தெய்வம் மனுஷ ரூபேண
கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, December 26, 2020
தெய்வம் மனுஷ ரூபேண
Friday, December 18, 2020
பய பக்தி
பய பக்தி
நாம் கோவிலுக்குச் சேரும் பொழுது பய பக்தியோடு செல்வோம். ஆனால் பயம் 90% பக்தி 10% என்று ஒரு கோவிலுக்குச் சென்றோம் என்றால் அது சோட்டாணிக் கரை பகவதி கோவிலுக்குச் சென்றதை கூறலாம்.
Wednesday, December 16, 2020
Saturday, November 28, 2020
அண்ணாமலையானுக்கு அரோஹரா!
அண்ணாமலையானுக்கு அரோஹரா!
கைலாயத்தில் ஒரு முறை உமா தேவியார் சிவ பெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தி விட, அந்த ஒரு நொடியில் அண்ட சராசரமும் இருண்டு விடுகிறது. இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், உமா தேவியை பூமிக்குச் சென்று தவம் புரிய ஆணையிடுகிறார். சிவனின் ஆணைப்படி திருவண்ணாமலையில் இருந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்து, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சிவ பெருமானின் உடலில் பாதியைப் பெறுகிறாள். அதனால்தான் கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வர கோலத்தில்தான் அண்ணாமலையார் எழுந்தருளுவார்.
ஸ்ரீரங்கம், அடுத்து உயரமான(217 அடி) கோபுரத்தை கொண்டது. 2668 அடி உயரமான மலையின் மீது ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப் படுகிறது. ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை எரிய வைக்க 3000கிலோ பசு நெய் தேவைப்படும். திரிக்கு 1000 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகின்றன. எரிந்த பஸ்மம் திருவாதிரை அன்றுதான் பிரஸாதமாக வழங்கப்படும்.
மலை வடிவில் இருப்பது சிவ லிங்கமே என்பதால் இதை வலம் வருவது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி அன்று இந்த மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு கிழமையில் கிரி வலம் செய்வதும் ஒரு சிறப்பான பலனைத்தரும்.
ஞாயிறன்று கிரி வலம் செய்தால் நோய்கள் நீங்கி, உலகில் அரசனைப் போல் வாழலாம்
திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்ய பாவங்கள் நீங்கி, போகங்களை அனுபவிக்க முடியும்.
செவ்வாய் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வர கடன்கள் தீரும், தரித்திரம் அகலும்.
புதன் கிழமைகளில் கிரிவலம் செய்தால் எல்லா கலைகளிலும் நிபுணத்துவம் பெறலாம். சாத்திர ஞானம் வாய்க்கும்.
வியாழக் கிழமைகளில் கிரிவலம் செய்ய தேவ முனிவர்களுக்கு தலைவனாகும் யோகம் வாய்க்கும்.
வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வர லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவின் திருவடிகளை அடையலாம்.
சனிக்கிழமைகளில் கிரி வலம் செய்யும் பொழுது நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பாதிப்புகளும் அகலும்.
முடிந்தபொழுது திருவண்ணாமலை சென்று வணங்கி வரலாமே. இயலாதவர்கள் இருந்து இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை மனதார வணங்கலாம். அண்ணாமலையனுக்கு அரோஹரா!
Tuesday, November 17, 2020
கேள்வி பிறந்தது கனவில், பதில் கிடைத்தது காரில்
ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னை விஜயம். கடந்த மார்ச்சில் சென்னை, அங்கிருந்து மதுரையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு பெங்களூர் திரும்பினேன். அப்போதே கொரோனாவும் தொடங்கி விட்டது. கூ்டவே லாக் டவுன், எங்கும் செல்ல முடியவில்லை.
கட்டுப்பாடுகளை தளர்திய பிறகு ஒரு முறை சென்னைக்கு வரச்சொல்லி சகோதரிகள் அழைத்துக் கொண்டிருந்தனர். தீபாவளி அன்று மாலை சகோதரிகள் வீடுகளுள் ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று் சேர்ந்து பட்டாசுகள் வெடிப்பது பழக்கம்.
தீபாவளியன்று காலை பெங்களூர் எங்கள் வீட்டில் எண்ணெய்,தேய்த்து குளித்து, சிம்பிளாக தீபாவளி கொண்டாடி விட்டு, எட்டே முக்காலுக்கு கிளம்பினோம். மதியம் ஒண்ணே முக்காலுக்கு சென்னையை அடைந்து விட்டோம். மதிய உணவறுந்தி விட்டு, சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டு மாலையில் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினோம். பட்டாசுகளை கண்டால் எனக்குள் இருக்கும் குழந்தை குதித்து வெளியே ஓடி வந்து விடுவாள்.
ஒரு வினோத கனவு:
தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. நான் கல்லூரி மாணவியாக இருக்கிறேன். எகனாமிக்ஸ் வகுப்பு. அதில் வகுப்பெடுக்கும் ஒரு பேராசிரியர்," இதில் ABCD என்பதன் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறி, விளக்குகிறார். அவர் சென்றதும் நான் அருகில் இருக்கும் மாணவியிடம்,"ABCD என்பதன் விரிவாக்கம் கூறினாரே, அது என்ன?" என்று கேட்கிறேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை. முழித்துக் கொண்டு விட்டேன்.
காரில் பயணித்த பொழுது, நியூ ஜெர்ஸியில் நடந்த கல்யாண மாலை பட்டிமன்ற நிகழ்ச்சியை (பழையது) கேட்டோம். குடும்ப வாழ்க்கை இனிப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா? என்பதுதான் தலைப்பு. இந்தியாவில்தான் என்று பேசிய ஒருவர், "இங்கிருப்-பவர்களில் ABCD என்று ஒரு பிரிவு உண்டு, America Born Confused Desi" என்றார். என் கனவில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விளக்கம் காரில் கிடைத்தது.
வழியில் சாய் சங்கீத்தில் காபிக்காக நிறுத்தினோம். அங்கு கண்ணை கவர்ந்தவற்றை க்ளிக்கினேன்.
![]() |
யாராவது வாங்கி ஊறுகாய் போடுவாரக்கள் என்று காத்திருக்கும் ஜாடிகள் |
![]() |
கோமதி அக்காவை நினைவூட்டின |
![]() |
இது யாரை நினைவூட்டியது என்று சொல்ல வேண்டுமா? |
Wednesday, November 11, 2020
புத்தம் புது காலை(விமர்சனம்)
புத்தம் புது காலை(விமர்சனம்)
Sunday, November 8, 2020
திருமண திருத்தங்கள்
திருமண திருத்தங்கள்
Saturday, October 24, 2020
மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்
மாறுவது பொம்மை, மாறாதது சுண்டல்
Thursday, October 22, 2020
மசாலா சாட் - 20
மசாலா சாட் - 20
Thursday, October 15, 2020
Friday, October 9, 2020
மைக் மேனியா
மைக் மேனியா
மூன்று வாரங்களுக்கு முன்பு முகநூலின் மத்யமர் குழுவில் ஒரு விவாதத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு மத்யமர் என்றால் என்ன என்று கூறி விடுகிறேன். முக நூலில் இருக்கும் எத்தனையோ குழுக்களில் மத்யமாறும் ஒன்று. சங்கர் ராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு இப்போது 30000 உறுப்பினர்களோடு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெறுமனே முகநூலில் அரட்டை அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொல்வார்கள். சிறந்த படைப்புகளுக்கு போஸ்ட் ஆஃப் தி வீக் என்று சான்றிதழ் வழங்குவார்கள். நம் ரஞ்சனி நாராயணன் நிறைய POTW வாங்கியிருக்கிறார். நானும் இந்த வருடத்தில் இதுவரை நான்கு POTW வாங்கியிருக்கிறேன். இதைத்தவிர தனித்திறமை, குழுத்திறமை, நாடகம், கவிதை என்றெல்லாம் நடத்தி பரிசுகள் வழங்குகிறார்கள். சமீபத்தில் புதன் கிழமைகளில் மத்யமர் சபா என்று விவாதங்கள் நடத்துகிறார்கள். அதில்தான் நான் பங்கு கொண்டு பேசினேன்.
இந்த மத்யமர் சபாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு நம் சமுதாயத்தில் ஆணாதிக்கம் முடிந்து பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது, இல்லை இன்னும் ஆணாதிக்கம்தான் தொடர்கிறது என்று பேச விருப்புகிறவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்கள். அடுத்த நாள் திரு.சங்கர் ராஜரத்தினம் அவர்கள், "என்னது பெண்ணாதிக்கம் தொடங்கி விட்டது என்று பேச யாருமே பெயர் கொடுக்கவில்லையே, அவ்வளவு பயமா?" என்று கேட்டிருந்தார். நான் உடனே," யாருமே முன்வரவில்லையென்றால் நான் பேசுகிறேன் என்று செய்தி அனுப்பினேன். உடனே, "நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை சுருக்கமாக ஒரு நிமிட ஆடியோவாக எடுத்து அனுப்புங்கள்" என்றார்கள். அதன்படி செய்து தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
அதில் இன்னும் ஆணாதிக்கம்தான் நீடிக்கிறது என்று கலிபோர்னியாவிலிருந்து பேசிய ஒரு பெண்மணி வெளுத்து வாங்கினார். அவர் வீட்டில் மகன், மருமகள் இருவருமே ஐ.டி.யில் பணிபுரிந்தாலும், மகன் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, மருமகள் அடுப்பங்கரையில் பிசியாக இருப்பாளாம். மாலை அலுவலகத்திலிருந்து வந்ததும் மகன் செல்போனுடனும், ரிமோட்டுடனும் சோபாவில் செட்டிலாகி விட, மருமகள் அவன் தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவாளாம். கோபம் அதிகமாகும் பொழுது மகனின் கை நீளுமாம். இப்படி அதிரடியாக பேசினார். பின்னூட்டங்களில் கூட அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.
அதே ஆண்டி மறு நாள், " ஐயையோ! என் மகன் தங்கம். வீட்டு வேலைகளை மகன்,மருமகள் இருவரும் பகிர்ந்துதான் செய்வார்கள். நான் என் வாதத்திற்கு வலு சேர்க்க உதாரணம் கொடுப்பதற்காக என் மகனை பயன்படுத்திக் கொண்டு விட்டேன். என் மகனும்,மருமகளும் இதை ஈசியாக எடுத்துக் கொண்டாலும் மற்ற உறவினர்களுக்கு என் மீது ரொம்ப கோபம். எங்கள் சம்பந்தியும் மத்யமரில் இருக்கிறார் அவர் என்ன நினைத்துக் கொள்வார்? தயவு செய்து நான் செய்த தவறை மற்ற பேச்சாளர்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று விரும்புகிறேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார். ஆண்டியின் ஆண்ட்டி க்ளைமாக்ஸ் எப்படி?
சிலருக்கு மைக்கை கையில் எடுத்து விட்டால் கீழே வைக்கத் தெரியாது, சிலருக்கு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதே தெரியாது. எல்லாம் மைக் மேனியா!
Sunday, September 27, 2020
இயல்பு நிலை திரும்புகிறதா?
இயல்பு நிலை திரும்புகிறதா?
கடந்த ஒரு மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் வெளியே செல்ல நேர்ந்தது. முதல் முறை சென்ற பொழுது சாலையில் அத்தனை வாகனங்கள் இல்லை. சென்ற வாரம் ஓரளவு நார்மல் போக்குவரத்து காணப்பட்டது. நேற்று கொஞ்சம் பர்சேஸ் செய்ய வேண்டியிருந்ததால் ஜெயநகர் சென்றோம். வழக்கமான நெரிசல் தொடங்கி விட்டது என்றே தோன்றியது. உணவகங்கள் திறந்து விட்டாலும் கும்பல் குறைவாகவே இருக்கிறது.
![]() |
ஆகஸ்ட் 15 அன்று மாலை எம்.ஜி.ரோட் |
![]() |
கொஞ்சம் ஜவுளி எடுக்க வேண்டியிருந்தது எனவே ஜெயநகரில் இருந்த வரமஹாலக்ஷ்மி கடைக்குச் சென்றோம். உள்ளே நுழையும் முன் நம் காலணிகளை ஒரு பையில் சேகரித்து டோக்கன் தந்தார்கள். எல்லா கடைகளையும் போல் ஹாண்ட் சானிடைசரை கையில் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தால் நடுவில் பிரதானமாக பெரிய மஹாலக்ஷ்மி சிலை. தரையில் பாய்கள் விரிக்கப்பட்டு அதன் மீது வெள்ளைத் துணியை விரித்து புடவைகளை காட்டுகிறார்கள். நாம் தரையில் உட்கார்ந்து பார்க்கலாம், கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியிலோ அல்லது குட்டை ஸ்டூலிலோ அமர்ந்து கொள்ளலாம். விற்பனை சிப்பந்திகள் பொறுமையாக, சலிக்காமல் புடவைகளை காண்பித்தார்கள். ஆனாலும் சென்னையில் ஜவுளிக் கடலில் ஷாப்பிங் செய்து விட்டு இங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது குற்றாலீஸ்வரனை நம்முடைய வளாகத்தில் இருக்கும் சிறு நீச்சல் குளத்தில் நீந்தச் சொன்னது போல் இருக்கிறது. பில்லை கட்டியதும் துணிகளை பையில் போட்டு அங்கிருக்கும் ஐயர் ஒருவர் அவைகளை மஹாலக்ஷ்மி உருவச்சிலை முன் வைத்து, தீபாராதனை காட்டி நம்மிடம் தந்தது வித்தியாசமாக இருந்தது.
![]() |
கும்பலில்லாத சென்ட்ரல் மாலில் அனாவசிய எக்ஸ்பிரஸ் பில்லிங் கவுண்டர் |
வீட்டிற்கு வந்ததும் முறையாக ஆவி பிடித்தோம். அதென்ன முறையாக என்கிறீர்களா? ஆவி பிடிக்கும் பொழுது முதல் ஐந்து முறைகள் மூக்கினால் ஆவியை இழுத்து, வாயினால் வெளி விட வேண்டும். பிறகு ஐந்து முறைகள் வாயினால் இழுத்து மூக்கினால் சுவாசத்தை விட வேண்டும். பின்னர் உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தோம்.
Tuesday, September 22, 2020
அதிக மாசம்!
Sunday, September 13, 2020
Thursday, September 10, 2020
இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?
இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?
Sunday, September 6, 2020
மஹாபெரியவர் தரிசன அனுபவங்கள்
மஹாபெரியவர் தரிசன அனுபவங்கள்
Monday, August 31, 2020
கடலைக் கடந்து - 6
கடலைக் கடந்து - 6
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் பணி ஒய்வு பெற்று சென்ற ஒருவருக்கு விடையளிக்கும் வைபவம் நடந்தது. எங்கள் அலுவலகத்தின் டைரக்டர், மற்றும் பல்வேறு டிபார்மென்டுகளின் தலைவர்கள் ஒரு அறையில் குழுமியிருக்க, எல்லோருக்கும் கேக், சமோசா, மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. முதல் வரிசையில் நின்று கொண்டிருந்த நான் குளிர் பான டின்னை சற்று வேகமாக திறந்து விட புஸ்ஸென்ற சீறலோடு வெளிப்பட்ட அது எதிரே அமர்ந்திருந்த ஒரு தலைமை அதிகாரியின் உடையில் தெறித்தது. ஒரு பக்கம் அவமானம், ஒரு பக்கம் பயத்தோடு நான் மன்னிப்பு கோர, அந்த ஓமானிய அதிகாரி,"நோ ப்ராப்லம், மூர்த்தி இஸ் மை பிரதர், யூ ஆர் ஹிஸ் ஒய்ஃப்" என்று மிகவும் பெருந்தன்மையோடு கூறி விட்டார். நல்லவேளை நான் மிராண்டாவோ, பெப்ஸியோ எடுத்துக் கொள்ளாமல் ஸ்ப்ரைட் எடுத்துக் கொண்டிருந்தேன். அவருடைய வெள்ளைவெளேர் திக்தாஷா தப்பித்தது.
எங்கள் அலுவலகத்தில் ஓத்மான் என்றொரு ஜான்சிபாரி மருத்துவர் இருந்தார். அவர் இடைவிடாமல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பார். ஒருமுறை என்னிடம் டைப் செய்ய கொடுத்து விட்டு, அதைப் பற்றி புகையும் சிகரெட்டோடு அவர் விளக்க, அப்போது கர்ப்பிணியாக இருந்த எனக்கு குமட்டியது. அவரிடம், "டாக்டர், ஐ காண்ட் பேர் திஸ் ஸ்மெல், கேன் யூ புட் ஆஃப் யுவர் சிகெரெட்?" என்றதும், "டெஃபனெட்லி" என்று சிகெரெட்டை அணைத்தார். என் அதிகப் பிரசங்கித்தனத்தை அவர் தவறாக நினைக்கவில்லை. அவருக்கு நம் ஹிந்தி படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதுவும் அதில் பறந்து பறந்து கதாநாயகன் போடும் சண்டையை மிகவும் ரசிப்பதாக சொல்வார்.
எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு எகிப்திய பெண்மணி ஒரு நாள் என்னிடம், தனக்கு ஒரு ஹிந்தி நடிகையை மிகவும் பிடிக்கும் என்றும், அவள் பெயர் என்ன என்றும் கேட்டாள். இப்படி சொன்னால் எப்படி? அவள் எப்படி இருப்பாள்? என்று நான் கேட்டதும், " ஷி இஸ் டால், ஷி ஐஸ் பியூட்டிஃபுல், ஷி ஹாஸ் பிக் ஐஸ்." என்றெல்லாம் சொன்னதும், நான், ரேகா?, ஸ்ரீதேவி? என்றெல்லாம் பெயர்களை அடுக்கினேன். அவளோ, "நோ நோ ..ஷி அக்டேட் இந்த பிலிம் சிங்கம்" என்றதும் எனக்கு பொறி தட்டியது, "யூ மீன் சங்கம்..?" என்றதும் "எஸ்! எஸ்!" என்று ஆமோதித்தாள். கடவுளே! இன்னும் எத்தனை காலம் வைஜயந்தி மாலாவையே கொண்டாடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டேன்.
பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொழுது இன்னொரு எகிப்திய பெண்மணி," எனக்கு இந்திய பெண்களை மிகவும் பிடிக்கும். இந்தியப் பெண்கள் கருமையான கூந்தலும், கருமை நிறக் கண்களும் கொண்டவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்திற்காகவும், கணவனுக்காகவும் எத்தனை தியாகங்கள் செய்கிறார்கள்? கணவன் அடித்தால் கூட பொறுத்துக்க கொள்கிறார்கள், நான் இந்தியப் படங்களில் பார்க்கிறேனே.." என்பார். வடிவேலுவை கோவை சரளா டின் கட்டும் படங்களை அவர் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
Wednesday, August 19, 2020
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே?
கொரோனாவின் நேரடி விளைவுகள் நோய், மரணம், வெளியே செல்ல முடியாதது, கோவில்,சினிமா, திருவிழாக்கள் எல்லாவற்றிர்க்கும் தடை. வேலை இழப்பு, சம்பளம் கட். இதன் மறைமுக விளைவுகள் மன உளைச்சல், மற்றும் பெருகி வரும் திருட்டுகள், குறிப்பாக ஆன் லைன் திருட்டுகள்.
வங்கியிலிருந்து பேசுகிறோம், என்று அழைத்து நம் கணக்கு முடக்கப்படும் என்று பயமுறுத்தி விவரங்களை பெற்று கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு முறை. இதிலாவது நாம் விவரங்கள் கொடுத்தால்தான் அவர்களால் பணத்தை எடுக்க முடியும். இன்னொரு மிகவும் ஆபத்தான ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய செல் போனை அப்படியே கடத்தி விடுகிறார்கள்.
எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் ஏதோ கூரியர் அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய கூரியரை டிராக் செய்து பார்த்திருக்கிறாள். ஒரு நாள் அவளுக்கு ஒருவன் தான் கூரியர் கம்பெனியிலிருந்து அழைப்பதாகவும் அதில் பின்கோட் தெளிவாக இல்லை, என்றும், அவன் சொல்லும் ஒரு ஆப் ஐ டவுன்லோட் செய்யும்படியும் கூறியிருக்கிறான். முதலில் அந்தப் பெண் அவன் சொன்னதை கேட்க்கவில்லை. அதனால் அவன் அந்தப் பெண்ணின் அப்பாவை செல்போனில் அழைத்து, "உங்கள் மகளை இந்த ஆப் ஐ டவுன்லோட் பண்ணச் சொல்லுங்கள் அப்போதுதான் எங்களால் கூரியர் அனுப்ப முடியும்" என்று கூற, அவளுடைய அப்பாவும் அந்தப் பெண்ணிடம் ஆப் ஐ டவுன்லோட் பண்ணும்படி கூறியிருக்கிறார். அந்தப் பெண் ஆப் டவுன் லோட் செய்தவுடன் அவள் போன் அடுத்த நிமிடம் அவளுடைய அவளுடைய செல் போன் ஸ்க்ரீன் மிரரிங் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிராள் , பிறகு என்ன? அவள் கண்ணெதிரிலேயே அவள் கணக்கிலிருந்து பணம் சூறையாடுப்படுவது தெரிந்திருக்கிறது, என்றாலும் அதை தடுக்க முடியவில்ல. ஸ்க்ரீன் மிர்ரரிங் செய்யப்= பட்டிருப்பதால் ஆன் லைன் பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ் வார்ட் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது. முப்பது வினாடிக்குள் முப்பதாயிரம் அபேஸ்! இம்மாதிரி சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைப்பது பெரும்பாலும் பெண்களைத்தான். எச்சரிக்கையாக இருங்கள் தோழிகளே.
புதிதாக எந்த ஆப் ஐயும் டவுன்லோட் செய்ய வேண்டாம் குறிப்பாக உங்கள் கை ரேகையை பதிவு செய்யச் சொல்லும் ஆப்புகள் நமக்கு அப்பு வைத்து விடும் அபாயம் உண்டு. பே டி எம், கூகிள் பே என்று எல்லாவற்றையும் பயன் படுத்த வேண்டாம். அவை ஏதாவது ஒன்றை ஹாக் செய்தாலும், அதன் மூலம் மற்றவற்றையும் சுலபமாக ஹாக் பண்ண
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் தொலைகாட்சியில் நான் பார்த்த செய்திகளில் என்னைக் கவர்ந்த இரண்டு செய்திகளை சொல்கிறேன் கேளுங்கள்
சிறுவயதில் நாமெல்லாம் மயிலறகு குட்டிப் போடும் என்று நம்பி, அதை நோட்டு புத்தகத்திற்குள் மறைத்து வைப்போம். அது ரசிக்கக் கூடிய அப்பாவித்தனம். கிட்டத்தட்ட அதைப்போலவே ஒருவர் பொன் நகைகளை பூமியில் புதைத்து வைத்தால் அவை இரட்டிப்பாக பெருகும் என்று ஒரு போலி மந்திரவாதி கூறியதை நம்பி அறுவது சவரன் நகைகளை தன் வீட்டின் பின் புறம் புதைத்து வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து அந்த இடத்தில் தோண்டி பார்க்க, நகைகள் எதுவும் இல்லை. மந்திரவாதியிடம் கேட்டதற்கு,"உலகத்தில் எதுவும் சரியில்லை அதனால்தான் நகைகள் காணாமல் போய் விட்டன' என்று கூறியிருக்கிறான். அப்போது முழித்துக் கொண்ட அந்த புத்திசாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலி மந்திரவாதியை போலீஸ் கைது செய்திருக்கிறது. "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?"
அடுத்த செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குளியல் அறையில் இருக்கும் ஷவர் சரியாக இல்லையாம். அது அவர் குளிக்கும் பொழுது அவருடைய பின் மண்டையை சரியாக நனைப்பதில்லையாம், எனவே அதை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதை சரி பார்த்து மாற்றித் தர வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறதாம். எப்..பூ..டி?
---------------------------------------------------------------------------------------------------------------------------
தூங்காதே தம்பி தூங்காதே
Thursday, August 13, 2020
மும்மொழிக் கொள்கையும், ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும்
மும்மொழிக் கொள்கையும்,
ஐஸ்வர்யாவும், அப்துல் கலாமும்
Tuesday, August 11, 2020
கோகுலாஷ்டமி நினைவுகள்.
கோகுலாஷ்டமி நினைவுகள்.
எல்லா பண்டிகைகளின் பொழுதும் அம்மாவின் நினைவு வரும். குறிப்பாக கோகுலஷ்டமியிலும், நவராத்திரியிலும், தீபாவளியின் பொழுதும் அம்மாவின் நினைவை தவிர்க்கவே முடியாது.
Saturday, August 8, 2020
உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும்