கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, April 27, 2026

ஆசை முகம் மறந்தாயோ வித்யா சுப்ரமண்யம்

ஆசை முகம் மறந்தாயோ

வித்யா சுப்ரமண்யம்



அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற நிருபமாவும், பிரணவும் காதல் வயப்பட்டு நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி, மாலை மாற்றிக் கொண்டு கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். ஆனால் அந்த வாழ்கை ஏழு நாட்கள் மட்டுமே நீடிக்கிறது.

இவர்களில் நிருபமா தாய், தந்தை, சகோதரன் எல்லோரையும் இழந்தவள். பிரணவின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்.இரண்டு இளைய சகோதரிகள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. அதனால் முதல் இளைய சகோதரிக்கு திருமணம் நடக்கும் வரை தங்கள் திருமண செய்தியை அவனுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டாம், குழந்தைகளும் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

அவர்கள் தேனிலவுக்குச் செல்ல திட்டமிடும்பொழுது பிரணவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு பைபாஸ் செய்ய வேண்டிய நிர்பந்தம். அதற்காக இந்தியா பயணப்படுகிறான் பிரணவ். ஆனால் மும்பை வரை சென்றவன் அவன் பெற்றோர்கள் இருக்குமிடமான ஸ்ரீரங்கத்திற்கு செல்லவில்லை. அவனுக்கு என்ன ஆனது என்று நிருபமா இயன்றவரை தேடியும் அதற்கு பலன் இல்லை. அவன் குடும்பத்தை தன் குடும்பமாக கருதிய நிருபமா அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தன் கடமை என்று கருதுகிறாள். அவளை பிரணவ் குடும்பம் ஏற்றுக் கொண்டதா? பிரணவ் கிடைத்தானா? அவள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதையெல்லாம் துள்ளலாகவும், தீவிரமாகவும் அலசியிருக்கும் நாவல்தான் ஆசை முகம் மறந்தாயோ?

நிருபமாவும் பிரணவும் திருமணம் செய்து கொள்ளும் முதல் பாகம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. நிருபமா ஸ்ரீரங்கம் வரும் பகுதியில் தொடங்கி கதை முற்றிலும் வேறு பாதையில் ஆன்மீக வழியில் பயணித்தாலும் அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

கதையில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக நிருபமாவின் பாத்திரப் படைப்பு - இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? என்று தோன்றினாலும், இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருப்பதை வரவேற்கிறேன். மேலும் அது செயற்கையாகவும் இல்லை.

பிரணவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அதிகம் விவரிக்காமல் திறமையாக கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

அமெரிக்கா முதல் கைலாசம் வரை அவர் பார்த்த இடங்கள் முதல் ராமானுஜரின் வாழ்க்கை, மல்லன் வில்லிதாசன் வரலாறு என்று ஆன்மீக தகவல்கள் வரை எல்லாவற்றையும் எந்தவித பிசிறும் இல்லாமல் அழகான மாலையாக் தொடுத்திருக்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தை தரும் புதினம்.


10 comments:

  1. இந்த நூல் பற்றி திருமதி வெங்கட் கூட பகிர்ந்திருந்தார் என்று நினைவு.

    ReplyDelete
  2. அப்போதும் நினைத்துக் கொண்டேன், இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்..  புத்தகம் தேடிப்பிடித்துப் படிக்க
    ​வேண்டும் என்று.

    ReplyDelete
    Replies
    1. புஸ்தகாவில் classics பிரிவில் இருக்கு

      Delete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்லதொரு நூல் விமர்சனம். கதையின் தொடக்கமே நன்றாக உள்ளது. சகோதரி ஆதி வெங்கட் அவர்களும் இந்தக்கதையை பற்றி சிறப்பாக விமர்சனம் செய்திருந்தார். நீங்களும் சிலாகித்து எழுதியுள்ளீர்கள். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. சமயமும், பொழுதும் கிடைத்து புத்தகத்தை படிக்க முடிந்தால் நல்லது. தங்களது சிறப்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. வாங்க கமலா, என்னுடைய முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் வரவில்லை. I missed you. ,உடம்பு சாதாரணமாக இருக்கிறீர்களா? வீட்ல எல்லோரும் நலம்தானே?

    ReplyDelete
  5. புத்தக விமர்சனம் அருமை. படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம்
    ஆதியோ, வெங்கட்டோ இந்த கதையை விமர்சனம் செய்து இருந்தார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி கோமதி அக்கா.

    ReplyDelete
  7. நல்லாருக்கு அக்கா.விமர்சனம்.

    வெங்கட்ஜி தளத்திலும் புத்தக விமர்சனம் வந்திருந்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenateswaranMay 3, 2026 at 2:15 AM

      நன்றி கீதா.

      Delete