கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, May 3, 2026

ஃபர்ஹானா

 ஃபர்ஹானா




சிறிய அளவில் செருப்புக் கடை வைத்திருக்கும் கிட்டி, அவரது மனைவி, மகள் ஃபர்ஹானா, மருமகன் கரீம், குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். வருமானம் போதவில்லை. ஒவ்வொரு மாதமும் பள்ளியில் பணம் கட்டாதவர்கள் லிஸ்டில் குழந்தைகளின் பெயர் வாசிக்கப்படுகிறது. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர ஃபர்ஹானா வேளைக்குச் செல்ல முடிவெடுக்கிறாள். அதில் அவள் தந்தைக்கு விருப்பம் இல்லை.

ஒரு வங்கியின் கஸ்டமர் சர்வீஸ் கால் சென்டரில் வேலைக்குச் சேரும் ஃப்ர்ஹானா அதே கால் சென்டரின் வேறு ஒரு பிரிவில் வேலை பார்ப்பவர்கள் அதிக இன்சென்டிவ் பெறுவதைப் பார்த்து, இன்சென்டிவிற்காக அந்த பிரிவுக்கு மாறுகிறாள். அது ஃப்ரண்ட்ஷிப் சாட் கால் சென்டர். சிநேகிதத்தை விரும்புகிறவர்கள் பேசுகிறோம் என்ற பெயரில் உள்ளாடைகளின் சைஸ் கேட்கிறார்கள். அதில் அவளோடு பேசும் ஒருவனோடு அவளுக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவளோடு பணி புரிந்த ஒரு பெண் கஸ்டமர்களோடு உறவு கொண்டு, ஒருவரோடு வெளியே செல்லும்பொழுது கொலை செய்யப் படுவதைபபார்த்த ஃபர்ஹானா பயந்து போய் தன் நட்பை முறித்துக் கொள்ள அவன் அவளை விடாமல் பயமுறுத்த தொடங்குகிறான். இதனிடையில் அவள் கணவனுக்கும் அவள் மீது சந்தேகம் வருகிறது. இவற்றை அவள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் மீதிக்கதை. 

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவள் கணவனாக ஜித்தன் ரமேஷ், வில்லன் பாத்திரத்தில் பெரும்பாலும் முகத்தை காட்டாமல் குரலால் மட்டும்(குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது) நடித்திருக்கும் செல்வராகவன், ஐஸ்வர்யாவின் அப்பாவாக கிட்டி நடித்திருக்கிறார்கள். அலுவலகத்தில் ஐஸ்வர்யாவின் தோழியாக வரும் பெண் உட்பட எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். 

மனைவியை சந்தேகிக்கும் பொழுதும், கடைசியில் "உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்குனு ஒரு தடவ கூட என்னிடம் சொல்லத் தோணல இல்ல" என்று மனைவியிடம் கேட்கும் பொழுதும் ஜித்தன் ரமேஷ் நிற்கிறார். அவருடைய அப்பாவி முகமும், குரலும் அந்த ரோலுக்கு பெரும் உதவி செய்திருக்கின்றன. 

குடும்ப அழுத்தம், வேலை தரும் விடுதலை, பின்னர் பயம் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் ஒரு இடத்தில் கூட தொய்வடையவில்லை. சிறப்பான திரைக்கதை மற்றும் இயக்கம்(நெல்சன் வெங்கடேசன்). இயக்குனர், இசையமைப்பாளர், காமிராமேன் எல்லோரும் பாராட்டுக்கிரியவர்கள்.

2023 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஒரு வேளை படத்தின் பெயர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என்பதால் கதாநாயகியை முன்னிறுத்தும் படமாக இருக்குமோ என்ற அச்சத்தில் பெரும்பான்மையோர் தவிர்த்திருக்கலாம். ஓ.டி.டி.யில் பார்க்க முடிந்தவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.  


16 comments:

  1. சுவையான கதையோட்டம்👏

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அதற்கு அந்த கதாசிரியருக்கு நன்றி கூறலாம்

      Delete
  2. எந்த OTT என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விட்டீர்கள் போல! தேடிக் கண்டுபிடித்தேன்! Sony Liv

    ReplyDelete
    Replies
    1. நன்றி... பா.வெ. மேடத்தை நம்பி இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். நல்ல நடிகைகளில் ஐ.ரா வும் ஒருவர்.

      Delete
    2. இந்த ஊரில் IP TV என்று ஒன்று உண்டு, நம் ஊர் கேபிள் டி.வி. போல. அதில் எந்த Ott என்று தெரியாது. Zee5 என்று நினைக்கிறேன்.

      Delete
  3. இப்படி ஒரு படம் என் கண்ணில் பட்டதா என்று நினைவில்லை.  ஆனால் கண்ணில் பட்டிருந்தாலும் பார்த்திருப்பேனா என்பதும் சந்தேகம்தான்!!

    ReplyDelete
    Replies
    1. நானும் பெயரையும், ஐஸ்வர்யா ராஜேஷின் படத்தையும் பார்த்து விட்டு, இரண்டு மூன்று தடவைகள் தாண்டிச் சென்று விட்டேன். ஒரு நாள் ஒழிக்கவேண்டும் படம் கண்ணில் பட்டு பார்க்க வைத்தது. பாணியிலிருந்து பார்த்தேன். நன்றாக இருக்கவே, அடுத்த நாள் முழு படத்தையும் பார்த்தேன்.

      Delete
    2. இந்த ஊரில் கேபிள் டி.வி.யில் டி.வி. என்று ஒரு option, மற்றும் வீடியோ க்ளப் என்று ஒரு option உண்டு. டி.வி.யில் லைவாகவும் நிகழ்ச்சிகளை பார்க்கலாம், 24×7 movies என்ற பிரிவில் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டே இருக்கும் அதையும் பார்க்கலாம்.
      வீடியோ கிளப்பில் தரவிறக்கம் செய்யப்பட்ட படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், சீரியல்ஸ், dubbed movies, movies with sub titles, latest movies, movie collection என்ற பல பிரிவுகள் உண்டு. அதனால் எந்த Ott என்று தெரியாது.

      Delete
  4. அப்படி இப்படி ஐஸ்வர்யா ராஜேஷும் தொடர்ந்து படங்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார் இல்லை?  அவரோடு அறிமுகமான வேறு சில நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இவர் நடிக்கும் படங்கள் நன்றாகவும் இருக்கும்.

      Delete
  5. மறந்துபோன கிட்டியையும், ஜீவாவின் அண்ணனையும் (கொஞ்சம் சடகோபன் ரமேஷ் போல இருப்பார்) இந்தப் படத்தின் மூலம் நினைவு படுத்தியிருக்கிறார்கள் போல..  

    ReplyDelete
  6. ஓ! இப்படி ஒரு படமா. ஸ்ரீராம் சொல்லலியே என்று பார்த்தேன். அவரும் மிஸ் செய்திருக்கிறார் அப்ப அந்தப் படம் அவ்வளவு பிரபலமாகலை என்று உங்கள் பதிவிலும் தெரிகிறது.

    கதைக்கரு நல்ல கரு. ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நடிக்கிறார். ஏதோ ஒரு படத்தில் சீன்கள் மட்டும் பார்த்ததில் தெரிந்தது. ஆனால் அவர் அத்தனை ஏன் பேசப்படுவதில்லை என்று தெரியவில்லை. லைம்லைட்டில். ஆனால் என் தனிப்பட்டக் கருத்தைக் கேட்டால், அது ஒரு வகையில் நல்லது என்று சொல்வேன். அவரும் அப்படியான இயல்பு என்றே தோன்றுகிறது. நடிப்பு பாராட்டப்பட்டால் போதும்.

    மீண்டும் கிட்டி, ஜித்தன் ரமேஷ் நடிச்சிருக்காங்க போல இவங்களும் அவ்வளவாக சமீப காலங்களில் பேசப்படவில்லையே.

    கதையைத் தெரிந்து கொண்டேன், பானுக்கா, நல்ல அறிமுகம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா, யூ ட்யூபில் கிடைக்கிறதா பாருங்கள்.

      Delete
  7. நல்லதொரு அறிமுகம். பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. எந்த ஓடிடி தளத்திற்கும் நான் செல்வதில்லை.

    ReplyDelete
  8. வாங்க வெங்கட். Ott இல் படம் பார்க்காத ஒரு சிலரில் நீங்களும் ஒருவரா?

    ReplyDelete