கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 17, 2021

திருவெம்பாவை பாடல் 2

திருவெம்பாவை பாடல் 2




பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் 
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் ஒரு பெண்ணை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தவர்கள் அடுத்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. வாசலில் நிற்பவர்களுக்கு அலுப்பாக இருக்கிறது ஏனென்றால் இந்த பெண் எப்படிப்பட்டவள் என்றால், இரவும் பகலும் தோழிகளோடு பேசும் பொழுதெல்லாம் தனக்கு மிகவும் விருப்பமானவர் பரஞ்சோதியாகிய அந்த சிவபெருமான்தான் என்று கூறுகிறவள். ஆனால் இன்று இன்னும் எழுந்திருக்காமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே நிற்கும் தோழிகள் சற்றே கேலியாக," அழகான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணே,எங்களிடம் சிவபெருமான்தான் என் பாசத்திற் குரியவர் என்று கூறினாய். ஆனால் உன் பாசம்  படுக்கையின் மீதுதான் என்று புரிந்து விட்டது"  என்றதும் உள்ளே இருப்பவளுக்கு கோபம் வந்து விடுகிறது. "நீங்களும்தான் அழகான ஆபரணங்களை அணிந்திருக்கிறீர்கள். என்னை கேலி செய்து ஏசும் நேரமா இது? நாம் எல்லோருமே தேவர்களுக்கு கூட காட்ட விரும்பாத தன்னுடைய திருவடியை பக்தர்களுக்கு காட்டி அருளக்கூடிய, தில்லையில் இருக்கும் ஈசனின் அன்பர்கள் தானே?" என்று சமாதானமாக பேசி சமாளிக்கிறாள். 




19 comments:

  1. சிறப்பு. தொடரட்டும் பாடலும் விளக்கமும்.

    ReplyDelete
  2. மிக சிறப்பு ...

    ReplyDelete
  3. திருப்பாவை பாடல் 2 எனத் தலைப்புச் சொன்னாலும் பாடலும் விளக்கமும் திருவெம்பாவை இரண்டுக்காக வந்திருக்கு. தொடருங்கள். நானும் கூடவே வரேன்.

    ReplyDelete
  4. விளக்கம் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. பானுக்கா

    கீதா

    ReplyDelete
  5. ஈசனுக்கான திருவெம்பாவை இரண்டாம் நாள் பாடலின் விளக்கம் நன்று

    துளசிதரன்

    ReplyDelete