கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 21, 2018

தலை வாழை இலை போட்டு...

தலை வாழை இலை போட்டு...



ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். 

எங்கள் தாய் வழி பாட்டி இலையைப் பார்த்து அதாவது ஒருவர் சாப்பிடுவதை கவனித்து பரிமாற வேண்டும் என்பார். சமைப்பதை பரிமாறும் பொழுதுதான் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பு, வெறுப்பு தெரிய வரும். எங்கள் தாத்தாவிற்கு ரசத்தில் தக்காளி போட்டால் பிடிக்காதாம். அதனால் தக்காளி ரசம் வைத்தாலும் அவருக்கு பரிமாறும் பொழுது தக்காளி இலையில் விழாமல் கவனமாக பரிமாறுவாராம். அதே போல தாத்தாவிற்கு மணல் மணலாக உறைந்திருக்கும் நெய்யை விழுதாக இலையின் ஓரத்தில்தான் போட வேண்டுமாம். ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஊறுகாய் பரிமாறிவிட வேண்டும் என்பார்.

ஊறுகாய்கள் கூட சிலருக்கு விழுதாக வேண்டும், சிலருக்கு காய் வேண்டும். குறிப்பாக, மாகாளி கிழங்கில் சிலர் அதன் தண்ணீர் மட்டும் வீட்டுக் கொள்வார்கள். சிலருக்கு கிழக்கு மட்டும் வேண்டும். இதெல்லாம் நாம் பரிமாறினால்தான் தெரியும். 

நாங்கள் மஸ்கட்டில் இருந்த பொழுது என் அம்மா ஒரு முறை அங்கு வந்திருந்தார்  அப்பொழுது, என் அண்ணாவின் (அண்ணாவும் மஸ்கட்டில்தான் இருந்தார்) சிநேகிதர் ஒருவர் சாப்பிட வந்திருந்தார். அவருக்கு மாகாளி கிழங்கு பரிமாறும் பொழுது," எனக்கு தண்ணீர் வேண்டாம், கிழங்கு மட்டும் போடுங்கள்" என்று என் அம்மாவிடம் கூறினார். அதன்படி செய்த என் அம்மா, அவர் மீண்டும் ஒரு முறை சாப்பிட வந்த பொழுது, அவர் சொல்லாமலேயே அவருக்கு மாகாளி கிழங்கு மட்டும் பரிமாறியதை மிகவும் வியந்து பாராட்டினார். ஏனென்றால் அவருக்கு சாப்பாட்டு விஷயத்தில் விருப்பு,வெறுப்பு மிகவும் அதிகம். 

பரிமாறுவதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. சாதாரணமாக நுனி இலையில் வலது கை ஓரத்தில் பாயசம் பரிமாறிவிட்டு, அதற்கு நேர் எதிரே பச்சடி, பின்னர் கூட்டு, கறி, என்று வரிசையாக பரிமாறி, இடது ஓரத்தில் ஊறுகாய், பப்படம் போன்றவைகளை பரிமாற வேண்டும். புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற  கலந்த சாதங்களையும் இலையின் மேற்புறத்தில்தான் பரிமாறுவார்கள்.  பருப்பை மேல் புறத்தில் வைக்க வேண்டுமா, கீழ் புறத்தில் வைக்க வேண்டுமா என்பது பலர் குழப்பிக் கொள்ளும் விஷயம். 

விஜயவாடாவில் வசித்து வந்த என் மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷத்திற்காக சென்றிருந்த நான் சாதம் போட்டவுடன் சாம்பாரை ஊற்றப் போனேன், உடனே அங்கிருந்த ஒருவர்,"இது தமிழ் நாடு இல்லை, ஆந்திரா, இங்கு பப்பு சாதம் சாப்பிட பிறகுதான் சாம்பார் சாதம் சாப்பிடுவோம்" என்றார். ஆந்திர ஹோட்டல்களில் கூட பருப்பு பொடி, துவையல் இல்லாமல் இருக்காது. 

தமிழ் நாட்டில் இனிப்போடுதான் விருந்தினை பரிமாற ஆரம்பிக்கிறோம், ஆனால் கர்நாடகாவில் முதலில் உப்பு வைத்து விட்டுதான் மற்ற பண்டங்களை பரிமாறுவார்கள். காரணம், உப்பிட்டவரை மறக்கக்கூடாது என்னும் கோட்பாடு.

தமிழ் நாட்டு அந்தணர்களில் வைணவர்களில் வடகலை, தென்கலை என்று இரு பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவினர் எல்லோரையும் போல முதலில் வெஞ்சனங்களை பரிமாறி கடைசியில் சாதம் வைப்பார்கள், மற்றொரு பிரிவினர் முதலில் ஒரு வாழைப்பழ துண்டம், சர்க்கரை பரிமாறி விட்டு, சாதத்தை வைத்து விடுவார்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்றவை வரும். 

பாலக்காட்டில் பிராமணர்கள் திருமணங்களில் முன்பெல்லாம் பாயசம் பரிமாறத் தொடங்கும் பொழுது யாராவது பாட ஆரம்பிப்பார்களாம், பாட்டு முடியும்வரை பாயசம்தான் பரிமாறிக் கொண்டிருப்பார்களாம். அவர் பாடி முடித்ததும் இன்னொருவர் பாட ஆரம்பித்து விட்டால், மீண்டும் பாயசம்தான்...   

பரிமாறும் பொழுது, பாத்திரத்திலிருந்து வழித்து போடக்கூடாது, கொஞ்சமாக இருந்தால் கூட கரண்டி சப்தம் வரக்கூடாது என்பதை எங்கள் வீட்டில் வலியுறுத்தி சொல்வார்கள். ஏனென்றால், அப்படி சப்தம் வந்தால் சாப்பிடுகிறவர்கள் குறைவாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுவார்கள் என்பார்கள். குறிப்பாக திவசம் போன்ற நாட்களில் பித்துருக்களாக வரித்திருக்கும் பிராமணர்களுக்கு பரிமாறும் பொழுது, கொஞ்சம் கூட ஒலி எழும்பக் கூடாது என்பார்கள். ஏனென்றால், பித்ருக்கள் மிகவும் நுண்ணியமானவர்களாம், சிறு சப்தம் எழுப்பினால் கூட அதிர்ந்து, அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவார்களாம்.

இனிப்போடு துவங்குவது நம் நாட்டுப் பழக்கம் என்றால், டெஸெர்ட் என்று இனிப்போடு விருந்தை முடிப்பது மேலை நாட்டு பழக்கம். 

நம் நாட்டில் விருந்து பரிமாறுவதற்கு ஒரு முறை இருப்பது போல, மேல் நாட்டிலும் விருந்து பரிமாறுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அவர்கள் சூப்பில் துவங்கி, ஸ்டார்ட்டர், பிரதான உணவு, என்று தொடர்ந்து, டெஸெர்ட்(ஐஸ் க்ரீம், அல்லது புட்டிங் அல்லது கஸ்ட்டர்ட்) என்று முடிப்பார்கள். நாம் சாப்பாட்டிற்க்கு பிறகு தாம்பூலம் போட்டுக் கொள்வது போல் அவர்கள் ப்ளாக் டீ அல்லது ப்ளாக்காபி அருந்துவார்கள். 

இப்போது நம் ஊரில் திருமணம் போன்ற விருந்துகளில், நம் நாட்டு முறையில் இனிப்போடு ஆரம்பித்து, மேல் நாட்டுப்பாணியில் ஐஸ் க்ரீமோடு முடிக்கிறோம்.  


71 comments:

  1. பாலக்காட்டில் சாப்பிடும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கு! "அந்த யாரோ ஒருவர்" பாட ஆரம்பிக்கும்போது சட்டென அவர் வாயில் நாம் கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தைத் திணித்து விடவேண்டும்! அவர் எப்போது முடித்து எப்பபோது அடுத்த ஐட்டம் வந்து.. எப்போது நாம் கைகழுவ எழுவது!!!!

    சும்மா... தமாஷுக்கு!

    ReplyDelete
    Replies
    1. நான் என்னடாவென்றால், அருமையான மெதடாக இருக்கிறதே என்று நினைக்கிறேன் (இனிப்பு என்பதால்). அதைக் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.

      Delete
    2. சாதாரணமாகவே பாலக்காட்டுகாரர்கள் இனிப்பு விரும்பிகள். அவர்கள் செய்யும் பால் பாயசம் ஸ்பெஷல். சிலர் பால் பாயசத்தை பரிமாறிவிட்டு அதில் வாழைப்பழத்தையும் போட்டு, தேனையும் விடுவார்கள்.

      Delete
    3. //நான் என்னடாவென்றால், அருமையான மெதடாக இருக்கிறதே என்று நினைக்கிறேன் (இனிப்பு என்பதால்).//

      திகட்டி விடும் நெல்லை!

      Delete
    4. எனக்கும் ஸ்வீட் பிடிக்கும் தான் ஆனால் திகட்டிடுமே....இந்த முறை நானும் கேள்விப்பட்டுள்ளேன் பானுக்கா ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது! பிழைத்தோம்..ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  2. ரசத்தையே சிலர் தெளிவாக விடவேண்டும் என்பார்கள் (நானும்) சிலர் கலக்கி விட வேண்டும் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசம் பொதுவாக ஒத்தாற்போல் பண்ண வேண்டும். அதுக்குப் பருப்பு ஜலத்தை விட்டுத் தான் விளாவ வேண்டும். வெந்த பருப்பைக் கலக்கக் கூடாது. இப்படி ரசம் வைச்சிருந்தால் அதை ஒரு கலக்குக் கலக்கிட்டு அப்படியே எடுத்து விட்டாலும் பிரச்னை இல்லை. இல்லை எனில் மேலாகக் கலக்கிட்டுத் தெளிவாய் எடுத்துப் பரிமாறச் சொல்வாங்க!

      Delete
    2. எங்க வீட்டில் முக்கியமாய் மதுரைப்பக்கம் சாம்பார்ப் பொடி என்றே பண்ண மாட்டோம். ரசப்பொடி தான்! ரசம் தெளிவாகவே இருக்கும். அடியில் தங்கவே தங்காது. நன்றாய்க் கலக்கினாலும் தெளிவு ரசமாகவே வரும்! துவரம்பருப்பு, மிளகு சேர்ப்பதைப் பொறுத்து ரசம் அமையும்.

      Delete
    3. எனக்கு ரசத்தை கலக்கி விட்டால்தான் பிடிக்கும். இதைப்பற்றி லா.ச.ரா. ஒரு ரசமான விஷயம் எழுதியிருப்பார். அவர் பெங்களூரில் கொஞ்ச நாள் இருந்தாராம். அப்போது ஓட்டல்களில் ரசத்தை தெளிவாக விடுவதா? கலக்கி விட வேண்டுமா என்று தினமும் கேட்பார்களாம். தினசரி கேட்கிறார்களே என்றுஒரு நாள் கலக்கி விடச் சொன்னாராம். அப்போதுதான் புரிந்ததாம் அதன் அருமை! அதன் பிறகு ரசத்தை தெளிவாக ஊற்றிக்கொண்டு ஒரு முறையும் கலக்கி ஊற்றிக் கொண்டு ஒரு முறையும் சாப்பிடுவாராம்.

      Delete
    4. //அதன் பிறகு ரசத்தை தெளிவாக ஊற்றிக்கொண்டு ஒரு முறையும் கலக்கி ஊற்றிக் கொண்டு ஒரு முறையும் சாப்பிடுவாராம்.//

      அந்த ஊர்ப்பக்கம் ரசத்தின் நிறமே பயமுறுத்துவது போல இருக்குமே!

      :))

      Delete
    5. ஆமாம் எங்கள் வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அப்படியே சிலருக்குத் தெளிவு சிலருக்கு மண்டி...அது யாருக்கென்று எல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.

      பிறந்த வீட்டில் ரசம் தெளிவாகவே இருக்கும் கலக்கினாலும் கூட...எனக்கு எல்லாமும் பழகிவிட்டது. நோ சாய்ஸ்!! எப்படினாலும் ஓகே....ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  3. வடகலை தென்கலையை விடுங்கள். வைணவர்களுக்கு சைவர்களுக்கு உள்ள வித்தியாசமும் அதுதான். காய் பரிமாறி பின்னர் சாதம் பரிமாறுவது சைவர்கள். எடுத்த உடனே சாதம் பரிமாறுவது வைணவர் சம்ப்ரதாயம். இரண்டுமே இரண்டு பேருமே மாற்றி வேறொரு நாளில் செய்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இதில் சந்தேகம் இருக்கு. பொதுவா வீட்டில் பரிமாறும்போது (முதலில் ஆண்களுக்குத்தான்), அவர்கள் அன்ன சுத்தி செய்யணும். அதனால் முதலில் சாதம், நெய். பிறகுதான் மற்றவைகள். மற்றவற்றை இலையில் பரிமாறினாலும், அன்ன சுத்தி செய்யும் வரை எதையும் சாப்பிட முடியாது. அதனால் இரு வேறு வகையாக பரிமாறுவார்கள் என்று தோன்றவில்லை.

      Delete
    2. ஶ்ரீராம் சொல்வது சரி, வைணவர்கள் முக்கியமா வடகலையோனு நினைக்கிறேன்.எடுத்த எடுப்பில் சாதம் தான் பரிமாறுவாங்க! இது வைணவர்களில் மட்டுமே. தென்கலைக்காரங்கன்னா முதலில் வாழைப்பழத் துண்டு ஒண்ணை வைச்சுட்டு அப்புறமா சாதம், பின்னரே காய்கள் வரும்.

      Delete
    3. நாங்க எல்லா விசேஷங்களிலும் ச்ராத்தம் உட்பட, பாயசம், தயிர்ப் பச்சடி, இனிப்புப் பச்சடி, கறி வகைகள், கூட்டு வகைகள், வறுவல், ஊறுகாய், அப்பளம் இருந்தால் அப்பளம், பக்ஷணங்கள், கலந்த சாதம் என்றே பரிமாறுவோம்.

      Delete
    4. ஐயங்கார்களில் ஒரு வினோதமான பழக்கம் உண்டு. சம்பந்திகளாகவே இருந்தாலும் கூட, ஒருவர் தொட்டதை மற்றவர் சாப்பிட மாட்டார்கள். அதனால் பரிசாகர்கள்தான் பரிமாறுவார்கள். இதெல்லாம் முப்பது வருடங்கள் முன்பு வரை ஸ்ரீரங்கத்தில் கடைபிடிக்கப்பட்டு பார்த்திருக்கிறேன். இப்போதைய நிலை தெரியாது.

      Delete
    5. //அன்ன சுத்தி செய்யும் வரை எதையும் சாப்பிட முடியாது.//

      ஓவர் 'எந்து' வாக சில பெண்கள் அண்ணா சுத்தி செய்வதை பார்த்திருக்கிறேன்.

      Delete
    6. யெஸ்... ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா சொல்லியது சரி....

      பானுக்கா கருத்து சொல்லியிருப்பதும் இருந்து வந்தது இப்ப இல்லை..அந்தப் பழக்கம்...அதெல்லாம் ரொம்ப ஆசாரமானவங்க...செய்வது

      எங்க பிறந்த வீட்டுல சாதம் பரிமாறி நெய் அதன் பின் மற்றவை என்பதெல்லாம் வீட்டில் ரொம்பக் கறாராகச் செய்ததில்லை. ஏதேனும் விசேஷம் வந்து பரிஜாரகர்கள் பரிமாறினால் அப்படி.

      இல்லை என்றால் முதலில் தித்திப்பு பச்சடி காய் எல்லாம் போட்ட பிறகு (அந்த மற்றொருநாள் செய்வது போல்...) தான் சாதம்....எங்கள் ஊரில் இரு குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே இந்த மெத்தட் என்பதால் அப்படி ஆகிப் போனது அம்மா பாட்டி வீட்டில் ரொம்ப சம்பிராதாயங்கள் பார்த்ததில்லை. பாட்டி படிப்பு தன் காலில் நிற்பது உழைப்பு போன்றவற்றிற்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதுவும் பெண்கள் தங்கள் காலில் நிற்கணும் படிக்கணும் வேலைக்குப்போகணும் என்று ...ஏனென்றால் அவர் 23 வயதில் விதவையாகி என் மூஒன்று மாமாக்கள், என் அம்மாவுடன் தனியாகத் தன் மாமியாருடன் அப்பளம் இட்டுப் பிழைத்த் வாழத் தொடங்கியதால்..

      கீதா

      Delete
    7. வைணவர்களில் சம்ப்ரோக்ஷணம் செய்து கொண்டால் தான் ச்ராத்தம் போன்றவற்றில் சமைக்கவோ, பரிமாறவோ முடியும் என எங்க வைணவ நண்பர்கள் பலர் சொல்லுவார்கள். ச்ராத்தம் போன்றவற்றிற்குப் பொதுவாகவே வீட்டுப் பெண்கள் சமைத்தும் நாங்கள் பார்த்ததில்லை. அதற்கெனவே தனியாக ஒரு மாமா வந்து சமைத்துக் கொடுப்பார். அதோடு அவங்க பித்ருசேஷம் என்பது எங்களுக்குக் கிடையாது என்றும் சொல்லுவார்கள். இது நான் சொல்லுவது தென்கலை வைணவர்கள் சம்பிரதாயம் குறித்து. அம்பத்தூரில் அவங்க எங்களுக்கு எதிர் வீடு. பல வருஷங்களாகப் பழக்கம்.

      Delete
    8. கீசா மேடம்... தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அதாவது தோள்களில் சங்கு சக்கரம் தரித்துக்கொள்வது (ஆச்சார்யன் அதனைப் பொறிப்பார்). அப்படி சமாச்ரயணம் ஆனவங்கதான் தளிகை உள்ளுக்குள் செல்லமுடியும். திருமணமாகாத பெண்கள் செல்லமுடியாது (ஏன்னா, திருமணம் ஆகும்போதே இந்த சமாச்ரயம் என்பதையும் செய்துவிடுவார்கள்)

      திருமணமான பெண்கள், ச்ராத்தத்துக்கு தளிகை செய்யலாம். ஆனால் இந்தக் காலத்தில் அது சிரமமாகத் தெரிவதால், அதெற்கன ஒருவரை ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.

      Delete
    9. வைணவர்களில், முதலில் இலையில் சாதம்தான் சாதிப்பார்கள். வேறு உப்பு ஐட்டம் எதுவும், இலையில் சாதிக்க மாட்டார்கள். வாழைப்பழம்+ஜீனி, சாதத்திற்கு முன்பு சாதிக்கலாம். சாதம் போட்டபின் (இந்த வார்த்தை உபயோகப்படுத்த மாட்டோம்), நெய், பிறகு அன்ன சுத்தி. பொதுவா, எல்லோரும் (ஆண்கள்) சேர்ந்துதான் அன்ன சுத்தி செய்வார்கள். அதற்குப் பிறகு பருப்பு தொடங்கி எல்லாவற்றையும் சாதிப்பார்கள்.

      பொதுவா ஆண்கள் சாப்பிட்டபின்புதான் பெண்களுக்கு சாப்பாடு. கல்யாணத்தில், பந்தியில் ஏன் இந்த மாதிரி வரிசையா பரிமாறுவதில்லை என்றால், அந்தமாதிரி வழக்கங்களை அங்கு ஃபாலோ பண்ணமுடியாது.

      வைதீகர்களுக்கு என்று தனியாக உணவு தயார் செய்யும் கல்யாணங்களும்/விசேஷங்களும் உண்டு. அங்கு வைதீக முறைப்படிதான் பரிமாறுதல் நடக்கும்.

      Delete
    10. @பானுமதி வெங்கடேச்வரன் - //ஒரு வினோதமான பழக்கம் உண்டு. சம்பந்திகளாகவே இருந்தாலும் கூட, ஒருவர் தொட்டதை மற்றவர் சாப்பிட மாட்டார்கள். // - சாப்பாடை (தளிகையை) தொடுவதற்கு, பெண்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. (எங்க பெரியப்பா வீட்டில்-இப்போது அவங்க இல்லை- நான் இருந்தாலும், எனக்கும் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணங்களெல்லாம் விளக்கினா நிறைய பேருக்குப் புரியாது). அதுனால, சாப்பாட்டு ஐட்டங்களைத் தொடுவதற்கே வாய்ப்பு கிடையாது. தொடவும் கூடாது. உண்மையான வைதீகர்கள், மேசையில் உணவு உண்ண மாட்டார்கள்.

      ஆனா இப்போ, அவைகளெல்லாம் ஃபாலோ செய்யப்படுவதில்லை, அனேகமா நகரங்களில் பெரும்பாலானவர்கள் இல்லத்தில்.

      சாஸ்திர விரோதம் என்று கருதப்படுபவைகள், பைப் தண்ணீரில் குளிப்பது, கர்மம் செய்துமுடிக்கும்வரை (அதாவது ச்ராத்தமோ, தர்ப்பணமோ) எதையும் சாப்பிடாமல் இருக்கணும், குடிக்க ஆற்று, கிணற்று நீர்தான் (பைப்பில் வரக்கூடாது, இரும்பு சுத்தமில்லை) என்று பல உண்டு. இவைகளை யார் கடைபிடிக்கிறார்கள், அதற்கான வாய்ப்பு இருக்கு?

      Delete
    11. //தட்டச்சு மிஸ்டேக்கா? சமாச்ரயணம், அதாவது தோள்களில் சங்கு சக்கரம் தரித்துக்கொள்வது (ஆச்சார்யன் அதனைப் பொறிப்பார்). அப்படி சமாச்ரயணம்/மன்னிச்சுக்கோங்க நெ.த. கவனிக்காமல் எழுதிட்டேன். அதே சமயம் இந்த வாரம் கு.தெ. கோ. போவது பத்திப் பேச்சு நடந்து கொண்டிருந்ததால் அப்போ பட்டாசாரியார் சம்ப்ரோக்ஷணத்துக்குப் போயிருப்பதைப் பத்திப் பேசிட்டே அடிச்சதும் ஒரு காரணமா இருக்கலாம். சமாச்ரயணம் என்றே மனதில் பதியாமல் இருந்திருக்கு! :( தட்டச்சுக் குறைபாடெல்லாம் இல்லை. தப்பாய்ச் சொல்லிட்டேன். :))))

      Delete
  4. திவசம் போன்ற நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குறையோ, ஸம்ப்ரதாயமோ சொல்வார்கள். "இன்னும் கொஞ்சம் போடவா" என்று கேட்கக் கூடாது. "போதுமா" என்று கட்டாயம் (திவசம் என்றில்லாமல் எப்போதுமே) கேட்கக் கூடாது. பழங்களை நறுக்கிப் பரிமாறக் கூடாது. மாம்பழமாயினும் (நல்லவேளை பலாப்பழம் அப்படிக் கேட்கமாட்டார்கள்!) முழுசாகத்தான் விளம்ப வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. சந்தேகத்துக்குப் பாயசம், சந்தேகத்துக்கு பக்ஷணம் என்றே பொதுவாகப் பந்திகளில் அது என்ன விசேஷமாக இருந்தாலும் முன்னெல்லாம் கேட்பார்கள். பழங்களை நறுக்கக் கூடாது என்பதோடு பலாப்பழம் முழுசாக வாங்கித் தான் தோல் உரிச்சு சுளைகளைக் கொட்டை நீக்கிப் போடணும்! :))) பலாப்பழம் வாங்கறதெல்லாம் மாமனாரோட போச்சு!

      Delete
    2. //திவசம் போன்ற நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குறையோ, ஸம்ப்ரதாயமோ சொல்வார்கள்.//
      ஆமாம், திவசத்தில் நிறைய டூ ஸ் அண்ட் டோன்ட் ஸ் உண்டு.

      //சந்தேகத்துக்குப் பாயசம், சந்தேகத்துக்கு பக்ஷணம் என்றே பொதுவாகப் பந்திகளில் அது என்ன விசேஷமாக இருந்தாலும் முன்னெல்லாம் கேட்பார்கள்.//
      சந்தேகத்துக்கா? இப்போதெல்லாம் பெரும்பான்மையான திருமணங்களில் சாப்பிடுங்கள் என்று கூட சொல்வதில்லை. சாப்பீட்டீர்களா? என்றும் கேட்பதில்லை. நாமே வெட்கத்தை விட்டு சாப்பிட செல்ல வேண்டியிருக்கிறது.

      Delete
    3. பானுக்கா அதை ஏன் கேட்கறீங்க..ஒன்று பரிமாறி வைச்சுடறாங்க ...இல்லைனா கேட்பதே இல்லை...நாம் தான் கேட்கணும் அதனால் பல சமயங்களில் நான் விட்டுவிடுவேன்...அது ஒரு மாதிரி இருக்கும் என்பதால்..நெருங்கிய உறவுகளாக இருந்தால் மட்டுமே கேட்டுச் சாப்பிடுவது...இல்லை என்றால் இலையில் என்ன போடுகிறார்க்ளோ அதே...நமக்கும் அது போதும்னு வைங்க...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  5. //பருப்பை மேல் புறத்தில் வைக்க வேண்டுமா, கீழ் புறத்தில் வைக்க வேண்டுமா என்பது பலர் குழப்பிக் கொள்ளும் விஷயம்.//
    இலையில் பரிமாறுகையில் உப்புப் போட்ட பண்டங்கள் அனைத்தும் இலையின் மேற்புறம் வைக்க வேண்டும். பொதுவாக ரொம்ப ஆசாரமாக இருப்பவர்கள், அல்லது சிவ பூஜை செய்து அன்றாடம் தானே சமைத்துச் சாப்பிடுபவர்கள் உப்புச் சேர்த்து நிவேதனம் செய்வதைத் தவிர்ப்பார்கள். உப்பு கொஞ்சம் தள்ளுபடி செய்யப்பட்ட பொருள். ஆகவே உப்பில்லாமல் நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுகையில் உப்பைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உண்டு. என் தாத்தா(அம்மாவின் அப்பா) தினம் அப்படித் தான். ஆகவே பருப்பில் உப்புப் போட்டிருந்தால் இலையின் மேற்பக்கம் வைக்க வேண்டும். பருப்பில் உப்பில்லை எனில் பாயசத்துக்குப் பக்கமாய்ப் பரிமாற வேண்டும். இலையின் கீழ்ப்பக்கம் பொதுவாகப் பாயசம், அன்னம், இனிப்பு பட்சணங்கள், பழம் போன்றவையே பரிமாற வேண்டும். எங்களுக்கெல்லாம் இதைச் சொல்லிக் கொடுத்தே பரிமாறச் சொல்லுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதுபோல வடை, பஜ்ஜி, போன்ற பட்சணங்கள் வைக்கவும் தனியாய் ஒரு இடம்.. ஸ்வீட் என்றால் ஒரு இடம்..

      Delete
    2. ஸ்ரீராம்... நீங்க தஞ்சாவூர். தாட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா? (முழு இலையில் 36 வெரைட்டிகளோட)? இல்லைனா, உங்க பசங்க கல்யாணத்தப்போ பண்ணிடுங்க. ஹா ஹா ஹா.

      Delete
    3. பக்ஷணங்களில் அவையும் வருகின்றனவே. வடையெல்லாம் மேல்புறம். அதிரசம், மைசூர்ப்பாகு, லட்டு, ஜிலேபி எனில் இலையின் கீழ்ப்பக்கம்.

      Delete
    4. தினமும் நாங்க சாப்பிடுவதே "தாட்" இலை தான்! :)))) எப்போவானும் இலைகள் சின்னதாய்க் கிடைக்கும்! கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற ஊர்களில் ஓட்டல்களில் கூடப்பெரிய இலையாகவே போடுவார்கள்.

      Delete
    5. இது ராக்கெட் சயன்ஸ் இல்லை கீசா மேடம். காரம் மேல, இனிப்பு கீழ. இதற்கு விதிவிலக்கு, சாதம், குழம்பு, ரசம். ஆனா பொதுவா மாங்காய் பச்சிடி மேலதான் பரிமாறுவாங்க. இப்போல்லாம் இத்தனை ஐட்டம் எங்க போடறாங்க.

      Delete
    6. ராக்கெட் சயின்ஸ்னு நான் சொல்லலை. பரிமாறும் விதம் பத்தி மட்டுமே சொல்லி இருக்கேன். வைதிக சாஸ்திரிகளைக் கேட்டுப் பார்க்கவும். எங்க புரோகிதர்கள் அனைவரும் சொல்வது இது தான்! உப்பில்லாப் பண்டங்கள் கீழே வைக்கணும். உப்புப் போட்டவை மேலே வைக்கணும். இது தான் சாஸ்திரப்படி பரிமாறும் விதம் என்பார்கள். சின்ன வயசிலே இருந்து கேட்டிருக்கேன். :)))))) மத்தபடி சயின்ஸுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருப்பதாய்த் தெரியலை.

      Delete
    7. ஒரு உபன்யாசகர் கருத்துப்படி வானரங்கள் சாப்பிடும் காய், கனி வகைகள் மேலே, மனிதர்கள் சாப்பிடும் சாதம் போன்றவை கீழே என்பார்! :)))) ஆனால் எனக்குத் தெரிந்து பரிமாறும் விதி பெரும்பாலான ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் நான் சொன்னபடியே இருக்கிறது.

      Delete
    8. //ஸ்ரீராம்... நீங்க தஞ்சாவூர். தாட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா?//

      இல்லைன்னுதான் நினைக்கிறேன். என் பதினேழு வயது வரை தஞ்சை வாசம். சரியாக நினைவில்லை!

      Delete
    9. எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் இந்த பருப்பு பரிமாறும் விஷயத்தில் நிறைய பேர் தடுமாறி இருப்பதை பார்த்திருக்கிறேன்.
      //ஒரு உபன்யாசகர் கருத்துப்படி வானரங்கள் சாப்பிடும் காய், கனி வகைகள் மேலே, மனிதர்கள் சாப்பிடும் சாதம் போன்றவை கீழே என்பார்!//
      நானும் இதை சமீபத்தில் படித்தேன். வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பும் வழியில் பரத்துவாஜருடைய ஆஸ்ரமத்தில் தங்கிய ராமபிரான் நந்திக்ராமத்தில் தன வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் பரதனுக்கு தான் வந்து கொண்டிருப்பதாக செய்தியை அனுமனிடம் சொல்லி, இந்த முறையும் தன்னுடைய மோதிரத்தை கொடுத்து அனுப்பினாராம்.
      அனுமன் திரும்பி வரும்வரை தன்னுடைய உணவை சாப்பிடாமல்
      காத்திருந்த ராமன், அனுமன் வந்ததும் தன்னுடைய இலையை அனுமனோடு பகிர்ந்து கொண்டாராம். அதுவரை இலைகளில் பிரிவு இல்லாமல்தான் இருந்ததாம், ராமர் தன் கரத்தால் இலையின் நடுவே கோடு கிழித்தும் அது இரண்டு பகுதிகளாக பிரிந்ததாம்.
      அதன் மேல் பக்கத்தில் அனுமன் அமர்ந்திருந்த பகுதியில் வானரங்கள் சாப்பிடும் காய் கறிகளும், கீழ் பகுதியில் ராமர் அமர்ந்திருந்த பகுதியில் மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளும் பரிமாற்றப்பட்டனவாம்.
      இதற்கு எந்தவித ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை, பௌராணிகரின் கற்பனை.

      Delete
    10. //ஸ்ரீராம்... நீங்க தஞ்சாவூர். தாட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களா?//
      தாட்ட இலையா? அப்படீன்னா?
      எங்கள் ஊரில் சருகு என்று ஒன்று இருக்கும். வாழை இலையை ஏதோ பாடம் பண்ணி காய வைத்திருப்பார்கள். அதில் சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம். சுருக்கங்களோடு இருக்கும் அது சட்டென்று கிழிந்து விடும்.

      Delete
    11. வாழை இலை கிடைக்காதபோது சருகு இலை உபயோகிப்பாங்க. பொதுவா தையல் இலைதான்.

      நான், தாட்ட இலையைப்பற்றி விகடன் பொங்கல்/தீபாவளி மலரில் 3-4 வருடங்களுக்கு முன்பு படித்தேன். இது தஞ்சையின் விருந்துக்கு உபயோகப்படுத்தும் இரண்டடி அகலமுள்ள முழு இலை. கெத்தைப் பொறுத்து, 30-50 வகைகளைப் பரிமாறுவார்கள்.

      ஆமாம்... சென்னைக் காரர்களே... இங்கு தலைவாழை இலை போட்டு சாப்பாடு போடும் ஹோட்டல் உண்டா? முன்பு ஜி.என்.செட்டி தெருவில் அறுசுவை நடராஜன் கடையில் சனி/ஞாயிறு மதியம் 200 ரூபாய்க்கு போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பெங்களூரில்கூட உண்டு.

      கண்டுபிடித்துச் சொல்லுங்களேன். (உடனே சரவணபவன் என்று பஜனை பண்ணிவிடாதீர்கள்)

      Delete
    12. ஶ்ரீராம்.... 20 வயசுக்குமேல்தான் நல்லா சாப்பிடுவாங்க. 17 வயசுக்காரங்களை, 4 பேருக்கு ஒரு தாட்ட இலைதான்.. ஹா ஹா

      Delete
    13. பானுக்கா, கீதாக்கா அந்த ராமாயணக் கதை கேட்டிருக்கிறேன் ராமன் அனுமனோடு பகிர்ந்த சாப்பாட்டு விஷயம் .ஆனால் புத்தகத்தில் எதுவும் வாசித்ததில்லை....அதாவது ராமாயணத்தில்...பாட்டி சொன்ன கதையிலும் இப்படிச் சொல்லியதில்லை

      கீதா

      Delete
  6. யாருக்கு எப்படியோ. அருமையான சாப்பாடு காத்திருக்கிறது.
    சாப்பிட நான் ரெடி.மிக நன்றி பானு மா.

    ReplyDelete
  7. எத்தனை எத்தனை வித்தியாசங்கள் ஒவ்வொரு இடத்திலும்.

    பாட ஆரம்பித்துவிட்டால் பாயசம் மட்டும் தானா... கஷ்டம் தான்! ஸ்ரீராம் சொல்வது போல பாடினா வாழைப்பழம் தான் சரியான வழி! ஹாஹா....

    சுவையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. சமீபத்துல ஒரு விசேஷத்துல, ஸ்பூன்ல இனிப்பு வச்சுட்டு காணாமப்போய்ட்டாங்க. கீர் ஒரு 2 ரூபாய் டீ தர கப்புல வச்சுட்டு காணாமல் போய்ட்டாங்க. என்னைப் போல் இனிப்புப் பிரியர்களெல்லாம், 'பாட்டு முடியும்வரை இனிப்பு போட்டுக்கொண்டே இருப்பார்கள்' என்பதைக் கேட்டுவிட்டு சந்தோஷமா இருக்கிறோம். அது வேணாம்னு சொல்றீங்களே.

      Delete
    2. நன்றி வெங்கட்.

      Delete
    3. சமீபத்துல ஒரு விசேஷத்துல, ஸ்பூன்ல இனிப்பு வச்சுட்டு காணாமப்போய்ட்டாங்க. கீர் ஒரு 2 ரூபாய் டீ தர கப்புல வச்சுட்டு காணாமல் போய்ட்டாங்க.
      எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது நெ.த. ஹா ஹா!

      Delete
    4. ஹா அஹ ஹா நெல்லை இப்போ எல்லாம் அப்படித்தானே புதுசா சொல்லறீங்க...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  8. ஒரு சில ஒரு சில பழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து இருப்பது கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு இடத்திலும் ஒரு பழக்கம், எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை, ஆனால் கடைபிடிக்க முடியாது. நம் வீட்டு பழக்கத்தை தெரிந்து கொண்டு, அதை ஒழுங்காக கடை பிடித்தால் போதாதா? வருகைக்கு நன்றி.

      Delete
  9. ஆஹா !! என்னை உக்காரவச்சி இப்படி நீங்க சொன்னமாதிரி வாழையிலையில் சாப்பாடு பரிமாறினா !! நினைக்கவே ஆனந்தம் .
    எங்க வீட்டில் ஊரில் சாப்பிடும்போது தோட்டம் போய் இலை வெட்டி கொண்டுவந்துதான் உணவு பரிமாறுவாங்க அம்மா .என் மகளும் இதை அனுபவிச்சா .##ஒருமுறை சரவணபவன் சென்னை திநகர் ப்ராஞ்சில் லன்ச் ஒரு வெள்ளைக்கார குடும்பம் சாப்பிட அமர்ந்தாங்க .பரிமாறுபவர் ஒவ்வொன்றால் இலையில் இருப்பதை விளக்கியதை ஆர்வமுடன் கேட்டு கையால் சாப்பிட்டாய்ங்க !!

    என்ன இருந்தாலும் இன்னொருவர் பரிமாற உணவு உண்பது ஒரு மகிழ்வான அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. //நீங்க சொன்னமாதிரி வாழையிலையில் சாப்பாடு பரிமாறினா !// - வாழை இலையில் எல்லாரும் சாப்பிடமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் அதுக்கு ஒரு prerequisite இருக்கு. நல்லா குழம்பு சாதம், ரசம் சாதம், இரண்டு முறை பாயசம், தயிர் சாதம், இடையில் போடும் இரண்டு ஸ்வீட், காரம், எல்லாக் காய்கறி, கூட்டு, அப்பளாம் - இவ்வளவையும் முழுமையா சாப்பிடும் வயிறும், மனமும் இருந்தால்தான் அவங்களுக்கு இலையில் சாப்பாடு. மத்தவங்களுக்கெல்லாம் (உங்களையும் சேர்த்து) சாப்பிடறதைப் பார்க்க மட்டும்தான் அனுமதி..ஹா ஹா ஹா.

      என் பையன் கிட்ட நான் சொல்லுவேன். உன்னை முழுச் சாப்பாட்டுக்கு (North Indian or Gujarathi or வெகு அபூர்வமா தமிழக உணவு) கூட்டிக்கிட்டுப் போனா, 250 ரூபாய் கொடுத்தால் நீ 20 ரூபாய்க்கு சாப்பிடுவ, justify பண்ணமாட்ட என்பேன்.

      Delete
    2. உண்மைதான் நெல்லைத்தமிழன் ..எனக்கு ஒரு குணமுண்டு இலையில் இப்படி நிறைய உணவை பார்த்தா கண்ணும் வயிறும் நிறைஞ்சிடும் ..சரவணபவானில் லன்ச் சாப்பிடப்போய் முக்கால்வாசியை வீண் செஞ்சேன் அந்த சர்வருக்கு மன வருத்தமாகிடுச்சி ,ஒரு தோசையே அதிகம் எனக்கெல்லாம் ,இப்போல்லாம் appetite குறைஞ்சிடுச்சி ,,

      Delete
    3. என்னாலும் சாப்பிட முடியாது என்பதால் ஓட்டல் போனால் லஞ்ச் எனப்படும் முழு மதிய உணவு சாப்பிடவே மாட்டேன். கீழத் திருப்பதியில் மட்டும் சாப்பிட்டேன். அங்கே அளவுச் சாப்பாடு என்பதோடுவிலையும் 85 ரூபாய் தான். காய்கள் இரண்டாம் முறை கேட்டால் போட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி எங்கே போனாலும் நான் மதியம் சாப்பிடுவதையே தவிர்ப்பேன். பழச்சாறு ஏதேனும் குடிச்சுப்பேன்.

      Delete
    4. ஆமாம் ஏன்ஜெல். உணவு பரிமாறப்படும் பொழுது உணர்வும் பரிமாறப்படும்.

      Delete
  10. கருத்து போடலாம் என்று வந்த போது பல கருத்துகள் இருக்கவே சரி ரிப்பீட் ஆக வேண்டாம் யார் என்ன சொல்லிருக்காங்கனு பார்த்து அப்படியே கொடுத்துக் கொண்டு வர நினைச்சு போடறேன்..

    //பரிமாறும் பொழுது, பாத்திரத்திலிருந்து வழித்து போடக்கூடாது, கொஞ்சமாக இருந்தால் கூட கரண்டி சப்தம் வரக்கூடாது என்பதை எங்கள் வீட்டில் வலியுறுத்தி சொல்வார்கள். ஏனென்றால், அப்படி சப்தம் வந்தால் சாப்பிடுகிறவர்கள் குறைவாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுவார்கள் //

    இது எங்கள் பிறந்த வீட்டில். பிறந்த வீட்டில் எப்போதுமே நிறைய செய்து பரிமாறுவார்கள். ஆனால் அதிகம் ஒன்றும் மீறவே மீறாது. புகுந்த வீட்டில் பார்த்த போது இது எப்படிப் போதும்? என்று எனக்குத் தோன்றும்...அது கடைசி பந்தி அதற்கும் கடைசியாக வீட்டு மனிதர்கள் அதுவும் குறிப்பாகப் பெண்கள் அமரும் போதுதான் தெரியும் ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  11. வாழை இலை சாப்பாடு அந்தச் சாப்பாடுக்கு இணை எதுவும் இல்லை. அதுவும் திவசச் சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா ரங்கன் - சாப்பாடு பிடிக்கும்னாலும், பசியோட 2:30 மணிக்குச் சாப்பிடும்போது (காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல்), ருசி எப்படித் தெரியும்?

      Delete
    2. நெல்லை அதையும் நான் ரசித்து மெதுவாகத்தான் சாப்பிடுவேன். ஒவ்வொரு ஐட்டத்திற்கும் மாமாவைப் புகழ்ந்து...குறிப்பா பிரண்டைத் துவையல், பாகற்காய் மிளகு குழம்பு, இடிச்சக்கை பொரியல்....ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. திவச சாப்பாடு பிடிக்கும் என்று சொல்லும் முதல் ஆள் நீங்கள்தான். எனக்கு அதில் அல்வா, திரட்டுப்பால், எள்ளுருண்டை இவைகள்தான் பிடிக்கும்.

      Delete
  12. நான் ஒத்துக்க மாட்டேன்...

    ( உன்னை யாருய்யா ஒத்துக்கச் சொன்னது!..)

    இருந்தாலும் நாமும் சத்தம் போட்டு வைப்போமே!... சத்தம் இல்லாட்டி பந்திக்கு பெருமை ஆகுமா?...

    சரி.. இப்போ எதுக்கு சத்தம்?...

    சாம்பார்....ன்னா... அதுவும் முருங்கைக்காய் சாம்பார்...ன்னா அப்டியே பொன்னிறமா மஞ்சள் மினுக்கிக்கிட்டு இருக்கணும்...இங்கே புளிய கரைச்சி ஊத்துன மாதிரி இருக்கு.... இருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்....

    அப்படியே தாம்பூலம் எடுத்துக்குங்க!...

    ஆகா... தஞ்சாவூர்காரன்....ன்னா
    தாம்பூலம் இல்லாமயா!..

    ReplyDelete
    Replies
    1. ஹை துரை அண்ணா வந்துட்டீங்களா....தாம்பூலம் கிடைச்சுச்சா...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. @Durai Selvaraj Sir: வருகைக்கும், சாம்பாரை குறை சொன்னாலும்(அதற்கும் ஒருவர் வேண்டாமா?),ருசித்து, தாம்பூலமும் எடுத்துக் கொண்டதற்கும் நன்றி.

      Delete
    3. அன்பின் பானும்மா!...

      சும்மா நகைச்சுவை அது..

      என் கைப்பக்குவம் புளி ஊற்ற மாட்டேன்... ஆனால் எங்கள் வீட்டில் புளி ஊற்றி செய்வார்கள்...

      என்ன பாயசம் ரொம்ப இனிப்பா இருக்கே... என்று சொல்லி விட்டு மறுபடியும் கேட்பவர்கள் உண்டே!...

      குறையென கொள்ளற்க...

      வாழ்க நலம்...

      Delete
    4. சொன்னதாலே தப்பெல்லாம் இல்லை துரை. நம்ம ரங்க்ஸுக்கும் சாம்பாரில் புளி சேர்த்தால் பிடிக்காது. பொதுவாகவே என் அம்மா வீட்டில் சாம்பாரோ, ரசமோ எதுவானாலும் நீர்க்கத் தான்புளி கரைப்பார்கள். அப்படியே நான் செய்வதால் அதிகம் புளிப்புத் தெரியாது. ஒரு சிலர் சாம்பார் கெட்டியாக இருக்கணும்னு புளியையும் கெட்டியாக் கரைச்சு, பருப்பும் நிறையப் போட்டு காய்களையும் சேர்த்து அரைத்தும் விடுவார்கள்! ரொம்பக் கெட்டியா இருக்கும். நீர்க்கக் கரைச்சு சாம்பார் வைச்சால் கொதிச்சுத் தான்கள், அரைச்சு விட்டது சேர்ந்தாலே போதும். சாம்பார் கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்கும். மாவு கூட ஊற்ற வேண்டாம். கொஞ்சம் கெட்டியா இருந்தால் தான் பிடிக்கும் எனில் சாம்பாருக்கு சாமான்கள் வறுக்கையில் கடலைப்பருப்பைக் கொஞ்சம் கூட வைச்சு வறுத்து அரைச்சு விட்டால் போதும். நான் கடலைப்பருப்பு அதிகம் சேர்க்க மாட்டேன். :))))

      Delete
  13. தஞ்சாவூர் தாட்டிலை...ன்னா தலை வாழை இலை தான்...

    சருகு இல்லை.. அது ரொம்பவும் வறண்ட காலத்தில் தான்..

    இரண்டடிக்கும் அகலமான நுனி இலைகளை தாட்டிலை என்பார்கள்..

    அந்தப் பக்கம் இருக்கும் பதார்த்தங்களை எழுந்து போய் எடுத்து சாப்பிட்டுட்டு இந்தப் பக்கம் மறுபடியும் தொடரலாம்...

    இப்போதும் தஞ்சையில் இருந்து தலை வாழை இலைகள் தலை நகருக்குப் பயணமாகின்றன....

    ReplyDelete
    Replies
    1. துரை சார்... ஒரு இலை, (முழு இலை) 20 ரூபாய். என் மாமனார்/மாமியார் வந்திருந்தார்கள் என்று வாங்கினேன்.

      Delete
    2. நெல்லை நீங்க எங்க வாங்கறீங்க!! விலை எல்லாம் இப்படிச் சொல்லறீங்க?!!!!! முழு இலை புரியுது... நான் இலை வடாம் செய்ய வாங்கினப்ப கூட நுனி இலை பெரிதுதான்...இளசாகவும் இருந்தது. 5 இலை 20 ரூ திருவான்மியூரில்.

      கீதா

      Delete
    3. "வாங்க வாங்க" ஸ்டோர்ல, காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு. 5 இலை 100 ரூபாய்க்கு வாங்கும்போதே இவ்வளவு விலையா என்று தோன்றியது.

      இனிமே உங்ககிட்டத்தான் கேட்டுக்கணும். ஆனா பாருங்க, 5 இலை வாங்க, ஆட்டோ எடுத்துக்கிட்டு போகமுடியுமா? அதைத்தான் கடைக்காரங்க பயன்படுத்திக்கறாங்க.

      Delete
  14. பரிமாறலை சில குடும்பங்களில் ஒரு கலையாக, நேர்த்தியாகச் செய்வதை பார்த்துள்ளேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. பல கலைகளைப்போல பரிமாறும் களையும் இப்போது அருகி வருகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

      Delete