கனடா டைரி
இங்கு வசந்த காலத்தில் மேப்பில் ஃபெஸ்டிவல் என்று ஒன்று கொண்டாடப்படும். அதைப் பற்றி சென்ற வருடமே எழுதி விட்டதால் இந்த வருடம் அதைப் பற்றி எழுதவில்லை.
அங்கிருக்கும் கடைகளை பார்வையிட்டபொழுது இரண்டு கேரவன் களைப் பார்த்தேன். ஒரு கேரவன் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமே என்று உள்ளே சென்று பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.
![]() |
| உட்கார சோஃபா, பின்னால் தெரிவது பெட் |












படங்கள் சுவாரஸ்யம். சிரிக்கும் சிங்கக்குழந்தைக்கு அருகில் அலுப்பாக ஒரு நாய்!!
ReplyDelete:)))
Deleteகேரவன் உள்ளேயே கழிவறையும் இருக்கிறது. எல்லா வசதியும் தெரிகிறது!! பணம்!
ReplyDeleteகிச்சன் இருக்கும்பொழுது கழிவறை வேண்டாமா? ஒரு வகையில் ஆமை போல வீட்டை முதுகில் சுமந்து செல்கிறோமோ?
Deleteகேரவன் படங்கள் நல்லா இருக்கு.
ReplyDeleteஇதுலேயே வாழ்வாங்களா இல்லை இதை உபயோகித்து விற்கும் இடங்களுக்குச் சென்று கடை பரப்புவாங்களா?
இது விற்பனையாளர்களுக்கு அல்ல. குடும்பத்தோடு யாத்திரை செல்லும் பொழுது பயன்படுத்த.
Deleteநம்மூரில் கேரவன்கள் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைக்கவும் மற்ற விஷயங்களுக்காகவும் உபயோகப்படும்.
ReplyDeleteநம் ஊர் சினிமாக்காரர்கள் பயன்படுத்தும் கேரவன்கள் இன்னும் அதிக வசதியோடு இருக்கும் என்று நினைக்கிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகனடாவைச் பற்றிய பதிவு அருமை. படிக்க நன்றாக உள்ளது. படங்களும் அங்குள்ள கேரவன் படங்களும், மற்ற படங்களும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன்.
சிங்க முகமூடி போட்டவரைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. ஆனாலும் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்ட வண்ணம் சமாளித்து நிற்கிறது. எல்லாப் படங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கமலா!
Delete