கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 22, 2021

திருவெம்பாவை - 7

 திருவெம்பாவை - 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

பெண்ணே இப்படி எங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறாயே என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றா என்று கேட்பதன் மூலம் அதைத்தான் உணர்த்துகிறார்கள் எனலாம். தொடர்ந்து அவர்கள்," பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா?  உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற 
சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய், சிவன்தான் என் தந்தை, அவரே என் அரசன், எனக்கு அமுதம் போன்றவன் என்றெல்லாம் கூறுவாய், அப்படிப்பட்ட, அமரர்களாலும் அறியப்பட முடியாத, பரம்பொருளாகிய ஒருவனும், பெருமைகள் கொண்டவனுமாகிய சிவபெருமானின் பெருமைகளை நாங்கள் பாடுவதைக் கேட்டும் கல் நெஞ்சம் கொண்டவளைப்போல நீ பேசாமல் படுத்துக் கொண்டிருக்கிறாய். இதுதான் தூக்கத்தின் சிறப்பு போலிருக்கிறது.

12 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவை பாடலுக்கேற்ற அழகான விளக்கம். பாடலும், விளக்கமும் மெய்யுருக வைக்கிறது. இந்த மாதிரி சொல்லிச் சொல்லி நம்மை சூழ்ந்திருக்கும் இந்த மாயை எனும் இருளகற்றி, ஞானஒளியை உள்ளத்தில் அகலாது ஒளி வீசச் செய்ய யார் வரப் போகிறார்கள்.? நெஞ்சம் பதைப்பாகத்தான் உள்ளது. ஓம்நமசிவாய என்ற தாரகமந்திரம் நம்மை என்றும் நல்வழிப்படுத்த வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஓம்நமசிவாய என்ற தாரகமந்திரம் நம்மை என்றும் நல்வழிப்படுத்த வேண்டும்.// இந்த தாபம்தான் முக்கியம். கடவுள் வழி நடத்துவார். நன்றி.

      Delete
  2. பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா? உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற
    சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய், //

    நம் கண்ணைத் திறக்க வைக்க எவ்வளவோ முயற்சிகள்!

    கீதா

    ReplyDelete
  3. " பெண்ணே நீ எப்படிப்பட்டவள் தெரியுமா? உருத்திராட்சம், விபூதி, திரிசூலம்,பிறைச்சந்திரன் போன்ற
    சிவபெருமானுக்குரிய அடையாளங்களைப் பார்த்தாலே சிவனே! சிவனே என்பாய், யாராவது தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவதற்காக தென்னா.. என்று தொடங்கும் பொழுதே தீயிலிட்ட மெழுகு போல் உருகுவாய்//

    இப்படி ஒருவர் இருந்தார். பாவம் அவர். அவர் சிவன் என்றாலே உருகிவிடுவார் என்பதால் வேஷமிட்டு அவரை ஏமாற்றிக் காசு பறித்துச் சென்றவர்கள் பலர். இவர் அதைப் பற்றி எலலம் கவலைப்பட்டதில்லை. ஏமாற்றினால் அவர்களை இறைவன் என்னப்பன் பார்த்துக் கொள்வார் என்று சொல்லிவிடுவார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாயன்மார்களில் சேரமான் பெருமாள் என்பவர் அப்படித்தான்.

      Delete
  4. தூக்கமே ஒரு சிறப்பு தான்...!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் குளிர் காலத்தில்

      Delete
  5. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  6. இது படிக்கையில் எல்லாம் எனக்குத் திருநாவுக்கரசரின் "முன்னம் அவனுடைய திருநாமம் கேட்டாள்" பதிகம் நினைவில் வந்தது.

    ReplyDelete