சாப்பிட வாங்க
அப்படியே பதில்சொல்லிட்டு போங்க
1. "We call this as four yards of coffee" Who? Why?
2. மணக்கும் மலரின் பெயர் கொண்ட இவர் சமையல் மணக்கும்,ருசிக்கும்.
3. தந்தை பாட்டு(கவிதை) படைத்தார், மகள் சாப்பாடு படைக்கிறார்.
4. பன், ப்ரெட் போன்றவற்றிர்க்கு ஆங்கிலேயரிடம் இருந்து வந்த வரவேற்பை உணர்ந்து கொண்ட மாணிக்கம் பிள்ளை ஒரு ரொட்டி கடை தொடங்க விரும்பினார். ஆங்கிலேயர்களை கவரும் வண்ணம் அதற்கு இந்த ஆங்கிலப் பெயரை சூட்டினார். இன்றைக்கும் சென்னையின் ஒரு முக்கியமான ரொட்டி கடை இது எது என்று தெரிகிறதா?
5. இவை சில உணவு பண்டங்களைப் பற்றிய குறிப்புகள், எவை எவை என்று கண்டு பிடியுங்கள்:
A). தீர்ப்பதற்கு மிகவும் கடினமானதை இதோடு ஒப்பிடுவார்கள்.
B). ஒரு ராஜபார்வை கவிஞர் இதை பெண்களின் விரல்களுக்கு ஒப்பிட்டிருக்கிறார்.
C). இது கூடவா தெரியாது? 'அழகுதான்' போங்கள்.
இதுக்கு கொஞ்சம் மூளை வேணும். கறிக்கடைக்கு போயிட்டு வர்றேன்.
ReplyDeleteரேவதி சண்முகம் தவிர்த்து மற்றவை தெரியலை! ஆகவே யாரானும் வந்து சொல்லட்டும், வந்து பார்த்துக்கறேன். :) மூளை வேலை செய்யலை! யாருங்க அது, இருக்கானு கூவறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteபாடாய்ப் படுத்துது கமென்ட் பொட்டி! :(
ReplyDelete2.ரேவதி சண்முகம்
ReplyDelete2 .மல்லிகா பத்ரினாத்
ReplyDelete3 கண்ணதாசனின் மகள் ரேவதி ஷன்முகம்
4 மெக்ரனெட்
5
a .பொரிவிளங்காய்
b
c.
1. இதற்குத்தான் யோசிக்கிறேன் எதுவா இருக்கும்னு. காஃபி பதிவு எழுதிய போது ஆஸ்திரேலியாவில் நைன் யார்ட்ஸ் என்று காஃபி கம்பெனியோ ஷாப்போ இருப்பதாக ஒரு வெப்சைட்டே இருக்கு....ஆனா இது என்ன என்று யோசிக்கறேன்...
5 வதில் முதல் சரியானு தெரியலை ஆனா அடுத்து 2, 3 தெரியலை யோசிக்கறேன் தெரிஞ்சா அப்புறமா வரென்...
பானுக்கா குமுதம் மாதிரி கிசு கிசு ஸ்டைல்ல கேக்கறீங்க ஹிஹிஹிஹி
கீதா
2,மல்லிகா பத்ரிநாத்
ReplyDelete3,ரேவதி ஷண்முகம் (இவர் சமையல் குறிப்பு புக் என் கணவர் எங்க கல்யாணமானதும் மூணே நாளில் ஸ்பென்சர்ஸ் பக்கத்தில் இருக்கே வி டி ஐ அதில் வாங்கி கொடுத்தார் :) ஆனா அதை நானா மெட்றாஸ்லேயே விட்டு வந்திட்டேன் )
4,எனக்கு அப்பா முந்தி சொல்வார் ஸ்மித் field பெஸ்ட் பேக்கரின்னு ஆனா நிறைய பிரெஞ்ச் இருக்கிறது ஹாட் ப்ரெட்ஸ்
இதில் எது தெரில
5, ல ஒன்னு வெண்டைக்கா :)
2. மல்லிகா பத்திரிநாத்
ReplyDelete3. கண்ணதாசன். ரேவதி ஷண்முகம்.
5 A ஜவ்வு (மிட்டாய்)
B பெண்களின் விரல்களை வெண்டைக்குதானே ஒப்பிடுவார்கள்.... ராபா கவிஞர் தேன்குழலுக்கு ஒப்பிட்டார்!
2. மல்லிகா பத்ரிநாத்
ReplyDelete3. கண்ணதாசன் - ரேவதி ஷண்முகம்.
மற்றவையும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
இந்த மாதிரி புதிர்களுக்கும் நமக்கும் வெகு தூரம்...
ReplyDeleteவாழ்க வளமுடன்...
இப்படி கேள்விகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை...!
ReplyDelete1. பெங்களூர் எம்.டி.ஆர்.இல் அவர்கள் சொந்த பிரதாபத்தை எழுதியிருக்கும் போர்டில் இதைப் பார்க்கலாம். ஆரம்ப காலத்தில் அவர்கள் கூர்கிலிருந்து காபி கொட்டை வரவழைத்து, அதை அவர்களே அரைத்து, ஃபில்டரில் டிகாஷன் போட்டு, காபி தயாரித்து, அதை நாலடி தூரத்திற்கு நுரை வர ஆற்றி, வெள்ளி டம்பளரில் , கொடுப்பார்களாம். அதனால் அதை, "we call it as four yards of coffee" என்று சொல்வார்களாம்.
ReplyDelete2. மல்லிகா பத்திரிநாத்
3. ரேவதி சண்முகம்
(இந்த இறந்து விடைகளையும் பெரும்பான்மையோர் கூறி விட்டார்கள்)
4. மெக்ரென்னட் (இதற்கு கீதா ரெங்கன் மட்டுமே சரியான விடை சொல்லியிருக்கிறார்கள்) பிடியுங்கள் ஒரு பூங்கொத்து!
5.
a). இடியாப்பம் (இடியாப்ப சிக்கல் என்று கூற மாட்டார்களா?)
b). தேன்குழல் (ராஜ பார்வை படத்தில் வரும் "அழகே அழகு தேவதை.." என்னும் பாட்டில் "மூங்கிலே தோள்களோ, தேன்குழல் விரல்களோ.." என்று வரும். இதை ஸ்ரீராம் மட்டும் சரியாக சொல்லியிருக்கிறார்) உங்களுக்கும் ஒரு பூங்கொத்து.
c). மனோகரம். மோகன்லாடு கூட சரிதான்.
வருகை தந்தவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி.