கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 19, 2021

திருவெம்பாவை பாடல் 4

 


திருவெம்பாவை பாடல் 4


ஓண்ணித்தில நகையாய்
இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார்
எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கோண்டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவுமே
காலத்தை போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை
வேத விழுப் பொருளை
கண்ணுக்கினியானை பாடி
கசிந்துள்ளம் உள்நெக்கு 
நின்றுருக யாமாட்டம்
நீயே வந்து எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய்

முத்துப்பல் சிரிப்பை உடைய பெண்ணே உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? என்று வெளியே நிற்கும் தோழிகள் கேட்டதும் இன்னும் தயாராகாத வீட்டிற்குள் இருக்கும் பெண்ணிற்கு ரோஷம் வந்து விடுகிறது. 

"என்னை மட்டும் பெரிதாக குறைகூறுகிறீர்களே? மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?"
என்று வினவுகிறாள்.
யார் யாரெல்லாம் வந்திருக்கிறோம் என்று கூற நாங்கள் தயார், ஆனால் அந்த நேரத்தில் நீ உறங்கி விடாதே
விண்ணுலக தேவர்களுக்கே மருந்தாக இருப்பவன், வேதத்தின் மேலான உட்பொருளானவன், நமக்காக ஒரு அழகான உருவம் கொண்டிருப்பவன், அப்படிப்பட்டவனை பாடி நாங்கள் நெக்குருகி நிற்கிறோம்,எனவே நீயே வந்து எத்தனை பேர்கள் வந்திருக்கிறோம் என்று எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் உறங்கிக் கொள்.




13 comments:

  1. நல்லதொரு ஆக்கம். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Replies
    1. இறையருள் வேண்டும் __/\__

      Delete
  3. நன்றாக இருக்கு பானுக்கா.

    எனக்கு அவ்வப்போது தோன்றும் திருவெம்பாவை திருப்பாவை இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளில் இருக்கிறதே எழுதப்பட்ட காலம் என்னவாக இருக்கும் என்று

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டிற்குள் என்று தோராயமாகத்தான் சொல்ல முடிகிறது. அந்த காலகட்டத்தில் தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்து ஜைன மத ஆக்கிரமிப்பிலிருந்து இந்து மதத்தை மீட்டார்கள்.அது பக்தி இயக்கம் என்றே அறியப்பட்டது

      Delete
    2. நீங்கள் படித்திருப்பீர்கள், தாலாட்டு பாடல்கள் என்றால் அதற்கு ஒரு அமைப்பு (template), சீட்டு கவி என்றால் ஒரு அமைப்பு, பிள்ளைத்தமிழ் என்றால் ஒரு விதம், அதைப்போல துயிலிடைப் பாடல்கள் அதாவது உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல்கள் ஒரு வகை. திருப்பாவை, திருவெம்பாவை இவற்றில் சில பாடல்கள் துயிலிடைப் பாடல்கள்.

      Delete
    3. கிட்டத்தட்ட ஒரே காலகட்டமோ ஆழ்வார்களும் நாயன்மார்களும்.பக்தி இயக்கம் அறிந்ததுண்டு. காலக்கட்டம் தான் சரியாக நினைவில்லை அதான் கேட்டிருந்தேன் ஒன்பது...ஆமாம் இது திருப்பாவைக்கும் சொல்லப்படும்.

      ஆமாம் ஒவ்வொன்றிற்கும் ஒரு அமைப்பு உண்டு. அதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். ஆமாம் துயிலிடைப்பாடல்கள் இவை.

      எழுந்துவா என்று இப்பாடல்களில் சொல்லப்படுவதே கூட எழுமின் விழுமின் என்று விவேகானந்தர் சொன்ன வாசகத்தோடு இணைத்து ஒரு கட்டுரைப் போட்டியில் எழுதியிருந்தேன் கல்லூரி படிக்கும் சமயம்.

      கீதா

      Delete
  4. வணக்கம் சகோதரி

    இன்றைய நான்காம் நாள் பாடலுக்கு நல்லதொரு விளக்கம். "நீயே வந்து எத்தனைப் பேர்கள் என எண்ணிக்கொள்" என்ற இறுதி உரையாடலில் உறக்கம் முற்றிலுமாக கலைய நல்லதொரு உபாயம். அதே சமயம் சிவ சிந்தனையில் இருப்பவர்களை கண்டாலே ஒரு பக்திப் பரவசம் தானாகவே உதிக்குமே என்ற எண்ணம் வேறு அழைக்க வந்திருப்பவர்களுக்கு. அருமையான பாசுரம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  6. பி லீலாம்மா பாடிய திருவெம்பாவைப் பாடல்களுடன் எங்கள் காலை
    விடியும்.
    நீங்கள் சொல்லி இருப்பது போல எல்லாஆரும் போந்தாரோ
    ஆண்டாளும் சொலவால். மார்கழித் தூக்கம் எத்தனை வலிமை என்று இங்கே தான் உணர்கிறேன்.
    நம்மூரில் மார்கழி உற்சாக ஆன்மீக மாதம்.
    அந்தப் புனிதம் எங்கும் வராது.
    'ஒண்ணித்தில நகையாய். மிகப் பிடித்த பாடல். கண்முன்னே விரியும்
    புன்னகை. வெண் முத்துப் போல பளிச்சிடும் இனிமை.
    அருமையான விளக்கம் நன்றி பானுமா.

    ReplyDelete
  7. //நம்மூரில் மார்கழி உற்சாக ஆன்மீக மாதம்.
    அந்தப் புனிதம் எங்கும் வராது.// Correct.வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

    ReplyDelete