கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 25, 2020

கடலைக் கடந்து - 3

கடலைக் கடந்து - 3 

அலுவலகத்தில் முதல் நாள்:

நான் மஸ்கட் சென்று சேர்ந்தது ஜனவரி 5 இரவு, மறுநாள்

காலையே நான் வேலையில் சேர வேண்டியதாக இருந்தது.

அங்கெல்லாம் அரசு அலுவலகங்கள் காலை 7:30க்கு துவங்கி,

மதியம் 2:30 வரைதான் செயல்படும். எங்களை பிக் அப் செய்து 

கொள்ள மினிஸ்ட்ரி பஸ் உண்டு.

 அலுவலகம் சென்றதும் என் கணவர் என்னை எல்லோரிடமும் 

அறிமுகப் படுத்தினார். அனைவரும் ஷேக் ஹாண்ட் கொடுக்க 

கையை நீட்டுவார்கள், நான் சினிமாவில் வரும் கிராமத்து 

கதாநாயகி போல் கையை கூப்பி, பின்னர் கொஞ்சம் 

சங்கடத்தோடு ஷேக் ஹாண்ட் பண்ணுவேன். அது கொஞ்சம் 

கஷ்டமாகத்தான் இருந்தது. 

 

அதன் பிறகு என்னை பர்சனல் டிபார்ட்மென்டில் ஒரு 

மலையாளியிடம் அறிமுகப் படுத்தி விட்டு,”இவர் என்ன செய்ய 

வேண்டும் என்று கூறுவார், அதன் படி செய்” என்று 

சொல்லிவிட்டு சென்று விட்டார். அந்த மலையாளியோ ஒரு 

விரோத பார்வையோடு படிவம் ஒன்றை கொடுத்து, “இதை 

நிரப்பு” என்று கூறி விட்டுச் சென்றார். நிரைய கோப்புகள் இருந்த

அந்த அறையில் வேறு யாரும் கிடையாது. ஏதாவது 

சந்தேகம் இருந்தால் தெளிவு படுத்த கூட யாரும் இல்லை.

 

சந்தேகம் வந்த இடங்களை விட்டு விட்டு தெரிந்ததை 

நிரப்பினேன். உடன்பிறந்தவர்களின் பெயர், பிறந்த தேதி இவைகளை கேட்டிருந்தார்கள். நான் நம் வழக்கப்படி ராதாமணி, சாரதா, விஜயா, கலா என்று எழுதிவிட்டேன். அந்த பர்சனல் ஆபீசர், “வாட் இஸ் திஸ்? யூ ரோட் ராதை, சாரதை..லைக் தட்? யூ ஹெவ் டு ரைட் ஃபுல் நேம்” என்று என்னிடம் கூறி விட்டு, ப்ராப்லம்,ப்ராப்லம்,பேசிக் ப்ராப்லம்” என்று 

அலுத்துக் கொண்டு சென்றார். அதன்படி நிரப்பினேன். எல்லோருடைய பிறந்த நாட்களும் கேட்கப்பட்டிருந்ததை  பார்த்ததும் ஜெர்க் ஆகி விட்டேன். காரணம், எங்கள் வீட்டில் யாருக்கும் நிஜமான பிறந்த தேதியை  குறிப்பிடாமல், ஏதோ அவர்களுக்குத் தோன்றிய ஒரு தேதியை  கொடுத்திருப்பார்கள். நான் முழிப்பதைப் பார்த்து அவர் மீண்டும், "ப்ராப்லம் ப்ராப்லம், பேசிக் ப்ராப்லம்" என்றார். சரி இதை என்ன கிராஸ் செக் செய்யப் போகிறார்களா? என்று கடவுளை வேண்டிக் கொண்டு எனக்குத் தெரிந்த பிறந்த நாட்களை குறிப்பிட்டேன். இது கூட பெரிதில்லை, நான் படித்த பள்ளியின் பெயரை குறிப்பிட்ட பொழுதுதான் ஒரு பெரிய பிரச்சனை வந்தது.   


34 comments:

 1. அலுவலகத்தில் முதல் அனுபவம் - இப்படியும் சில அலுவலர்கள்.

  மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. //அந்த மலையாளியோ ஒரு விரோத பார்வையோடு படிவம் ஒன்றை கொடுத்து, “இதை நிரப்பு” என்று கூறி விட்டுச் சென்றார்//

  இதுதான் தமிழர்களுக்கு வெளியிடங்களில் கிடைப்பது... நான் மேலும் சொன்னால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கோர்ட்டில் பந்தை போட்டு விட்டேனோ? நன்றி.

   Delete
 3. நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதை அனுபவிக்கும் பொழுது பிரச்சனையாகத் தோன்றவில்லை. நிறைய பேருக்கு இப்படி நடந்திருக்கும் என்று நினைத்தேன். நன்றி.

   Delete
  2. ஆமாம்...   புதிது என்பதால், இப்படிதான் இருக்கும்போல என்று தோன்றி அந்த நிலையை அப்போதைக்கு சமாளிக்கவே தோன்றும்!

   Delete
 4. அனுபவங்கள் புதுமையானவை! பொதுவாகவே கேரள மக்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொஞ்சம்/இல்லை/இல்லை/நிறையவே தாழ்வாகவே நினைப்பார்கள். "பாண்டி"பாண்டி" என்பார்கள். நாங்கள் பழகியவரை பரவாயில்லை ரகம். ஆனாலும் சில பேச்சுக்கள்/பழக்கங்கள் சுட்டிக்காட்டிச் சிரிப்பார்கள். எல்லாவற்றையும் கடந்து வந்து அவர்களையும் நெருங்கிய சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்ட அனுபவங்கள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கேரளீயர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளப்பம்தான்.

   Delete
 5. புதுசாக வேலையில் சேர்பவர்களுக்கு மேலதிகாரி மட்டும் நல்லவராகக் கிடைக்கணும். அதுக்கு அத்ருஷ்டம் வேண்டும். :)))))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அமைந்த மேலதிகாரிகள் நல்லவர்களாகத்தான் இருந்தனர் ஒருவரைத் தவிர. இந்த பர்சனல் அதிகாரியை அதற்குப் பிறகு நான் சந்திக்க நேரவில்லை. நன்றி.

   Delete
 6. "அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்" என்பது போல ஒரு பெயரையாவது எழுதியிருந்தால், அந்தம்மாவின் 'ப்ராப்லம்' நம்மூர் தில்லுமுல்லு கண்டு அடக்கி வாசித்திருப்பார்களே...!

  ReplyDelete
 7. பல கேரளத் தோழர்களோடு பழகியிருக்கிறேன். சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய தெளிவும் பெற்றிருக்கிறேன். தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்கு கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு நிறையவே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. //தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்கு கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு நிறையவே உண்டு.// அதோடு தான் உசத்தி என்னும் எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. நன்றி.

   Delete
 8. அன்பு பானுமா,
  ஒமான் இருப்பதிலேயே நல்ல ஊர் என்று பெயர்.
  துபாயில் என் கசின் மிகச் சிரமப்பட்டு 30
  வருடங்கள் நல்ல பெயர் வாங்கி மீண்டு வந்தாள்.
  உங்களுக்கும் இதன் பிறகு
  நிலைமை சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
  மலையாளிகளுக்கு சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்
  உண்டு.:)
  எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.
  வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. //ஒமான் இருப்பதிலேயே நல்ல ஊர் என்று பெயர்.// நிஜம்தான். வாழ நல்ல அருமையான இடம். ஓமான் தனுஷ் மாதிரி பார்த்தவுடன் பிடிக்காது பழக,பழகதான் பிடிக்கும். நன்றி

   Delete
 9. 1991ல் குவைத்துக்கு இடைநிலைப் பணியாளராக வந்த என்னைக் கொஞ்சம் மேலே ஏற்றியதில் பாகிஸ்தானி ஒருவருக்கும் மலையாளி ஒருவருக்கும் பங்கு உண்டு..

  அதன்பின் அது நிலைத்து விடாதபடிக்கு முட்டுக்கட்டை போட்டதும் மலையாளியே...

  எல்லா அக்கினி ஆறுகளையும் கடந்திருக்கிறேன் நேர்மை எனும் படகைக் கொண்டு...

  ReplyDelete
 10. //எல்லா அக்கினி ஆறுகளையும் கடந்திருக்கிறேன் நேர்மை எனும் படகைக் கொண்டு...// அதுதான் வேண்டும். வாழ்க வளமுடன். நன்றி.

  ReplyDelete
 11. ஹா...   ஹா...  ஹா...    அலுவலகத்தில் புதிதாக வந்துசேர்பவர்களைப் பார்த்தால் இபப்டித்தான் பழையவர்களுக்குக் கொஞ்சம் தொக்காக இருக்கும்!!!   அதுசரி, அந்தப் படிவத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் விவரம் எல்லாம் கேட்காமல் விட்டார்களே!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அங்கு மட்டுமல்ல, வேறு சில நாடுகளுக்குச் செல்லவிசாவுக்கு  விண்ணப்பிக்கும் பொழுதும் உடன்பிறந்தவர்களைப் பற்றிய விவரங்கள் கேட்கிறார்கள். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம். 

   Delete
 12. நீங்கள் சொல்லியிருப்பது போல் கல்ஃப் செல்பவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் நானும் அங்கு செல்ல முயற்சி செய்ததுண்டு. ஆனால் முயற்சி கைகூடவில்லை.

  எதற்கு உறவினர் பெயரெல்லாம் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

  நானும் கேரளத்தைச் சேர்ந்தவன் என்றாலும் எனக்குமே சில அனுபவங்கள் உண்டு.

  உங்கள் அனுபவங்களைத் தொடர்கிறேன்

  துளசிதரன்

  ReplyDelete
 13. ஆஹா அக்கா புதுசா இருக்கு உங்க அனுபவம். எதுக்கு உங்க உடன்பிறந்தவர் பெயர் எல்லாம் கேட்டிருக்கிறார்கள்?

  கேரளத்தவர்க்கு கொஞ்சம் இப்படியான எண்ணங்கள் உண்டு. நன்றாகவே தெரியும். அனுபவமும் உண்டு. ஆனால் 8 வருடங்கள் நான் திருவனந்தபுரத்தில் இருந்திருந்தாலும் அவர்கள் எங்களை நன்றாகவே நடத்தினார்கள். மலையாளத்து நண்பர்கள் இப்போதும் தொடர்கிறது. அதைவிட அங்கிருக்கும் நம்மவர்களும் அதிகம் குறைவாகப் பேசுவதுண்டு. திருவனந்தபுரத்தில் இருக்கும் என் தங்கை, திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து கல்யாணத்திற்குப் பின் சென்னையில் இருக்கும் மற்றொரு தங்கை உட்பட.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரிந்து அங்கே வேலைக்கான அனுமதி விசா வாங்கிச் செல்பவர்களின் பெற்றோர், கூடப் பிறந்தவர்கள் ஆகியவருக்கே அங்கே வர விசா கொடுக்கிறார்கள் என நினைக்கிறேன். 2 வருஷத்துக்கு முன்னர் என் கடைசி நாத்தனார் அங்கே குவெய்த்தில் இருக்கும் மச்சினர் பையரிடம் போய் நாலு மாசம் தங்க விசா விண்ணப்பித்தபோது நிராகரித்துவிட்டார்கள். டூரிஸ்ட் விசா 2 வாரங்களுக்கோ 3 வாரங்களுக்கோ மட்டும் தான் தருவோம் என்றதாய்க் கேள்விப் பட்டேன். எங்களுக்கு அங்கே நெருங்கிய உறவு இருந்தும் துபாய், மஸ்கட் போகணும்னு ஆவல் எல்லாம் வரவில்லை.

   Delete
  2. /எங்களுக்கு அங்கே நெருங்கிய உறவு இருந்தும் துபாய், மஸ்கட் போகணும்னு ஆவல் எல்லாம் வரவில்லை.// வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு முறை செல்லுங்கள் கீதா அக்கா. நீங்கள் அமெரிக்கா செல்லும் பொழுதோ அல்லது வரும் பொழுதோ ஜர்னியை பிரேக் பண்ணி துபாயில் இரண்டு நாள் இருந்து விட்டுச் செல்லலாம்.

   Delete
 14. அக்கா அப்போ உங்களுக்கு எல்லாமே புதிசாக இருந்திருக்கும். நீங்க கத்துக்குட்டி இல்லையா அப்புறம் உங்கள் வேலைத்திறன் உங்களுக்கு நல்ல நட்புகளும் கிடைத்திருக்கும். சுவாசியமா போகிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நல்ல நண்பர்கள், நல்ல அனுபவங்கள்,  பாடங்கள்  எல்லாமே  கிடைத்தன. நன்றி கீதா.  

   Delete
 15. மிக நேர்த்தியாக பேனாவினால் வரைகின்றாய் பானு. இதே போல் உன் வேலை, உன் நட்பு, உன் சுற்றுப்புறம் எல்லாவற்றிலும் யாவரையும் மிஞ்சியிருப்பாய் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தொடரட்டும். காத்திருப்பேன்.

  ReplyDelete
 16. இன்றுதான் உங்கள் மூன்று பதிவையும் படிக்க நேரம் கிடைத்தது......வெளிநாட்டு பயணங்கள் வாழ்க்கை அனுபவும் எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்... அதுவும் முதல் பயணம் அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதாக இருக்கும்... தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்

  ReplyDelete
 17. நன்றி சத்யா உங்களை எல்லோரும் ட்ரூத் என்கிறார்கள். நான் அதையே மொழி பெயர்த்தேன். ஹி ஹி!

  ReplyDelete