கணம்தோறும் பிறக்கிறேன்
Thursday, August 6, 2020
கடலைக் கடந்து - 5
Monday, August 3, 2020
ஆடியில் ஆவணி அவிட்டமா?
Friday, July 31, 2020
மசாலா சாட் - 19
மசாலா சாட் - 19
எப்பொருள் யார்யார் கை பெற்றாலும்
அப்பொருள் சானிடைஸ் செய்வதறிவு
மாஸ்க் என்ப சானிடைசரென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப கோவிட் காலத்திற்கு
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை மாஸ்க்
அணியாதான் நலம்போல் கெடும்
என்னது உன் மகனும் மருமகளும் உன்னை வெளியில் தள்ளி கதவை சாத்திட்டாங்களா?
ஆமாம், ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ரூமில் உட்கார்ந்து, கதவை சாதிக் கொண்டு ஒர்க் ஃப்ரம்
ஹோம் பண்ராங்க , நான் ஹாலில்... :((
கீழே இருக்கும் ஓவியங்கள் என் மருமகளின் சித்தி மகள் வரைந்தவை:
பழைய கல்கி ஒன்றில் ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று
உங்கள் கடிதம் படித்தேன். ஈ.வெ.ரா. அவர்கள் கட்டுரை பத்திரிகையில் வந்ததை நான்60, பஸ்ஸுல்லா ரோட்
தியாகராய நகர்
சென்னை – 17 14-12-56
வணக்கம்,
படிக்கவில்லை. உங்கள் கடிதத்தில் எடுத்து எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தேன்.
என்னுடைய கட்டுரையில் நான் எழுதியிருப்பதில் குழப்பதற்கு இடமில்லை.
நான் சொன்னதாய் பிறர் சொல்வதை வைத்துக் கொண்டு குழப்பம் ஏற்படுத்திக் கொள்வது
சரியல்ல, நான் சொன்ன கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு பார்க்கவும். படிப்புக்கு தமிழ் நாட்டில் தமிழ் வாயில் சொல்லித் தர வேண்டும். விஞ்ஞானப் பெயர்ச் சொற்களும்,பரிபாஷை மட்டும் ஆங்கிலமாக இருக்கலாம். விளக்கமும், பேச்சும் தமிழாக இருக்க வேண்டும். ஆட்சிமொழி, இந்திய மத்திய-நிர்வாகம்,ராஜ்யாந்த்ர
மொழி, இது ஹிந்தி மட்டுமாக இருக்கலாகாது. ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்..
இராஜகோபாலாச்சாரி
திரு.பி.எஸ்.விஸ்வநாதன்
36 நாராயண விலாஸ்ரயில்வேஸ்டேஷன் ரோடுதெப்பக்குளம், திருச்சி
Monday, July 27, 2020
கடலைக் கடந்து - 4
கடலைக் கடந்து - 4
பெயர் குழப்பம்:
நான் படித்தது
கி.ஆ.பெ.விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளியில். (K.A.P.VISWANATHAM HIGH SCHOOL) எஸ்.எஸ்.எல்.சி.
சர்டிஃபிகேட்டிலும் அப்படித்தான் இருக்கும். ஆனால் அந்த பர்சனல் ஆஃபிசர் அதை ஒப்புக்கொள்ள
மறுத்து K.A.P. என்பதை விரித்து எழுத வேண்டும் என்றார். அதன் விரிவாக்கமெல்லாம் யாருக்குத்
தெரியும்? “வாட் இஸ் திஸ்? யூ டோண்ட் நோ யுவர் ஸ்கூல் நேம்?” மீண்டும் எள்ளல். என்
ஸ்கூலின் பெயரே இதுதான் என்றால் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள்
யாரிடமாவது கேள்” என்றார். திருச்சியைச் சேர்ந்தவர்கள் சிலரிடம் கேட்டேன், யாருக்கும்
தெரியவில்லை. திருச்சியைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி, “கரியமாணிக்கம், ஆராவமுதன், பிச்சமூர்த்தி
என்று ஏதாவது எழுதுங்கள்” என்றார். அப்படியெல்லாம் செய்ய முடியுமா? கடைசியில் அந்த
பெர்சனல் ஆஃபிசர் கே.ஏ.பி. என்பதை அடித்து விட்டு விஸ்வனாதம் உயர் நிலைப் பள்ளி என்று
எழுதச் சொன்னார்.
அப்பொதைக்கு வேலை
முடிந்து விட்டாலும் என் மண்டைக்குள் இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. பின்னாளில்
கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்களின் பேத்தி எனக்கு நட்பானார். அவரிடம் அந்த கி.ஆ.பெ. எதைக்
குறிக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறை
பெரியவர்களின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொள்வார்களாம். அதன்படி கிருஷ்ணன்.ஆறுமுகம்.பெரியண்ணா
என்பதுதான் கி.ஆ.பெ. என்றார்.
இந்த சமயத்தில்
நம் ஊர் பெயர்கள் அவர்களை படுத்தி வைக்கும் பாட்டையும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளில் எங்கள் டிபார்ட்மெண்டின் டைரக்டர் என்னிடம் ஊர்
பிடித்திருக்கிறதா? வேலை பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் கேட்டு விட்டு என் பெயரைக் கேட்டார்.
நான் என் பெயரைக் கூறியதும் ,”ஓ டிஃபிகல்ட், இண்டியன் நேம்ஸ் ஆர் டிஃபிகல்ட்” என்றார்
அஹமது பின் அப்துல் காதர் அல் கசானி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்.
என்னுடைய பெயரில்
இருக்கும் பானு என்பது அவர்களும் வைத்துக் கொள்ளும் பெயராக இருப்பதால் மதி தேவையில்லை
என்று முடிவு செய்து விட்டார்கள். பானுமதியே கஷ்டம் என்றால் என் கணவரின் பெயராகிய கோவிந்தராஜபுரம்
கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயர் அவர்களை என்ன பாடு படுத்தியிருக்கும்
என்று யோசித்துக் கொள்ளுங்கள். அதில் அவர்களுக்கு உச்சரிக்க தோதாக இருந்த மூர்த்தி
என்னும் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு மூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நான் சில
சமயங்களில் என்னுடன் பணியாற்றிய எகிப்தியர்களிடம்,”மூர்த்தியின் முழுமையான பெயரான கோவிந்தராஜபுரம்
கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்னும் பெயரை சரியாக சொல்லிவிடு, உனக்கு 100 ரியால்
தருகிறேன் என்று விளையாடுவதுண்டு.
நான் வேலையில்
சேர்ந்த சில நாட்களில் என்னுடன் பணியாற்றிய ஒரு எகிப்திய பெண்மணி,”பானு ஸ்பீக் டெலிஃஃபோன்,
ராகு காலிங்” என்றாள். நான் அதிர்ச்சி அடைந்தேன். மஸ்கட் வருவதற்கு முன் என் ஜாதகப்படி
கேதுவுக்கு ப்ரீதி பண்ண வேண்டும் என்றார்கள், நானும் செய்தேன். அதனால் தன்னை புறக்கணித்ததாக
கோபம் கொண்டு ராகு அழைக்கிறாரோ? என்று பயந்தபடி ஃபோனை எடுத்தேன். பேசியது ராஜு என்னும்
ஒரு நண்பர். பிறகுதான் எனக்குத் தெரிந்தது எகிப்தியர்கள் ‘ஜ’ என்பதை ‘க’ என்றும், ‘க’வை
‘ஜ’ என்றும் உச்சரிபார்கள் என்று. இதை வேடிக்கையாக ராஜு என்னும் நண்பர், “ராஜு என்னும்
என்னை ராகு என்கிறார்கள், கீதா, ஜீதா ஆகிவிடுவாள், அங்கே வராத ஜ இங்கே வந்து விடும்" என்பார்.
அவர்கள் மட்டும்
தவறு செய்வதில்லை, நாமும் செய்கிறோம். அவர்கள் தந்தையின் பெயரை குறிப்பிட்டு அவர் மகன்
என்று பொருள்பட பின்(Bin) என்று குறிப்பிட்டு தன் பெயரை குறிப்பிட்டுக் கொள்வார்கள்.
மகள் என்றால் பின்ட்(Bint)என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒசாமா பின் லேடன் என்றால் ஒசாமவின்
மகன் லேடன் என்று பொருள். ஆனால் இதை அறியாத நம் ஊர் பத்திரிகைகள் அவரை பின் லேடன் என்றே
குறிப்பிடும்.
Saturday, July 25, 2020
கடலைக் கடந்து - 3
கடலைக் கடந்து - 3
அலுவலகத்தில் முதல் நாள்:
நான் மஸ்கட் சென்று சேர்ந்தது ஜனவரி 5 இரவு, மறுநாள் காலையே நான் வேலையில் சேர வேண்டியதாக இருந்தது. அங்கெல்லாம் அரசு அலுவலகங்கள் காலை 7:30க்கு துவங்கி, மதியம் 2:30 வரைதான் செயல்படும். எங்களை பிக் அப் செய்து கொள்ள மினிஸ்ட்ரி பஸ் உண்டு.
Thursday, July 23, 2020
கடலைக் கடந்து - 2
கடலைக் கடந்து - 2
இண்டியன் ஏர்லைன்ஸ் செய்த சோதனை:
நான் திருச்சியிலிருந்து
ஜனவரி நான்காம் தேதி மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்
கிளம்பி, அன்று இரவு சென்னையிலிருந்து இரவு 7:30 மணி இண்டியன் ஏர்லைன்ஸில் அப்போதைய
பாம்பே சென்று என் பெரிய நாத்தனார் வீட்டில் இரவு தங்கி விட்டு, மறு நாள் மாலை ஐந்து
மணி ஏர் இந்தியாவில் மஸ்கட் செல்வதாக ஏற்பாடு. அதற்கான பி.டிஏ.வை திருச்சியில் இருக்கும்
இண்டியன் ஏர் லைன்ஸ் அலுவலகதிற்கு டிசம்பர் 31ஆம் தேதி டெலக்ஸ் அனுப்பியிருப்பதாகவும்,
என்னை இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படியும் தொலைபேசியில் என் கணவர் கட்டளையிட்டார்.
இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திலோ டெலக்ஸ் வரவேயில்லை, வந்தால்தான் நாங்கள் டிக்கெட்
இஷ்யு செய்ய முடியும் என்றார்கள். இரண்டாம் தேதி வரை இதே நிலைதான். எனக்கு டென்ஷன்,
என் கணவருக்கோ டென்ஷனோ டென்ஷன்!
இரண்டாம் தேதி
காலையும் பி.டி.ஏ. வரவில்லை என்று இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கூற, நொந்து போன
நான் ஒரு ஆட்டோ பிடித்து, நேராக மலைகோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் சென்று,”பிள்ளையரப்பா
சோதிக்காதே”, என்று வேண்டிக்கொண்டு ஒரு சூரைக்காய் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தால்,
“இண்டியன் ஏர் லைனஸிலிருந்து ஃபோன் வந்தது, பி.டி.ஏ. வந்து விட்டதாம்” என்றார்கள்.
அப்பாடா! என்று மூச்சு விட்டேன். நான்காம் தேதி கிளம்ப வேண்டும் என்றால் மூன்றாம் தேதிதான்
டிக்கெட் கையில் வந்தது.
நான்காம் தேதி
நல்ல நேரத்தில் கிளம்பினேன். ஐந்து மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வர வேண்டிய ஐ.ஏ.
விமானம் எட்டு மணிக்குத்தான் வந்தது. “உங்களால் பம்பாய் செல்லும் கனெக்டிங்க் ஃபளைட்டை
பிடிக்க முடியாது, நாளை காலை பம்பாய் செல்லும் விமானத்தில் உங்களுக்கு நிச்சயம் இடம்
கொடுப்பார்கள்” என்றார்கள். அவர்கள் சொன்னதை கேட்டுத்தானே ஆக வேண்டும், வேறு வழி? ஒவ்வொரு
முறை ஏர் இண்டியா, இண்டியன் அல்லது இன்டியன் ஏர் லைன்ஸில் பயணித்த பொழுதும் கிடைத்த
அனுபவங்களை தனிப் பதிவாகப் போடலாம் இரவு சென்னையில்
இறங்கி, மாமா வீட்டில் தங்கி விட்டு, மறு நாள் பம்பாய் சென்று, என் நாத்தனார் வீட்டில்
மதிய உணவு சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விட்டேன். அப்போதெல்லாம் விமான நிலயங்களில்
அத்தனை கெடுபிடி இல்லாததால், என் நாத்தனாரின் கணவர் தன்னுடைய பாஸ் போர்டை கையில் வைத்துக்
கொண்டு என்னோடு செக் இன் கவுண்டர் வரை வந்து விட்டார். அங்கு எக்செஸ் பாகேஜ் இல்லாத
பயணி ஒருவரோடு பேசி என்னிடம் அதிகமாக இருந்த பாகேஜை அவரை எடுத்துக் கொள்ள வைத்தார்.
அன்று ஏர் இண்டியாவில் கும்பல் அதிகம் இல்லை. என்னைப் போலவே முதல் முறையாக மஸ்கெட்
வந்த கலைச்செல்வி என்னும் பெண், ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்த்த ஒரு இஸ்லாமிய பெண்
ஆகிய நாங்கள் மூவரும் அரட்டை அடித்தபடி பயணித்து, ஒரு வழியாக ஓமானில் காலடி வைத்தேன்.
Tuesday, July 21, 2020
கடலைக் கடந்து...
Monday, July 20, 2020
Friday, July 17, 2020
அம்மன் அருள்
Friday, July 10, 2020
You are cordialy invited....
Thursday, July 2, 2020
சுப திருஷ்டி!
Saturday, June 20, 2020
வூ ஹான் விளைவுகள்
Sunday, June 14, 2020
மசாலா சாட் - 18
மசாலா சாட் -18
எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. சில ஜோசியர்களிடமும் நம்பிக்கை உண்டு. ஆனால் ரிஷப ராசிக் காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும், பிரிந்த உறவினர்கள் சேர்வார்கள், புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு என்று பொத்தாம் பொதுவாக அடித்து விடும் ராசி பலன்கள் நிகழ்ச்சியில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் தினசரி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராசி பலன்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன்,கேட்பேன் காரணம், ராசி பலன்களுக்கு இடையே அவர்கள் கூறும் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் புகழ் கிடைக்கும் போன்ற ஜோதிட டிப்சுகளை கேட்பதற்காக. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சன் டி.வி., ஜீ டி.வி., ஜெயா டி.வி. மூன்றிலும் அடுத்தடுத்து ராசி பலன்கள் நிகழ்ச்சி வரும். மூன்றிலும் மூன்று விதமாக கூறுவார்கள். இதில் ஜெயா டி.வி.யில் ராசி பலன்கள் நிகழ்ச்சியை வழங்கும் குமரவேல் பரிகாரமாக சில மந்திரங்களை கூறி விட்டு, ஜெய மோகன் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தைப் படியுங்கள், பால குமாரன் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தைப் படியுங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் உப பாண்டவர்கள் என்னும் நூலை வாசித்துப் பாருங்கள், சாரு நிவேதிதாவின் இணைய பக்கங்களை வாசித்துப் பாருங்கள் என்பார். நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!
***********************************************************************************
எங்கள் ஊருக்கு பக்கத்தில் வரகூர் என்னும் சிறு கிராமம் . அங்கிருக்கும் பெருமாள் கோவிலும் அதில் கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நடக்கும் உறியடி உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் அங்கு ஒரு திருமணம் நடந்திருக்கிறது. திருமண பெண்ணிற்கு அலங்காரம் செய்ய சென்னையிலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்திருக்கிறார்கள்(ரொம்ப அவசியம்) வந்த பெண்ணிற்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது மணப்பெண் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறாளாம். ஊரில் எல்லோருக்கும் டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்களாம், ஊரே பீதியில். கடவுளே! சப்கோ சன்மதி தோ பகவான்.
***********************************************************************************
கீழே இருப்பவை என் அக்காவின் பேரன் ஆறு வயதே ஆன அர்ஜுன் வரைந்தவை:
Thursday, June 4, 2020
நூல் விமர்சனம்
Sunday, May 31, 2020
சில கோவிட்-19 கற்பனைகள்
Monday, May 25, 2020
இரு கதைகள்
Saturday, May 23, 2020
மசாலா சாட் -18
என் மகள் ஒப்போஸ்(OPOS) குக்கிங் பற்றி ரொம்ப சொன்னாளே என்று அதைப் பற்றி யூ டியூபில் தேடினேன். முதலில் சிம்பிளாக ஏதாவது செய்து பார்க்கலாம் என்று தேடியதில் இஞ்சி பூண்டு விழுது செய்முறை கண்ணில் பட்டது.
Wednesday, May 13, 2020
Friday, May 8, 2020
திக் திக் நேரம் (ஒரு கதையும் ஒரு நிஜமும்)
Monday, May 4, 2020
மசாலா சாட்
லாக் அவுட் தொடங்கிய முதல் வாரம்:
லாக் அவுட் பீரியட்டில் பலரும் அவர்கள் பார்த்த திரைப்படங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். நான் யூ டியூபை சரணைடைந்தேன். குறும்படங்கள், உபன்யாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என்று பார்க்கிறேன்.
யூ ட்யூபில் பல பழைய தமிழ்ப் படங்கள் காணக் கிடைக்கின்றன. தனிகுடித்னம் சினிமா கொஞ்சம் பார்த்தேன். நாடகத்தை ரசிக்க முடிந்தது போல் திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை. காமு என்னும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்த கே.ஆர். விஜயா மடிசார் கட்டிக்கொண்டு காபியை தூக்கி குடிக்காமல் எச்சில் பண்ணி குடிக்கும் காட்சியை பார்த்த பிறகு தொடர்ந்து பார்க்க பிடிக்காமல் நிறுத்தி விட்டேன்.
சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் சித்ராலயா கோபு கதை வசனத்தில் லட்சுமி,ஜெய்சங்கர், முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ்,
வி.கே. ராமசாமி முதலியவர்கள் நடித்திருந்த 'வீட்டுக்கு வீடு' படம் பார்த்தேன்.
பாடல்களை ஓட்டி விட்டால் படம் ரசிக்கும்படி இருந்தது. எனக்குத் தெரிந்து ஜெய்சங்கர் நடித்திருந்த படங்கள் இரண்டுதான். ஒன்று வீட்டுக்கு வீடு, மற்றது தளபதி.
இந்தக் கதையை அப்படியே ராம்கி,விவேக் போன்றவர்கள் நடித்து ஒரு படம் வந்தது. ஏன் கமலஹாசனின் 'காதலா காதலா' கூட இதே கதைதான்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களும் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் கே. பாலச்சந்தரின் 'ஜன்னல்' சீரியல்கள் எனக்கு மிகவும் பிடித்தன. அதிலும் லட்சுமியும், எஸ்.பி.பி.யும் நடித்திருந்த 'அடுத்த வீட்டு கவிதை' என்னும் சீரியல் மிகவும் பிடித்தது. எஸ்.பி.பி. சற்று மிகை நடிப்பை கொடுத்திருந்தாலும், லட்சுமியின் நடிப்பு பிரமாதம்! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி எந்த வித ஆபாசமும் இல்லாமல் கன்வின்சாக எடுத்திருக்கும் பாலச்சந்தர் ஜித்தன்தான். சேத்தன் பகத் எழுதியிருந்த 'ஒன் இந்தியன் கேர்ள்' நாவலை படித்த பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஒரு பெண், மூன்று ஆண்கள் என்னும் கருவை எழுபதுகளிலேயே படமாக எடுத்திருக்கிறாரே பாலச்சந்தர் என்று வியந்தேன்.
சரி இப்போது ஒரு பழைய பாடல்.
Saturday, May 2, 2020
சொல்லாமல் விட்டவை ....
Wednesday, April 29, 2020
Monday, April 27, 2020
ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
SECURITY IS A PRISON என்பது ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியது. இதை வைத்து பாலகுமாரன் கூட தனது இரும்பு குதிரைகள் நாவலில் 'விஸ்வநாதனுக்கு பின்னால் ஒரு வலுவான குடும்பம் இருந்தது, அவனை முன்னேற விடாமல் தடுத்தது' என்று எழுதியிருப்பார். சமீபத்தில் நான் பார்த்த பல தமிழ் வெப் சீரிஸ்கள் என்னை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு ஜே போட வைக்கின்றன.
இந்த வெப் சீரிஸ்கள் பலவும் திறமையுள்ள இளைஞர்களால் எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த திறமையை வைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.






















