திருவெம்பாவை -10
கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, December 25, 2021
திருவெம்பாவை -10
Friday, December 24, 2021
திருவெம்பாவை - 9
திருவெம்பாவை - 9
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
Thursday, December 23, 2021
திருவெம்பாவை - 8
திருவெம்பாவை - 8
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
Wednesday, December 22, 2021
திருவெம்பாவை - 7
திருவெம்பாவை - 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
Tuesday, December 21, 2021
திருவெம்பாவை - 6
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
Monday, December 20, 2021
திருவெம்பாவை பாடல் - 5
திருவெம்பாவை - 5
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
Sunday, December 19, 2021
திருவெம்பாவை பாடல் 4
Saturday, December 18, 2021
திருவெம்பாவை - 3
திருவெம்பாவை - 3
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
Friday, December 17, 2021
திருவெம்பாவை பாடல் 2
திருவெம்பாவை பாடல் 2
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
Thursday, December 16, 2021
திருவெம்பாவை - 1
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
Tuesday, December 14, 2021
பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)
பார்ப்பது, கேட்பது, படிப்பது(தொடர்ச்சி)
நான் இங்கே வருவதற்கு முன் என் மகன் இந்திரா நூயி எழுதிய மை லைஃப் இன் ஃபுல் என்ற புத்தகத்தை அமேசானில் வரவழைத்தான். ஊருக்கு வருவதற்கு முன் அதை படித்து விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. இந்திரா நூயி பெப்ஸி கோவின் சிஇஓ வாக ஆவதோடு நிறுத்தி இருந்தேன்.
Monday, December 13, 2021
பார்ப்பது, கேட்பது, படிப்பது
Friday, December 10, 2021
காணொளி காணீர்.
இந்த பதிவில் இரண்டு காணொளிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே என்னும் பழமொழிக்கான விளக்கம். மற்றது என் மாமா மகன் நடித்திருக்கும் குறும்படம்.
https://www.youtube.com/watch?v=bpgvrRhmKFU
Monday, December 6, 2021
கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அழகு உண்டு அந்த பிராந்தியத்திற்கு என்று விசேஷமான பண்டிகைகள் உண்டு. அது வரும் சமயத்தில் அந்த இடத்தின் பொலிவு அதிகமாகிவிடும். பொங்கல் என்றால் கிராமங்களில்தான் அதன் அழகை பார்க்க முடியும் நாங்கள் திருச்சியில் இருந்த வரை தீபாவளி கடைத் தெருவை பார்ப்பதற்கென்றே ஒருமுறை சின்ன கடை வீதி பெரிய கடை வீதி எல்லாம் சுற்றி விட்டு வருவோம். சென்னையிலும் விண்டோ ஷாப்பிங் செய்யவே டி.நகர் சென்றிருக்கிறோம். ஊரே ஜொலி ஜொலிக்கும். ஓமானில் ரமதான் வருகிறது என்றால் அந்த ஊரின் தோற்றமே மாறிவிடும். ஒரு ஃபெஸ்டிவல் மூடு வந்து விடும். கடைகள் எல்லாம் இரவு பதினொன்றரை திறந்திருக்கும். பூங்காக்களும் அப்படியே. நிறைய பேர் இரவு பூங்காக்களுக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்தி விட்டு மெல்ல வீடு திரும்புவார்கள். அதைப்போல இப்பொழுது இங்கு கனடாவில் கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஊர் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. அதன் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு
![]() |
![]() |
| பனிக்கட்டி சிற்பங்கள் |
Friday, December 3, 2021
பெயரில் என்ன இருக்கிறது?
வாசகத்தை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. ராஜரத்தினம், புகழேந்தி என்ற ஆண் பெயரைக் கொண்ட பெயரைக் கொண்ட பெண்களும், சிந்து,தேன்மொழி என்றெல்லாம்
பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக் கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்கள் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும்
வெளிப்பட்டன.
ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த தன் பெற்றோர் மீது வெறுப்பு வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர் நீயா நானாவின் நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை வைத்து அவர் தென் இந்தியரா, வட இந்தியரா என்று கணிக்க முடியும். ஏன் தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின் எந்த பகுதியைச் சார்ந்தவர், எந்த குலத்திர்க்குரியவர் என்றெல்லாவற்றையும் அறிந்து கொண்டுவிட முடியும்.
குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள். மாது என்னும் மாத்ருபூதம், சுகந்தா/சுகந்தி, ஜம்புநாதன், அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு உரியவை. சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள் லால்குடி வட்டத்தில் உண்டு. காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள் நெல்லை மாவட்டதிற்குரியவை என்று சொல்லத் தேவை இல்லை.
தாங்கள் வைணவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?
உறவில் ஒரு குழந்தைக்கு இவியான் என்று பெயர். கூகுளில் தேடி வைத்திருக்கிறார்கள். இவியான் என்றால் சிவா என்று பொருளாம். நமக்கு இவியான் என்றால் வைட்டமின் இ மாத்திரைதான் நினைவுக்கு வரும். நிகிதா என்றால் ரஷ்ய மொழியில் 'சாந்தி' என்று பொருளாம், அதனால் தன் மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார். சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று பெயர் வைப்பதாக தெரியவில்லை. ஏன் நாம் வட இந்திய பெயர்களை ஸ்வீகரித்திருக்கும் அளவிற்கு அவர்கள் செய்வதாக தெரியவில்லை. நாம்தான் நம் அடையாளங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம்.
எனிவே, ஒரு ஜோக்கோடு இதை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். அருணஜடை என்னும் வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு நண்பர் சொன்ன ஜோக் இது.
Monday, November 29, 2021
நயாகரா
நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ், அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெய்ல் ஃபால்ஸ் என்னும் மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது. நீர் வரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் ஒரு வினாடிக்கு 225,000 க்யூபிக் ஃபீட் நீர் விழுமாம். சராசரியாக 85000 கியூபிக் ஃபீட். இந்த நீர்நவீழ்ச்சியின் பெரும் பகுதி கனடாவிலும், சிறு பகுதி அமெரிக்காவிலும் இருக்கிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ பிரிட்ஜ் என்னும் ஒரு பாலம் இணைக்கிறது. இங்கிருக்கும் நீர்மின் நிலையம் கனடாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
அதுவும் சனியன்று நயாகரா செல்லலாம் என்று காலை பதினோரு மணிக்குத்தான் முடிவெடுத்தோம். எனவே நினைத்தது போல் சீக்கிரம் கிளம்ப முடியவில்லை. நயாகராவை அடைந்த பொழுதே மாலை ஐந்து மணி ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் மாலை நாலரைக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஐந்து மணிக்கு நல்ல இருட்டாகி அங்கு விளக்கு அலங்காரங்கள் ஒளிரத் தொடங்கி விட்டன. அருவிக்கு அருகில் வாண வேடிக்கைகளும் தொடங்கி விட்டன.
அருவியை அருகில் சென்று பார்த்தோம். வழியெங்கும் விளக்கு அலங்காரங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்ள ஸ்டாண்டுகள்.
Friday, November 26, 2021
தி.ஜானகிராமன் நூற்றாண்டு.
இலக்கிய வெளி ஆசிரியர் திரு. அகில் அவர்களுக்கு நன்றி.






































