் இருக்க பிரார்த்திக்க வேண்டும்.//

   அதேதான்.

   Delete
 2. சிந்திப்போம் செயலாற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. அடுக்குமாடி குடியிருப்புகளின் அஸோஸியேஷன்கள் சிசி காமிராக்கள் ஒழுங்காக இயங்குகிறதா என்றும், அவ்வப்பொழுது அவைகளின் பியூட்டேஜ்களை கண்காணித்தால் இந்த மாதிரி அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

   Delete
 3. சில சம்பவங்கள் பொது வெளியில் அதிகம்பேசப்படுகிறது என்ன செய்ய பேசத்தானே முடியும்

  ReplyDelete
  Replies
  1. பல விஷயங்களை பேசிப் பேசித்தான் மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஜாதி வேற்றுமை, வரதட்சினை கொடுமை போன்றவை ஊடங்களில் பெரிதும் பேசியே குறைக்கப்பட்டன.

   Delete
 4. அந்தக் குழந்தைக்கு ஆறுதலும் தேறுதலும் தேவை..
  உடல் நலமும் மனநலமும் பெற்று
  நல்லபடியாக வளர்ந்திட வேண்டிக் கொள்வோம்..

  ReplyDelete
  Replies
  1. அந்த குழந்தை மட்டுமல்ல அதன் பெற்றோர்களுக்கும் ஆறுதலும்,தைரியமும் தேவை. அவர்களுடைய உறவினர்களும்,நண்பர்களும்தான் இதைச் செய்ய முடியும்.

   Delete
 5. மனித மிருகங்கள் ...வேறு என்ன சொல்ல

  ReplyDelete
  Replies
  1. மிருகங்கள் எதுவும் வன்புணர்ச்சி செய்வதாக தெரியவில்லை அனு. இவர்கள் அரக்கர்கள்.

   Delete
 6. என்னவோ ஒண்ணும் புரியத் தான் இல்லை. குழந்தையின் அம்மாவுக்குப் பெண் பள்ளியிலிருந்து தாமதமாய் வந்ததற்கான காரணத்தைத் தேடக் கூடப் பொழுதில்லை! :( என்ன தான் லிஃப்டில் போனாலும் கூடவே போய்க் கொண்டு விட்டு விட்டு வர வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பழிபோடக்கூடாது, என்றாலும்,காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை என்பதால் அந்த தாய் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருக்கலாம்.

   Delete
 7. சமுகத்தில் உள்ள ஒழுக்கமின்மையும் பொறுப்பின்மையும்தான் இதற்கு காரணமாக சொல்ல முடியும்...

  ReplyDelete
 8. தனிப்பட்ட முறையில் நாம் பாதிக்கப்படும்வரை பொது நலத்தில் அக்கறை காட்ட மாட்டோம் என்பது நம்முடைய மிகப் பெரிய பலவீனம்.பெரும்பான்மையான குடும்பங்களில் இன்னும் கூட பெண்களை மதிக்காத நிலை நிலவுகிறது. அப்படிப்பட்ட சூழலில் வளரும் ஆண் பெண்களை எப்படி மதிப்பான்?

  ReplyDelete