கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 24, 2021

திருவெம்பாவை - 9

 திருவெம்பாவை - 9


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

இப்போது எல்லா பெண்களும் சிவபெருமான் உறையும் கோவிலை அடைந்து விட்டார்கள். அங்கு இறைவனைப் பணிந்து தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள்.

பாவை நோன்பு அனுஷ்டிப்பதின் நோக்கங்களுள் ஒன்று நல்ல கணவனை அடைவது. இந்த பெண்களைப் பொறுத்தவரை யார் நல்ல கணவன்? சிவனடியாராக இருப்பவன்தான். சிவபெருமான் மீது பக்தி கொண்ட ஒருவன்தான் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று இந்தப் பாடலில் வேண்டுகிறார்கள். 

இந்த உலகில் மிகப் பழமையானது என்று ஒன்றை சொன்னால் அதைவிடப் பழமையானவனாகவும்,  புதுமை என்று வரும் பொருளை விட புதுமையானவனாகவும் விளங்குகிறான் நீ. உன்னைத் தலைவனாக பெற்ற சிறந்த அடியவர்களாகிய நாங்கள் உன்னையும் பணிவோம், உன் அடியவர்களையும் பணிவோம். அவர்களோடு இணங்கி இருப்போம். அந்த சிவனடியார்களில் ஒருவரே என் கணவராகி விட்டால் அவர் எந்த சிவத்தொண்டில் ஈடுபட்டாலும் நாங்கள் அவருக்கு பணி செய்வோம். இப்படிப்பட்ட ஒரு பரிசை எங்களுக்கு அளித்தால் எங்கள் வாழ்வில் ஏது குறை?

5 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. திருவெம்பாவை 9 தாவது பாசுரமும், அதன் விளக்கங்களும் அழகாக சொல்லியியுள்ளீர்கள். உண்மை.. சிவனை வணங்கி தொழுவதை விட சிவனடியார்களை பணிந்து வணங்கிப் போற்றுவதே எனக்கு மிக மகிழ்ச்சியை தருமென சிவனே கூறியிருக்கிறார் அல்லவா.. அதன்படி சிவனடியார்களை பணிந்து போற்றுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. ந்ல்ல விளக்கம் பானுக்கா.

    நல்ல கோரிக்கை.

    கீதா

    ReplyDelete
  3. இதுவும் ரொம்பப் பிடித்த பதிகம்.

    ReplyDelete