கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, September 22, 2020

அதிக மாசம்!

அதிக மாசம்! - மல மாதம்! 


இப்போது பிறந்திருக்கும் புரட்டாசி மாதம் அதிக மாசம் அல்லது மல மாதம் எனப்படும். எந்த மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பௌர்ணமிகள் வருகிறதோ, அந்த மாதத்தில்  திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக் கூடாது என்பதாலேயே அது மல மாதம் எனப்படும். இந்த வருட புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள். 

*நம் நாட்டி இரண்டு விதமான பஞ்சாங்கங்கள் பின்பற்றப் படுகின்றன. ஒன்று சௌரமானம், மற்றது சாந்திரமானம். மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள பன்னிரெண்டு ராசிகளுள் சூரியன் பிரவேசிப்பதை மாதப் பிறப்பாக கொள்ளும் முறைக்கு சௌரமானம் என்று பெயர். இதை இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டுமே கடைபிடிக்கின்றன.  அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் மாதம் பிறப்பதாக கொள்ளும் சாந்த்ரமான முறையைத்தான் மற்ற மாநிலங்கள் கடை பிடிக்கின்றன. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளைத்தான் சித்திரை வருடப் பிறப்பு என்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால், பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையை வருடப் பிறப்பாக யுகாதி என்று தெலுங்கர்களும், கன்னடியர்களும்  கொண்டாடி விடுவார்கள். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் அடுத்த மாதம் பிறக்கும். இதன்படி ஒரு அமாவாசை,ஒரு பௌர்ணமி சேர்ந்தது ஒரு மாதம். நடைமுறையில் இதில் ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் வராது. அதாவது ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் வராது. ஒரு வருடம் என்பது 365 1/4 நாட்கள் கொண்டது.   அதனால் இந்த வித்தியாசத்தை சரி கட்டுவதற்கு சாந்திரமாசத்தினர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பன்னிரெண்டு மாதத்தோடு இன்னொரு மாதத்தை சேர்த்து அதிக மாதம் என்பார்கள். அந்த மாதத்தில் சுப கார்யம் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த மாதத்தில்  கோவிலுக்குச் செல்வது, தெய்வ வழிபாடுகள் செய்வது போன்றவை அதிக பலன் தரும் என்ற நம்பிக்கை உண்டு.  

இந்த மாதத்தின் சிறப்புகள்:

வருடத்தின் ஒவ்வொரு மாதமும் ஒரு தேவதைக்கு சமர்பிக்கப்பட்டதாகவும், இந்த அதிக மாசம் மல மாதம் என்று கருதப்பட்டதால் அதை ஏற்றுக் கொள்ள மற்ற தெய்வங்கள் மறுத்து விட, புருஷோத்தமனான ஸ்ரீமன் மஹாவிஷ்ணு ஏற்றுக் கொள்கிறார் என்பது ஒரு புராணக் கதை.  எனவே இது புருஷோத்தம மாதம் என்றும் வழங்கப் படுகிறது.  இந்த மாதத்தில் புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.  விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், பாகவத படனம், தேவி பாகவத பாராயணம் போன்றவை விசேஷ பலனை தரக் கூடியவை. தான தர்மங்கள் செய்வதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் சிறப்பான பலனைத் தரும் என்று நம்பிக்கை. 

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் அதிக மாதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். தினமும் விதம் விதமாக கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்வார்கள்.  அழகான ரங்கோலி, நவ தானிய கோலம் என்று என்றெல்லாம் பார்க்கவே அழகாக இருக்கும். 

ஸ்ரீரெங்கத்தில் இந்த மாதத்தில் சப்த பிரகாரம் சுற்றுவார்கள். கொரோன இல்லாத காலத்தில் கும்பல் அதிகமாக இருக்கும். இந்த வருடம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. விரைவில் நிலைமை சீரடைய அந்த புருஷோத்தமனை பிரார்த்திக்கலாம்.  

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரன பேஷஜாத் 
நஸ்யந்தி சகலா ரோகா சத்யம் சத்யம் வதாம்யஹம்!



*-தகவல் தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி

18 comments:

  1. நல்ல உபயோகமான தகவல்களுடன் கூடிய இடுகை.

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள். அதிக் மாஸ் என்று இங்கே சொல்கிறார்கள்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  4. //விரைவில் நிலைமை சீரடைய அந்த புருஷோத்தமனை பிரார்த்திக்கலாம். //

    புருஷோத்தமனை பிரார்த்திப்போம்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. "வேலை வணங்குவதே வேலை.."என்று ஒரு பாடல் உண்டு. நாம் அதை மாலை வணங்குவதே வேலை என்று கொள்ள வேண்டியதுதான்.

      Delete
  5. அறியாத பல விசயங்களை இந்தப் பதிவின் மூலம் அறிந்தேன்...விரிவாகப் புரிந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

      Delete
  6. Replies
    1. என் இரண்டு பதிவுகளின் மூலம் உங்களை இறை நாமம் சொல்ல வைத்திருக்கிறேன் என்ற அளவில் மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மாதங்களின் நிலைப்பற்றி அழகாக விவரித்து சொல்லியுள்ளீர்கள். இம்மாதம் முழுமையும் புருஷோத்தமனை பணிந்து வழிபடுவோம். மஹா விஷ்ணு உலக மக்களை நலமுடன் காத்தருள அவரை தினமும் பிரார்த்திப்போம்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. தெய்வத்தின் குரலில் வாசித்ததை பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  9. அதிக மாசத்தைப்போலவே, அதிக வருஷம் என்று சார்வரியைக் கொண்டாடலாம், இல்லை, குறிப்பிடலாம். வியாதி, வெக்கை, மழை, வெள்ளம், நெருப்பு என்று எல்லாமே ஓவராத்தான் இருக்கு. இன்னும் மூணு மாசம் பாக்கியும் இருக்கு..

    ReplyDelete
  10. சார்வரி வருடம் முடிய இன்னும் ஆறு மாதங்கள்  இருக்கின்றன. இப்போதுதானே புரட்டாசி நடக்கிறது? வருகைக்கு நன்றி.  

    ReplyDelete
  11. அறிந்து கொண்டோம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. தெரிந்த தகவல்கள். இந்த இடுகையை ஏற்கெனவே முகநூல் மூலம் படித்துவிட்டேன். இங்கே வந்ததைக் கவனிக்கலை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete