கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, July 21, 2020

கடலைக் கடந்து...

கடலைக்  கடந்து... 

திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டாலும் விசா கிடைக்காததால் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கணவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. இறை அருளால் விசா வந்தது, அதுவும் எம்ப்ளாய்மெண்ட் விசா. என் கணவர் வேலை பார்த்த மினிஸ்ட்ரியிலேயே, அதே இலாகவிலேயே வேலை கிடைத்தது. இதில் சிறப்பு என்னவென்றால்

அந்த வருடத்தில்தான் அந்த ஊர் அரசாங்கம் வெளி நாட்டவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு, அந்த இடத்தில் அன்னாட்டு மக்களுக்கு வேலை தர வேண்டும் என்னும் திட்டத்தை அமல் படுத்த தொடங்கியிருந்தது. அப்படி ஒரு சந்தர்பத்தில் அரசு வேலை கிடைத்தது நிஜமாகவே தெய்வச்செயல்தான். அதனால்தான் “முதன் முதலாக குடித்தனம் போகும்போது ஏன் மார்கழியில் அனுப்புகிறீர்கள்? என்று சிலர் கேட்டதற்கு என் அம்மா, “இத்தனை நாட்கள் காத்திருந்து விசா கிடைத்திருக்கும் பொழுது தை பிறக்கும் வரையெல்லாம் காத்திருக்க முடியாது” என்று கூறி விட்டார். 

டிசம்பர் 14, விசா கிடைத்தது. ஜனவரி ஆறு நான் மஸ்கட்டில் வேலையில் சேர்ந்தாக வேண்டும். புயல் வேகத்தில் வேலைகள் நடந்தன. சாம்பார் பொடி, தோசை மிளகாய்ப் பொடி போன்றவை அரைக்கப்பட்டன. இதற்கிடையே சென்னை பாஸ்போர்ட் அலுவலகம்(அப்போது திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம் கிடையாது) சென்று இமிக்ரேஷன் க்லியரன்ஸ் நாட் ரெகயர்ட் என்று பாஸ்போர்டில் ஸ்டாம்ப் வாங்கி வர வேண்டும். 

அதற்காக சென்னைக்குச் சென்ற நான் என் அத்தை வீட்டிற்கு சென்ற பொழுது, என் அத்தை மகன்,”உனக்கு நாளை ஒருநாள்தான் இருக்கிறது. வெள்ளியன்று கிருஸ்மஸ் அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள், அதனால் இப்போதே சாஸ்திரி பவன் செல்” என்றார். அவர் இருந்தது அடையாறு காந்தி நகர். அப்போதெல்லாம் ட்ராஃபிக் அதிகம் இல்லாததால் அடையாரிலிருந்து சாஸ்திரி பவனுக்கு சீக்கிரம் சென்று விட்டோம். ஆனால் ஐ.சி.என்.ஆர் வாங்குவதற்கு அசோக் நகரிலிருக்கும் அலுவலகம் செல்ல வேண்டும் என்றார்கள். ஏற்கனவே மாலை நான்கு முப்பது ஆகி விட்டது. எனவே மறு நாள் காலை அசோக் நகர்  பாஸ்போர்ட் அலுவலகம் சென்றோம். அங்கு பாஸ்போர்ட், விசா இவைகளின் ஜெரொக்ஸ் காபி எடுக்க வேண்டியிருந்தது. சோதனையாக அப்பொழுது பார்த்து அசோக் நகரில் பவர் கட்! என்னுடன் வந்திருந்த என் மாமா பையன் மிகவும் பதட்டமாகி விட்டான். நான் வேண்டுமானால் மாம்பலம் சென்று “ஜெராக்ஸ் காபி எடுத்து வருகிறேன்” என்று அவன் கிளம்பிய பொழுது மின்சாரம் வந்தது. ஐ.சி.என்.ஆர் வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு திருச்சி திரும்பினேன்.

அடுத்து நான் சந்தித்தது டிக்கெட் சோதனை…    


22 comments:

  1. பரபரப்பு குறையாமல் எழுதி இருக்கின்றீர்கள்...

    அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. நமக்கென்று விதித்திருந்தால் யாரால் மாற்ற முடியும்?   இந்தச் சூழ்நிலையிலும் வேலை கிடைத்தது, அப்புறம் அதற்கான அலைச்சல்களில் வென்றது எல்லாமே அவன் செயல்.

    ReplyDelete
  3. ஏற்கெனவே படிச்சேன். அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.

    ReplyDelete
  4. எத்தனை பரபரப்பான நேரங்களாக அவை இருந்திருக்கும். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. பானு, சும்மா சினிமா கதை தோரனையில் போயிண்டிருக்கு உங்களுடைய நடை. மிக அழகாக கதையை வடிக்கின்றீர்கள். தொடரட்டும் உங்கள் வாழ்க்கை கதை. ஆவலுடன் அடுத்தக் கட்டத்தை எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  6. எல்லாம் சிறப்பாக நடந்தது இல்லையா

    ReplyDelete
    Replies
    1. என் ராசி அப்படி,எதுவும் சுலபத்தில் நடந்து விடாது. வருகைக்கு நன்றி. 

      Delete
    2. ஹா ஹா ஹா பானுக்கா +1

      கீதா

      Delete
  7. வணக்கம் சகோதரி

    சுவாரஸ்யமான எழுத்து. இரண்டு வருடங்கள் காத்திருந்து அம்மன் அருளால் விசா கிடைத்தும் இவ்வளவு இடர்பாடுகளா? ஆனால், உங்களை அங்கேயே வேலைக்கு அழைத்திருப்பது ஒரு நல்ல நேரந்தான்..! அந்த சமயத்தில் அடுத்து டிக்கெட் பிரச்சனையா? .. அதுவும் சரியாகி நீங்கள் அங்கு அவர்கள் அழைத்த நேரத்தில் வேலையில் அம்மனருளால் ஜாயின் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர காத்திருக்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. என் ராசி அப்படி,எதுவும் சுலபத்தில் நடந்து விடாது.கருத்துக்கு நன்றி. 

    ReplyDelete
  9. இடர்களை வெற்றி கொண்டு கடலை கடந்து பணியில் சேர்ந்த

    உங்கள் நினைவுகளை படிக்க தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. அக்கா கிட்டத்தட்ட என் அனுபவம் போலவே இருக்கு!!! அலைந்த விஷயத்தைச் சொன்னேன்! தொடர்கிறேன்

    கீதா

    ReplyDelete
  11. நாமெல்லாம் ஒரு குழு. நன்றி  கீதா.

    ReplyDelete
  12. //அந்த வருடத்தில்தான் அந்த ஊர் அரசாங்கம் வெளி நாட்டவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு, அந்த இடத்தில் அன்னாட்டு மக்களுக்கு வேலை தர வேண்டும் என்னும் திட்டத்தை அமல் படுத்த தொடங்கியிருந்தது. அப்படி ஒரு சந்தர்பத்தில் அரசு வேலை கிடைத்தது//

    எனது நிலையும் இப்படியே...

    ReplyDelete