கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, March 12, 2026

கனடா டைரி

 கனடா டைரி

நம் நாட்டில் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் என்னவோ நம் நாட்டில் மட்டும்தான் மூட நம்பிக்கைகள் அதிகம், மேலை நாடுகளில் மூட நம்பிக்கைகளே கிடையாது என்பார்கள். இது "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'' என்பது போன்ற ஒரு மூட நம்பிக்கைதான். உண்மையில் எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் நிலவத்தான் செய்கின்றன. 

கனடாவில் பிப்ரவரி 2ஆம் தேதியை 'க்ரெளண்ட்ஹாக் டே(groundhog day) எங்கிறார்கள். groundhog என்பது ஒரு நாலுகால் பிராணி. ஹைபர்நேஷன் எனப்படும் குளிர்கால தூக்கத்தில் இருக்கும் க்ரெளண்ட்ஹாக் அன்றைக்கு முழித்துக் கொண்டு வெளியே வருமாம். வெளியே வந்த அது தன் நிழலைப் பார்த்தால் குளிர்காலம் இன்னும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், அது தன் நிழலைப் பார்க்காவிட்டால் வசந்தம் விரைவில் வந்து விடும் என்றும் ஒரு நம்பிக்கையாம். இந்த வருடம் க்ரௌண்ட்ஹாக் தன் நிழலை பார்க்காததால் இந்த வருடம் வசந்தம் விரைவில் வந்து விடும் என்கிறார்கள். க்ரௌண்ட்ஹாக் வெளியே வருவதை கண்காணிக்க ஒரு குழுவே உண்டாம்.

இதை நான் தவறுதலாக என்னுடைய சென்ற பதிவில் எழுதிவிட, அதைப் படித்த கமலா ஹரிஹரன், தன்னுடைய கருத்தில், "அழகர் (வைகை)ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று பச்சை நிற பட்டு உடுத்திக் கொணிடிருந்தால் வரும் வருடம் செழிப்பாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு என்று குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம் எல்லா வருடங்களும் பச்சை பட்டாடையே உடுத்தி விடுகிறார்களாம் என்றும் கூறியிருந்தார். அவருக்கு நன்றி.

இந்த வருடம் நிஜமாகவே வெய்யில் சீக்கிரம் துவங்கி விட்டதோ என்றுதான் தோன்றியது. நேற்று பளீரென்று வெய்யில் அடிக்க. "ஆஹா! இன்னிக்கு வெதர் பிரமாதம்! நீ கண்டிப்பாக கொஞ்ச நேரம் வெளியில் நிற்கத்தான் வேண்டும்" என்று என் மகள் என்னை வற்புறுத்தி வெளியில் நிற்க வைத்தாள். அக்கம் பக்கத்து குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அதிகாலையிலிருந்து மழை. இதுவரை(பிற்பகல் 2:30) சூரிய பகவான் தலைகாட்டவில்லை. ஹூம்!

இன்று என் பேத்தி என்னிடம்,"இந்தியாவில் குளிர்காலத்தில் எவ்வளவு டெம்பரேச்சர் இருக்கும்?" என்று கேட்டாள். நான், "20 டிகிரியிலிருந்து 23 வரை செல்லும் என்றேன்."

"வாட் அபவுட் சம்மர்?"

"அது 40, 42 வரை செல்லும்"

"அப்போ நீ லீவ் போட்டு விடுவாயா?"

"லீவா..? சம்மரில் சென்னைக்கு வா, டி.நகருக்கு அழைத்துச் செல்கிறேன். ஜே ஜேன்னு மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்கள் அதுதான் இந்தியா" என்றேன்.

 


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சம்பிரதாய பஜனைக்குச் சென்றிருந்தோம். முடித்து விட்டு மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். எல்லோரும் ஐஸ்க்ரீம் சாப்பிட முடிவெடுத்தார்கள். ஓட்மில்க் ஐஸ்க்ரீமாம்(ருசி அப்படி ஒன்றும் பிரமாதமில்லை) ஏற்கனவே குளிர், இதில் ஐஸ்க்ரீம் வேறு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் பனி பொழிய தொடங்கி விட்டது. நான் நிஜமாகவே நடுங்க ஆரம்பித்து விட்டேன். காரில் என் மகளை பின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு, நான் முன் சீட்டுக்கு வந்தேன். அதில் சீட் வார்மர் இருக்கும். அந்த சீட்டில் உட்கார்ந்து வந்த பிறகுதான் என் நடுக்கம் குறைந்தது.

என் மகள் தொலைகாட்சியில் ஒரு ஆஸ்திரேலியன் சீரியலை விரும்பி பார்ப்பாள் அதன் பெயர் 'Married at first sight'. திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் தங்கள் விருப்பங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை பரிசீலிக்கும் பேனல் யார், யாருக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறதோ அந்த ஜோடிகளை முதலில் பேசச் சொல்கிறது. பேசி, பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் மூன்று மாதங்கள் கண்டிப்பாக சேர்ந்து வாழ வேண்டும், அதன் பிறகும் விருப்பமிருந்தால் திருமண பந்தத்தை தொடரலாம் அல்லது முறித்துக் கொள்ளலாம். இந்த மூன்று மாதங்களில் அந்த ஜோடிகளுக்கு அவ்வப்பொழுது விருந்து, வெளியே அழைத்துச் செல்வது போன்றவைகளும், அந்த ஜோடிகளின் அனுபவங்களும் கேட்டு அறியப் படுகின்றன. பெரும்பான்மையான ஜோடிகள் சேர்ந்து வாழ முடிவெடுக்க, ஒரு ஜோடி மட்டும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி பிரிய முடிவெடுத்தனர்.

நல்ல கூத்து என்று தோன்றுகிறதோ? இப்படிப்பட்ட விஷயங்கள் நம் நாட்டிற்குள்ளும் வராது என்று சொல்ல முடியாது.  

 

29 comments:

  1. முதல் பார்வையில் திருமணம் நல்லாயிருக்கே... என்னென்ன கொண்டு வர்றாங்க...!

    ReplyDelete
    Replies
    1. சீர் செனத்தி எல்லாம் எதிர்பார்கறீங்களா? அவங்க ஒரு பெட்டியை உருட்டிக் கொண்டுதான் வந்தார்கள். ஒரு சமத்து மாப்பிள்ளை திருமண மோதிரம் கொண்டுவர மறந்து விட்டார் :)) வீட்டிற்கு போய் எடுத்துவரச் சொன்னார்கள்.

      Delete
  2. போன பதிவிலிருந்து வெட்டி ஒட்டியதால் முதல் பகுதி ஒரு மாதிரியும், புதுசு என்பதால் இரண்டாம் பகுதி ஒரு மாதிரியும் இருக்கோ!

    ReplyDelete
    Replies
    1. போன பதிவா? அதில் இல்லையே ஸ்ரீராம். அக்காவும் கமலாக்கா பத்தில் சொல்லியதை போன பதிவில் பார்த்தேன் ஆனால் இந்தச் செய்தி அங்கு இல்லை....நானும் தேடித் தேடிப் பார்த்தேன் அக்கா அட்ரஸ் தேடியதைப் போல...இதுக்கும் கூகுள் மேப் கொடுத்தா நல்லாருக்குமோ!!!

      கீதா

      Delete
    2. போன பதிவு நான் போடும் பொழுது groundhog விஷயம் கீழே இருந்திருக்கிறது, நான் கவனிக்கவில்லை. பிறகுதான் பார்த்தேன். அதற்குள் கமலா கமெண்ட்போட்டு விட்டார்கள். அந்த நூல் விமர்சனத்தோடு சேராமல் இருந்ததால் எடுத்து விட்டேன்.

      Delete
  3. நான் வெய்யில் காலத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடமாட்டேன்.  குளிர்காலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருக்கிறீர்கள்.  சூடு படுத்தி சாப்பிட்டிருக்கலாமோ..  காபி சாப்பீட்டீர்களா என்று  கேட்பது போல..

    ReplyDelete
  4. அந்த நாலுகால் பிராணியை யாரும் போட்டோ பிடிப்பதில்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் அது எலி போன்ற ஒன்று. rodent.

      கீதா

      Delete
    2. படம் கிடைத்தது, ஆனால் தெளிவாக இல்லை.

      Delete
  5. உங்க வலைப்பக்கத்துக்கு ஜாஸ்தி கமென்ட் வராததால் கோபமோ? கருத்துக்கள் கொடுத்தால் விழுங்கிடுதே! இந்த மாதிரிக் குளிரில் எல்லாம் இருப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. அதிலும் எனக்குக் கால், கை விரல்களில் வீக்கம், எரிச்சல், அரிப்புனு வந்துடும். ஒண்ணுமே செய்ய முடியாது. வேலை எதுவும் செய்யலைனாக் கூட குளிர்காலத்தில் இதை எல்லாம் அனுபவிக்கும்படி ஆயிடும்.

    ReplyDelete
    Replies
    1. குளிர் கஷ்டம்தான்.

      Delete
  6. ஏற்கெனவே லிவிங் டு கெதர் கலாசாரம் தான் வந்தாச்சே. சுருக்கமான பதிவு. ஆனால் இரண்டை இணைத்திருப்பதால் முதல் பகுதி பெரிய எழுத்துக்களிலும் இரண்டாம் பகுதி சின்ன எழுத்துக்களிலும் வந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. லிவிங்க் டு கெதர் பரவலாக வந்திருக்கிறது. ஆனாலும் தொலைகாட்சியில் தேர்ந்தெடுத்து பிடித்தால் தொடரலாம், இல்லாவிட்டால் விட்டு விடலாம் என்பது வருவதற்கு இன்னும் ஒரு பத்து வருடங்கள் ஆகலாம்.

      Delete
  7. அளவுச் சாப்பாடு என்று சொல்லியிருட்ந்தாலும் சுவாரசியமான சிரிப்பு ரேஷன் இல்லாமல் வரும் என்பது உறுதி. கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். தேடித்தான் பார்ப்போமே!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ??? வேறு யாருக்கோ போட வேண்டிய பதிலோ?

      Delete
  8. groundhog பற்றி வாசித்த போது இந்த தினம் பற்றி அறிந்ததுண்டு.

    மனிதர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இப்படியான நம்பிக்கைகள் உண்டு. இருக்கும்

    கீதா

    ReplyDelete
  9. முதல் பார்வையில் திருமணம்! நின்னு நிதானமா காதலிச்சு பண்ணுவதே நிலைப்பதில்லை! இதுல முதல் பார்வையிலேயே!!!

    கிட்டத்தட்ட ஜாதகப் பொருத்தம் இங்கு பார்ப்பது போல்...கல்யாணமாலை!

    இப்படியானவை ஏற்கனவே இருக்கு இல்லையோ?

    கீதா

    ReplyDelete
  10. திருமணமாகி மூன்று மாதங்கள் சேர்ந்திருந்து, பிறகு விரும்பினால் தொடரலாம்... என்ற கான்சப்ட் இப்போ ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், இந்தியாவிற்கும் வருவதற்கு ரொம்ப வருடங்கள் ஆகாது. நாம கொஞ்சம் புனிதம் அது இது என்று சொல்வதால் கொஞ்சம் தாமதமாகலாம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பத்து வருடத்தில் வந்து விடலாம்.

      Delete
  11. நல்ல பனிக்காலத்தில் ஐஸ்க்ரீம்... நல்லாவே இருக்கும்.

    நல்ல மதிய வெயில்ல நடந்துட்டு, மதியானம் முழுச் சாப்பாடை நாம் சுடச் சுட ஒரு பிடி பிடிப்பதில்லையா?

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான பதிவு. ரசித்துப் படித்தேன்.
    சந்திரமுகியில் வடிவேலு கேட்பதைப்போல் ஒரு கேள்வி.
    Groundhog என்ற ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! இருக்கு,இருக்கு,இருக்கு. நன்றி

      Delete
  13. Groundhog... இப்படியும் சில நம்பிக்கைகள்...

    குளிர் காலத்தில் ஐஸ்க்ரீம் - தில்லி வாழ்க்கையில் நல்ல குளிரில் தினம் தினம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது ஒரு காலம்! இப்போது வெய்யில் நாட்களில் கூட சாப்பிடத் தோன்றுவதில்லை.

    Married at first sight - இங்கேயும் இதைப் பார்த்து ஏதாவது ஒரு டி.வி. நிகழ்ச்சியை ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது! ஏற்கனவே கல்யாண மாலை போன்ற நிகழ்ச்சிகள் இருக்கின்றனவே.

    ReplyDelete
    Replies
    1. //தில்லி வாழ்க்கையில் நல்ல குளிரில் தினம் தினம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது ஒரு காலம்!// ஓ மை காட்!

      Delete
  14. கனடா டையிரி நன்றாக இருக்கிறது.

    //லீவா..? சம்மரில் சென்னைக்கு வா, டி.நகருக்கு அழைத்துச் செல்கிறேன். ஜே ஜேன்னு மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்கள் அதுதான் இந்தியா" என்றேன்.//

    அடிக்கிற வெயில் வீணாக விட மாட்டோமே! வற்றல், வடாம் போட்டு வெயிலில் காய்வோம், குழந்தைகள் வெயிலோடு உறவாடி விளையாடி களிப்பார்கள்.

    ReplyDelete
  15. //அடிக்கிற வெயில் வீணாக விட மாட்டோமே! வற்றல், வடாம் போட்டு வெயிலில் காய்வோம், குழந்தைகள் வெயிலோடு உறவாடி விளையாடி களிப்பார்கள்.// அதேதான். என்ன இருந்தாலும் நம் ஊர் நம் ஊர்தான்

    ReplyDelete