கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 20, 2019

மசாலா சாட்

மசாலா சாட் 


படித்தவைகளில் பிடித்தவை:


*பிரசவத்திற்கு இலவசம் என்று   எழுதப்பட்ட ஆட்டோக்களை பார்த்திருப்போம். பிரசவமே இலவசமாக பார்க்கப்படும்  என்கிறார் புனேயைச்சேர்ந்த ஒரு மருத்துவர். ஒரே ஒரு கண்டிஷன் பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்த பட்சத்தில் பிரசவக்கட்டணம் மட்டுமல்ல, முழு மருத்துவ செலவுகளும் இலவசம். இதைச் செய்பவர் புனேயை சேர்ந்த டாக்டர் கணேஷ். இதற்கு இவர் சொல்லும் காரணம், பெண் சிசுக்கொலை தடுக்கப்பட வேண்டும் என்பது.

"பெண் சிசுக்கொலைகளால் இன்று ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு தொள்ளாயிரத்து பதினான்கு பெண்களே இருக்கின்றார்கள். ஒரு ஆஸ்பத்திரியில், "ஒரு நோயாளி இறந்து விட்டான்  என்று சொல்வதை விட,  கடினமான செயல் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்வது. ஆண் குழந்தை பிறந்தால் குடும்பமே அதை கோலாகலமாக கொண்டாடும், ஆனால் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் அத்தனை பெரும் வெளியேறி விடுவார்கள்" என்று கூறும் இவர் தன் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறகும் பொழுதெல்லாம்,  குடும்பத்தினர் அந்த குழந்தையை கொண்டாடும் விதமாய் கேக் வெட்டி, பிறந்த நாள் பாட்டு பாடி  உலகிற்கு அந்த குழந்தையை வரவேற்க ஏற்பாடு செய்கிறாராம். இதுவரை அவர் மருத்துவமனையில் 464 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனவாம். வாழ்க நீ எம்மான்! என்று வாழ்த்த தோன்றுகிறது. 

#இது ஒரு வகை என்றால், இன்னொரு அசத்தல் செய்தி சிந்து என்னும் சிறுமியைப் பற்றியது. சோளிங்கர் திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ அருட்சாய் மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியான சிந்து என்னும் மாணவி கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டுகளின் நிறம் மற்றும் அதில் உள்ள எங்களை சரியாக சொல்கிறாளாம். மேலும் புத்தகத்திற்குள் என்னென்ன தலைப்பில் பாடங்கள் உள்ளன என்பதையும் தெரிவிக்கிறாளாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? மூன்றாவது கண், அல்லது ஃபோகஸ் மைண்ட் என்னும் பயிற்சிதான் காரணமாம். 

மனதை ஒரு நிலைப்படுத்தும் பயிற்சி போன்ற இது மூன்று கட்டங்களை கொண்டதாம். முதலில் கண்களைக் கட்டிக்கொண்டு, தொடுதல்,வாசனை, சப்தம் இவை மூலம் ஒரு பொருளை உணரும் பயிற்சி, பிறகு ஒரு பேப்பரில் நாம் எழுதினால், அதை அப்படியே வாசிக்கும் பயிற்சி, இதைக் கடந்தால், சிறப்பு பயிற்சி, அதில் கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகள் அளிப்பார்களாம். 

இதில் சேரும் சிலர் தொடர முடியாமல் பாதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்களாம், காரணம் இந்த பயிற்சி எடுக்க சில நிபந்தனைகள் உண்டு, முதலாவது, அசைவம் சாப்பிடக் கூடாது, இரண்டாவது தொலைக்காட்சி பார்க்கக்கூடாது, மூன்றாவது மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம் இல்லையா?

அடுத்த செய்தி அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வாட்ஸாப்பில் வந்து கொண்டிருக்கிறதே. எ.பி. வாட்சாப்பிலும் வந்தது. இருந்தால் என்ன? நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லவதில் தவறில்லையே?

பால் கவர்களை கட் பண்ணும் முறை பற்றிதான்.

நாம் சாதாரணமாக கட் பண்ணுவது போல் மூலையில் கட் பண்ணி அந்த சிறு துணுக்கை கீழே போடும்பொழுது அது டன் கணக்கில் சேர்ந்து விடுகிறதாம், அழிப்பதும் கடினமாம் எனவே அப்படி செய்யாமல் நீள் வாக்கில் கேட் பண்ணுங்கள் என்கிறார்கள். இதை நாம் பால் பாக்கெட்டுகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா பிளாஸ்டிக் கவர்களுக்கும் பின்பற்ற வேண்டும்.

தவறான முறை











சரியான முறை 



 வாட்ஸாப்பில் வந்தது:


28.3.19 தேடியிட்ட குமுதம் சிநேகிதியில் வெளியாகியுள்ளது.
# பிப்ரவரி 16-28 மங்கையர் மலரில் வெளியாகியுள்ளது.

21 comments:

  1. புனே மருத்துவருடைய சேவை மகத்தானது பாராட்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. புனே மருத்துவருடைய சேவை பாராட்டத்தக்கது.

    அந்தச் சிறுமியின் திறமை மிகவும் வியக்க வைக்கிறது. கண்முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்ததே மறந்து போகிறது எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டால் ஞாபகம் வரும். நன்றி!

      Delete
  3. மசாலா 'chat'ஐ ரசித்தேன்.

    //ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு தொள்ளாயிரத்து பதினான்கு பெண்களே // - இதைவிடக் கொடுமை, ஜாதியினால் பிரிந்துகிடக்கும் சமுதாயத்தில், சில பல ஜாதிகளில் பெண் குழந்தைகள் மிக மிகக் குறைவு. இப்போல்லாம், 'பெண்'ஐத் தேடுகின்றவர்களைக் காண முடிகிறது.

    இந்தக் காணொளி பார்த்த பிறகும், நான் கவரைக் கட் செய்யும் பாணியை மாற்றவில்லை. எல்லாம் பழக்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
    2. நான் இப்போதெல்லாம் கான்ஷியஸாக கவரை நீட்ட வாக்கில் கட் பண்ணுகிறேன். அதை பழகிக்கொள்ள வேண்டியதுதான்.

      Delete
  4. சிறப்பான மசாலா சாட்.

    கவரை கட் செய்யும் காணொளி - நிறைய முறை வந்து விட்டது சில தினங்களில்.

    புனே மருத்துவரின் சேவை சிறப்பானது.

    ReplyDelete
  5. புனே மருத்துவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .அதெப்பிடிக்கா போனை பார்க்காமல் இருக்க முடியும் :) மகள் ஸ்கூல் விட்டு வர 5 நிமிஷம் லேட்டானாலும் கை போனுக்குத்தானே தாவும் .பால் கவர் இங்கில்லை ஒன்லி water tight paper containers மில்க் கார்ட்டன்ஸ் தான் .
    உள் மடிப்பு வைத்த கவர்களை அதிகவனமா வெட்டணும் இல்லைன்னா அதுவும் பொருளோடு கூட விழும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், உங்களுக்கு மொபைல், எனக்கு டி.வி. காலையில் எழுந்ததுமே ஆன் பண்ணிவிடுவேன். ப்ளாக் எழுதும் போதும் அது பாட்டுக்கு பின்னணி இசை போல ஓடிக் கொண்டிருக்கும். சில சமயம் என் கணவர்," நீ பார்கவில்லை, டி.வி. ஐ நிறுத்தி விடவா என்பார், "நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்பேன்.

      Delete
  6. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும் எவ்விதக் கட்டணமும் வேண்டாம் என்று சொல்லும் திரு டாக்டர் கணேஷ் அவர்கள் மகத்தானவர்...

    இவரைப் போல பலரும் இருப்பார்களேயானால் பெண்குலமே வாழ்த்தும்...

    மற்ற செய்திகளுடன் இந்தப் பதிவு அருமை.. அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  7. புனே டாக்டர் கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    சிந்து அவர்கள் திறமை வியப்பு... அந்த நிபந்தனைகள் கொஞ்சம் கஷ்டம் இல்லை, நிறையவே....!

    மற்றவையும் சிறப்பு...

    ReplyDelete
  8. புனே டாக்டர் கணேஷ் வாழ்க!! வளர்க அவரது பணி! பாராட்டுகள் வாழ்த்துகள் அவருக்கு.

    சிறுமி சிந்து வியக்க வைக்கிறார். இதை நான் கேள்விப்பட்டுள்ளேன். எங்கள் வீட்டில் ஒருவர் அதைச் செய்ததையும் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒருமுகப்பயிற்சி. பங்களூரில் இருக்கும் மிகப்பெரிய ஆசிரமத்தில் அது சொல்லிக் கொடுக்கப்படுகிறது அது செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது...ஆனால் விதிமுறைகள் ஹிஹிஹிஹி...கொஞ்சம் கஷ்டம்தான்.

    பால் கவரை நான் இப்போது இப்படித்தான் கட்செய்கிறேன் தொடங்கிவிட்டேன்...!!

    எல்லாச் செய்திகளுமே அருமை பானுக்கா

    கீதா

    ReplyDelete
  9. //எங்கள் வீட்டில் ஒருவர் அதைச் செய்ததையும் பார்த்திருக்கிறேன்.// great!
    பால் கவர் மட்டுமல்ல, எல்லா பிளாஸ்டிக் கவர்களையும். நன்றி கீதா

    ReplyDelete
  10. //நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம் இல்லையா?//

    கொஞ்ச நஞ்சக் கஸ்டமில்லை ... குஸ்டமோ குஸ்டமாக்கும் ஹா ஹா ஹா..

    வாட்சப் ஊசிக்குறிப்பு அருமை.

    ReplyDelete
  11. வாங்க அதிரா. ஹாஹா! நன்றி.

    ReplyDelete
  12. தெரிஞ்சோ, தெரியாமலோ நான் எல்லா சாமான்கள் வரும் கவர்களையும் நீள வாக்கிலேயே கட் செய்து எடுப்பேன். கவர்கள் திரும்பப் பயன்படுத்தும் வகையில் எடுப்பேன். ஸ்டாப்லர் பின் இருந்தால் பின்னை எடுத்துட்டுக் கவரைத் திறப்பேன். ஆகவே பால் கவர் கட் செய்தாலும் ஓரத்தில் செய்யும் வழக்கம் வராதுனே நினைக்கிறேன். ஹிஹிஹி, நாங்க தான் பாக்கெட் பால் வாங்கறதே இல்லையே! :)))))

    ReplyDelete
  13. புனே மருத்துவர் பற்றி ஏற்கெனவே படிச்சேன். அந்தச் சிறுமியின் கண்கட்டு வித்தை ஆச்சரியம்.

    ReplyDelete