கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 21, 2021

திருவெம்பாவை - 6

திருவெம்பாவை - 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


அடுத்த வீட்டிற்கு சென்றால் அந்த பெண்ணும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். மானே என்று அவளை மிக இனிமையாக அழைக்கும் தோழிகள்,"நேற்று நீ, நான் முதலில் வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்றாய் அந்த வார்த்தை எங்கே போனது? அப்படி கூறிவிட்டு நாணமின்றி உறங்கிக் கொண்டிருகாகிறாய். உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையா? விண்ணகத்து தேவர்களும், மண்ணில் வசிக்கும் மாந்தர்களும், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட முனிவர்கள், ஞானிகள் போன்றவர்களாலும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாதவனும், நம்மை போன்ற பக்தர்களுக்கு தானே இறங்கி வந்து அருளுகிறவனுமாகிய அந்த சிவப் பரம்பொருளை போற்றி நாங்கள் பாடுவதை கேட்டும் வாய் திறவாமலும், ஊன் உருகாமலும் கிடப்பது உனக்கு மட்டுமே
சாத்தியம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் அரசனாகிய சில பெருமானைப் போற்றிப் பாடலாம் வா".

6 comments:

  1. /"...எல்லா உயிர்களுக்கும் அரசனாகிய சில பெருமானைப் போற்றிப் பாடலாம் வா".//


    "(சிவனை) போற்றி பாடடி பெண்ணே..."

    ReplyDelete
  2. மார்கழி மாதம் காலை வேளை அனைவருக்கும் உறக்கம் தான் வரும் போல! முதலில் எழுதிருக்கும் பெண் மட்டும் எப்படியோ எழுந்துகொள்கிறாள். :)

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு உறங்காவிழி என்று பெயர் வைத்துவிடுவோம்!

      தினமும் அவள் மற்றவர்களை வைத்து தொந்தரவு செய்வதால் தினமும் இரவு அவள் உணவில் நைஸாய் தூக்கமருந்து கலந்து விடலாம்!!

      Delete
  3. கர்ர் நேற்று போட்ட கமென்ட் காணும்..

    ஸ்ரீராம் உங்கள் கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன்!

    கீதா

    ReplyDelete
  4. பக்தர்களுக்குத் தானே இறங்கி வந்து அருளும்//

    ம்ம் அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். அந்த அளவு பக்தியும் வேண்டுமே...

    கீதா

    ReplyDelete