கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, July 27, 2026

மேட் இன் இந்தியா -டைட்டன் ஸ்டோரி

  

மேட் இன் இந்தியா -டைட்டன் ஸ்டோரி 

 


ஒரு காலத்தில் ஃபாரின் பொருள்கள் இந்தியாவில் கிடைக்காது. அப்போதெல்லாம் டேப் ரிகார்டர் என்றால் நாட்டு ஃப்லிப்ஸ், புஷ் போன்றவைகளை விட நேஷனல் பேனசானிக், அக்காய் போன்றவை வைத்திருப்பது அந்தஸ்தான ரு விஷயமாக கருதப்பட்டது. 70களில் கல்ஃப் பூம் நிலவிய காலத்தில் அங்கிருந்து வருபவர்கள் கண்டிப்பாக நேஷனல் பேனசானிக் டேப் ரிகார்டர் கையில் வைத்திருப்பார்கள். அவர்களிடம் யார்ட்லி சோப், யார்ட்லி பௌடர், செண்ட் போன்றவை கிடைத்தால் புளகாங்கிதம் அடைவார்கள். பர்மா பஜாரில் சொல்லி வைத்து சிடிசன் வாட்ச், சீகோ வாட்ச் போன்றவைகளை வாங்கி, அதை கட்டிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள் உண்டு 

அந்த நேரத்தில் வெளிநாட்டு கைகடிகாரங்களுக்கு இணையான தரத்தில் ஒரு வாட்சை தயாரிக்க நினைத்த ஜே.ஆர்.டி. டாடா ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு கூட்டு சேர விரும்பி அவர்களை அணுக,கைக்கடிகாரங்களை தயாரிப்பதில் தங்கள் அளவுக்கு இந்தியர்களுக்கு திறமையோ, தொழில்நுட்ப அறிவோ கிடையாது என்று றுத்து விடுகிறது. உலகத்தரத்தில் கை கடிகாரங்களை தயாரிக்கும் வரை தான் கை கடிகாரமே கட்ட மாட்டேன் என்று டாடா முடிவெடுக்கிறார் 

அதன் பிறகு கைகடிகாரங்களைத தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்குவதிலும், கடிகார உற்பத்தியிலும், அதை மார்கெட் பண்ணுவதிலும், உலக சந்தைக்கு எடுத்துச் செல்வதிலும் ாடா நிறுவனம் சந்தித்த சவால்கள், பிரச்சனைகள், அடைந்த வெற்றி இவைகளை சுவாரஸ்யமான தொடராக ஆறே எபிசோட்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

டாகுமெண்ட்ரி போல இல்லாமல், உண்மை சம்பவங்களோடு கற்பனையும் கலந்த கதையா படைத்திருப்பதை பாராட்ட வேண்டும் 

பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை நடிக்க வைத்திருப்பது சிறப்பு. ஜே.ஆர்.டி.டாடா ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார் நசுருதீன்ஷா. செர்ஸக்ஸ் தேசாய் ரோலில் ஜிம் சர்ப் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். இந்த சீரியலில் கதா பாத்திரங்கள் குறைவு, ஆனால் அவர்களின் பங்களிப்பு நிறைைவு. காட்சிகளின் ஆழத்தை கூட்டி மேம்படுத்துகிறது பின்ணனி இசை. 

இந்த சீரீஸை இயக்கி, நம்முடைய பெருமையை நமக்கு உணர்த்தியிருக்கும் ராபி க்ரேவலுக்கு நம் நன்றி. தவற விடாமல் பாருங்கள் 



No comments:

Post a Comment