கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 16, 2021

திருவெம்பாவை - 1

 திருவெம்பாவை



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பாவை நோன்பு என்பது நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்கவும் பெண்கள் அனுசரிக்கும் நோன்பு.

மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு நாயகன்,நாயகி பாவத்தில் திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையாரை துதித்து பாடியதுதான் திருவெம்பாவை பாடல்கள். இதில் முதல் ஒன்பது பாடல்கள் முதலில் எழுந்த பெண்கள், விடியற்காலையில் எழுந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவதாக கூறிவிட்டு, எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புவதாக அமைந்திருக்கும். 

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பதை போல, முதல் பாடலின் முதல் வரியிலேயே யாரைக் குறித்து இந்த பாடல்கள் பாடப்பட்டன என்று தெளிவு படுத்தி விடுகிறார். 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாக எழுந்து, உயர்ந்து நின்றவன் அந்த அண்ணாமலையான் தானே? அப்படிப்பட்ட அந்த அண்ணாமலையானின் பெருமைகளை நாங்கள் பாடக் கேட்டும் பெரிய கண்களை உடைய பெண்ணே  நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே? உன் செவிகள் என்ன இரும்பாலானவையா? 
வீதியில் யாராவது சிவபெருமானின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை கேட்டாலே உணர்ச்சி வசப்பட்டு அழுவாயே? இப்போது நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து சிவநாமத்தை சொல்கிறோம், நீயானால் எழுந்து வராமல் மெத்தையிலே புரண்டு கொண்டிருக்கிறாய். இதுதான் உன் சிறப்பா?
 

22 comments:

  1. நல்ல விளக்கம் பானுக்கா.

    கீதா

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை முதல் பாடலின் விளக்கத்தை நன்றாக விளக்கி கூறியுள்ளீர்கள். ஆதியும் அந்தமும் இல்லாது ஜோதியாய் நின்று உலகை காக்கும் எம்பெருமானை எந்நாளும் போற்றி வழிபடுவோம். சிவாயநம ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  4. மார்கழி மாதத்தில் திருப்பாவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் திருவெம்பாவைக்கு அளிக்கப்படுவதில்லையோ என்ற எண்ணத்தில் ஒரு அறிமுகம் போன்ற விளக்கம் தான் நான் அளித்திருப்பது. நீங்கள் எல்லோரும் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியையும், கொஞ்சம் பயத்தையும் தருகிறது. தொடரும் எல்லோருக்கும் மிக்க நன்றி 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பானுக்கா. எங்கள் வீட்டில் இரண்டுமே சொல்லுவோம்.

      கீதா

      Delete
  5. என் உளமார்ந்த இறைவனைப் பற்றிய பதிவை மிகவும் ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  6. தெருவெம்பாவை பாடலும், விளக்க்மும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா. நீங்கள் ஒரு முறை ‌‌உங்கள் ப்ளாகில் திருவெம்பாவைக்கு விளக்கம் எழுதியிருக்கிறீர்களோ?

      Delete
  7. அருமையான விளக்கம் வாழ்த்துகள்..

    ReplyDelete