கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 20, 2021

திருவெம்பாவை பாடல் - 5

 திருவெம்பாவை  - 5




மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே
சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

வாசனை பொருந்திய கூந்தலை உடைய பெண்ணே திருமாலும், நான்முகனும் காண முடியாத அண்ணாமலையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர் தெரியுமா? என்று பாலிலும், தேனிலும்‌ ஊறியது போன்ற இனிமையான வார்த்தைகளை பேசுவாயே? வந்து உன் வாசல் கதவுகளை திறப்பாயாக. இந்த உலகில் உள்ள மனிதர்களும், விண்ணுலகில் உள்ள தேவர்களும் அறிய முடியாதவரும் நம் குறைகளை மன்னித்து நமக்கு அருளுவதற்காக ஒரு வடிவம் எடுத்து வருபவருமாகிய சிவ பெருமானின் பெயர்களை சிவனே, சிவனே என்று நாங்கள் உரக்கப் பாடுவதை கேட்டும் நீ உறங்குகிறாயே இதுதான் உன் சிறப்பா?

18 comments:

  1. அதுதானே...  என்ன நீ...  எழுந்து வா இளம்பெண்ணே...!

    ReplyDelete
    Replies
    1. நான் எழுந்து கொண்டு விட்டேனே..:)

      Delete
  2. அழகான விளக்கம்.

    ReplyDelete
  3. விளக்கம் ரசித்தேன் பானுக்கா

    சிவனே, சிவனே என்று நாங்கள் உரக்கப் பாடுவதை //

    இப்படி ஏதேனும் வரி வாசிக்கும் போதெல்லாம் உடனே என் மனதில் வரும் வரி - பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் அந்தி செயலழின் தலம் வரும் பொழுது சிவன் பெயர் நாவில் வாராதே ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு

    நம்பிக் கெட்டவர் எவரய்யா- பாடலின் சரணத்தின் கடைசி வரி. எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஏகலைவி எனக்கு இப்பாடலுக்கு குரு டிகேஜெ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சில பாடல்களை கேட்டால் சிலர் நினைவு வருவதை தவிர்க்க முடியாது.நம்பிக் கெட்டவர் எவரய்யாவுக்கு D.K.Jeyaraman

      Delete
    2. ஆமாம் பானுக்கா..

      டிகேஜெயராமன், டிகே பட்டம்மாள் இருவரும் பாடியது - ரஞ்சனி ம்ருது பங்கஜ லோசனி பாடலும் அது போல ஆண்டவன் அன்பே சக்தி தரும் பாடல் டிகேபி பேத்தி நித்யஸ்‌ரீ நினைவுக்கு வருவார்.

      கீதா

      Delete
  4. இன்றைய பாடலின் விளக்கம் அருமை.

    கீதா

    ReplyDelete
  5. அழகான விளக்கம். பாடலும் தெரிந்து கொண்டேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  6. நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
    சீலமும் பாடிச் சிவனே
    சிவனேயென்று
    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்//

    பானுக்கா என் மனதில் இதற்கு இப்படியும் தோன்றுவதுண்டு...இறைவனைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அவன் நாமத்தை ஓலமிட்டாலும் உன் என்று நம் ஒவ்வொருவரையும்/நம் அகக் கண், நம் அறிவு உணராமல், விழிக்காமல் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதைத்தான் அந்த வரி சொல்கிறது என்றும் தோன்றும்

    கீதா

    ReplyDelete
  7. திருவெம்பாவை திருப்பாவை இரண்டிலுமே இப்படியான உள் அர்த்தங்கள் பொதிந்து இருப்பதாக எனக்குத் தோன்றுவதுண்டு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தத்துவார்த்தம் நிறைய உண்டு. நான் அதற்குள் செல்லவில்லை. நேரடி பொருளை மட்டுமே எழுதியிருக்கிறேன்.

      Delete
  8. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவை பாசுர பாடலுக்கு நல்ல விளக்கம். பாடலை பாடியும், விளக்கத்தை நன்கு பக்தியுடன் படித்தும் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. அருமையான விளக்கம்

    ReplyDelete