கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 21, 2023

மாவீரன் (சினிமா விமர்சனம்)

 மாவீரன் (சினிமா விமர்சனம்)


சிவகார்த்திகேயனின் பரம ரசிகையான என் பேத்தியின் ஆசையை நிறைவேற்ற அவளை மாவீரன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். 

தினத்தீ என்னும் செய்தி தாளில் அறுபது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் மாவீரன் என்னும் தொடருக்கு படம் வரையும் சத்யா (SK) என்னும், யார் வம்புக்கும் போக விரும்பாத இளைஞன் எப்படி நிஜமாகவே மாவீரனாக மாறுகிறான் என்பதுதான் கதை.

சேரியில் வசிக்கும் பல குடும்பங்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றுவதாக கூறி ஆளும் கட்சியின் அடியாட்கள் வெளியேற்றுகிறார்கள். புது வீடு பார்க்க நன்றாக இருந்தாலும் குடியேறிய சில நாட்களிலேயே பாத்ரூம் தாழ்ப்பாள் கையோடு வருகிறது. சமைக்கும் பொழுது சாம்பாரில் மேல் சுவற்றிலிருந்து பூச்சு விழுகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வீறு கொண்டு எழும் தாயை அடக்குகிறான். தங்கை குளிக்கும் பொழுது பாத்ரூமில் எட்டிப்பார்ப்பவனை கண்டிக்கும் தாய் தாக்கப்படும் போது அம்மாவின் இழிவான பேச்சால் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது காதில் அடிபட, அவனுக்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கத் துவங்குகிறது என்னும் ஃபேண்டஸி கதைதான். அதை ரசிக்கும்படி செய்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் பலம்.

சிவகார்த்திகேயன் கச்சிதம். அவருடைய ஜோடியாக வரும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அசப்பில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதியை நினைவூட்டுகிறார். நிறைவான நடிப்பு. எஸ்.கே.யின் தங்கையாக வரும் பெண், பாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மாவாக சரிதா. எத்தனை நாட்களாயிற்று இவரைத் திரையில் பார்த்து? சரிதாவிடமிருந்து நடிப்பு பிரவாகமாக பொங்கி வரும், அதை கண்ட்ரோல் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இயக்குனருக்குத் தெரிந்திருக்கிறது.‌ 

நடிக்க வந்திருக்கும் மற்றொரு இயக்குனர் மிஷ்கின்! இத்தனை நாட்களாக ஸ்டைலிஷாக நாம் பார்த்திருந்த மிஷ்கின் கதர் வேஷ்டி, சட்டை, காட்சியோடு அரசியல்வாதி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. காதில் பூ தான், வாசமும் இருக்கிறது.

 





15 comments:

  1. வாராந்தரிகளில் வரும் விமர்சனம் போல கச்சிதமாக நிறுத்தி விட்டீர்கள்.  SK படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்கும் அளவு பொறுமை எனக்கில்லை.  OTT யிலேயே யோசனை செய்துதான் பார்ப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. பேத்திக்காக என்று எழுதியிருந்தேனே? நாட் பேட்!

      Delete
  2. வாராந்தரிகளில் வரும் விமர்சனம் போல கச்சிதமாக நிறுத்தி விட்டீர்கள்.  SK படத்தை எல்லாம் தியேட்டரில் பார்க்கும் அளவு பொறுமை எனக்கில்லை.  OTT யிலேயே யோசனை செய்துதான் பார்ப்பேன்.

    ReplyDelete
  3. விரைவில் சன் தொலைக்காட்சியில்...(!)

    ReplyDelete
  4. மாவீரன் SK படமா...குழம்பிவிட்டேன். இடையில் உதயநிதி நடித்து ஒரு படம் வந்ததே அதோடு சேர்த்து...அப்ப இதில்தான் வடிவேலு பாடியிருக்காரோ?

    வேறு எதுவுமே சொல்லலியே பானுக்கா? டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி இயக்கம் பற்றி...இயக்குநர் பேர் இல்லையே என்று கூகுள் செய்து பார்த்தால் பெயரே மனதிற்குள் நுழையவில்லை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உதயநிதி வடிவேல் நடித்தது மாமன்னன் படம் மேடம்.
      இது சிவகார்த்திகேயன் நடித்தது. அதிதி ஶங்கற் பாடியும் இருப்பார்.

      Delete
    2. நன்றி கீதா. டெக்னிகல் விஷயங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஓஹோ என்று இல்லை.

      Delete
  5. ஏற்கனவே வைத்த தலைப்பில் மீண்டும் பெயர் வைப்பது என்ன வகை என்பது எனக்கு புரியவே இல்லை.

    இவர்களுக்கு தலைப்பு வைக்கும் யோசனைகூட வராதவர்கள் எப்படி புதிதாக கதை எழுத முடியும் ?

    கதையும் அரைத்த மாவைத் தான் அரைக்கிறார்கள். நான் பார்க்கவில்லை, பார்க்கவும் போவதில்லை.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மாவீரன் திரை விமர்சனம் நன்றாக செய்துள்ளீர்கள். படம் பார்க்கும் எண்ணம் வருகிறது. முன்பு போல திரையரங்கிற்கு செல்ல முடியவில்லை. வீட்டிலிருந்தபடியே ஏதாவது தனியார் சேனலில் முடிந்தால் பார்க்கலாம்.டி. வி சேனல்கள் கனெக்ஷனையும் வீட்டில் எடுத்து விட்டார்கள். முடியும் போது பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதான் எல்லா படங்களும் விரைவில் தொலைகாட்சியில் வந்து விடுகின்றனவே? நன்றி.

      Delete
  7. அரைத்த மாவை அரைத்தாலும்
    கரைத்த மாவை அரைத்தாலும்
    புளித்த மாவு..

    எதையாவது அரைத்து விட்டுப் போகட்டும்..

    நமக்கு ஒரு நட்டமும் இல்லை,!..

    ReplyDelete